சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூட பாராமால் தாக்கி பின்னர் பெண்களிடம் செருப்படி வாங்கி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சில இந்து முன்னனி நிர்வாகிகள்.
தற்போது இது தொடர்பாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கும் இந்து முன்னனி கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை கலவரக்காரர்கள் என்றும் தங்களை அப்பாவிகள் என்று கூறியுள்ளது. மத்திய மாநில குழுவிடம் ஆதரவு கடிதத்தை கொடுக்க வந்த இந்து முன்னனியினரிடம் வேண்டுமென்றே அணு உலை எதிர்ப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார்கள் என்றும் கூறுகிறது. காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு இந்து முன்னனியினரை கைது செய்துவிட்டதாகவும், உடனே முதலைமைச்சர் இதில் தலையிட்டு இதனை தீர்த்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.