நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் ஜனாதிபதி அஹமத் நஜாத். ஆனால், தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் மதத் தலைவர் கொமைனி.
Wednesday, March 7, 2012
ஈரானிய பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் தோல்வி!!!
படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றும் குற்றச்சாட்டு
ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் டமஸ்கஸ் அரசாங்கம் மேற்கொள்ளும் படுகொலைகளுக்குத் துணைபோகின்றன. அதில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர் என சிரிய இஹ்வான்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"எமது மக்கள் மீது ஈவிரக்கமின்றி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகளுக்கு ஈரானும் ரஷ்யாவும் சீனாவும் நேரடிப் பொறுப்பாளிகள் என்றே நாங்கள் கருதுகிறோம்" என சிரிய இஹ்வான்களின் பேச்சாளர் ஸுஹைர் ஸாலிம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்
சிரியா: உலக அதிகாரச் சமநிலையில் மாற்றம்!
சிரியா மத்திய தரைக்கடலில் லெபனான்,துருக்கி, ஈராக், ஜோர்தான்,இஸ்ரேல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட நாடு. உத்தியோகபூர்வ கணிப்பின்படி 74% சுன்னி முஸ்லிம்களும் 12% அலவி ஷீஆக்களும், 9%கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர்.
1946 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல இராணுவப் புரட்சிகளை சந்தித்து வந்த சிரியாவில், 1971 ஆம் ஆண்டிலிருந்து2000 ஆம் ஆண்டு வரை ஹாபிஸ் அல் அஸத் என்பவர் ஜனாதிபதியாக இருந்தார். தற்போது அவரது மகன் பஷர் அல் அஸத் பதவி விலக வேண்டும் எனக் கோரி மில்லியன் கணக்கான மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதர்அத்னான்:இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம்!
ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மரணம் வரை நீதிக்காக போராடுவேன்! – ஸாகியா ஜாஃப்ரி உறுதி!
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலையின் போது கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தனது 73-வது வயதிலும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார். மரணம் வரை போராடுவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் உள்ளார்.
வழக்கை குறித்தும், நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை குறித்தும் மாத்யமம் நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மேலும் பல முக்கிய ஆவணங்களை, சிறப்பு கோர்ட்டில் நேற்று, சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடக்கிறது. நேற்று விசாரணை துவங்கியதும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.சிங், இந்த வழக்கு தொடர்பான மேலும் சில முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வது தொடர்பாக மனு அளித்தார். இதற்கு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உ.பி.,யில் முலாயம்சிங் ஆட்சி; பஞ்சாப்- கோவாவில் பா.ஜ., ஆட்சி ; மணிப்பூர் காங்.,
புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதில் உ.பி., யில் முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்கு கிறது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.இதில் பஞ்சாப், கோவா மாநிலங்களில் முழுமையாக வெளிவந்துள்ளது. மணிப்பூர், உத்தர்கண்ட், உ.பி., மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் வெளி வர வேண்டியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் உ .பி.,மாநிலத்தில் ஆளும் கட்சியான பகுஜன்கட்சி ( மாயாவதி ) அதிக இடங்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 220 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. ஆளும் மாயாவதி கட்சி ( 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுது , பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!
அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.
இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.
இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.
இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:
இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.
தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?
பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.
வெளிநாடு செல்பவர் கவனத்திற்கு!
சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம்(?) என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது "பாஸ்போர்ட்" எடுப்பதற்கே !
"பாஸ்போர்ட்" எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக் கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.
கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரியின் வாழ்வு!!!
இஸ்லாமும் அறிவியலும்: கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரியின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன் கொசுவின் ஆற்றலை நாம் மதிப்பிட முடியாவிட்டாலும் அது ஒரு பறக்கும் பூச்சி இணம் என்று மட்டுமே அறிந்து வந்த நமக்கு. கொசுவின் முதுகில் இன்னொரு உயிர் இணம் வாழ்கிறது. அது எதற்க்காக கொசுவின் மேல் உள்ளது என்று அறிய முடிய வில்லை என்று மானவர்களுக்கு பாடம் எடுத்தார் அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா? إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.