Sunday, March 25, 2012
ஆபாச பட சர்ச்சை - காங்கிரஸ் வெளியிட்டது புதிய வீடியோ !!
Wednesday, March 7, 2012
உ.பி.,யில் முலாயம்சிங் ஆட்சி; பஞ்சாப்- கோவாவில் பா.ஜ., ஆட்சி ; மணிப்பூர் காங்.,
Wednesday, October 26, 2011
உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!
Wednesday, August 24, 2011
ஜன் லோக்பாலை முழுவதுமாக ஏற்க முடியாது - பாஜக!
சங்கர்ராமன் கொலை வழக்கு! நீதிபதியிடம் ஜெயேந்திரர் பண பேரம்!!
Wednesday, August 10, 2011
சுவிஸ் வங்கியில் என் கணக்கில் ரூ. 35 ஆயிரம் கோடியா?: இல்லை என்கிறார் கருணாநிதி!
சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவையே என்ற தலைப்பிட்டு விக்கிலீக்ஸில் வெளியானதாகக் கூறி கடந்த சில நாள்களாக மின்னஞ்சல்கள் மூலம் பட்டியல் ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. அதில், கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாகவும் கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்பட்டடிருந்தது. இந்த நிலையில் அதை மறுத்த கருணாநிதி, தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும்.
தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது. புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.
இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
Monday, August 8, 2011
என் சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவையே: மு.க.அழகிரி
தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.
என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன். இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
Thursday, August 4, 2011
தி.மு.க. கூட்டணியை விட்டு திருமாவளவனும் விலகுகிறார்!
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி உலகத் தமிழர்களின் கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கையெழுத்துகளை வாங்கி அவற்றை ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் பழனிமுத்து தலைமையில் வெள்ளிக் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியது வருமாறு:
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடமும் அதுபற்றி பேசியிருக்கிறேன்.
தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பா.ம.க. தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பா.ம.க. அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, July 28, 2011
சிதம்பரம்! பதவி நிரந்தரம்?
Saturday, July 16, 2011
ஆ.ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை!
ஆ. ராசா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் சித்தர்த பெருவா மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றின் அதிகாரி கெளதம் தோஷி ஆகியோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ளோரிடம் திங்கள் கிழமையன்று விசாரணை செய்ய சிபிஐக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
சிபிஐ மீண்டும் எதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்பதை எங்களுக்கு அறியத் தர வேண்டும் என்ற தோஷியின் வழக்கறிஞரின் வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
Sunday, July 3, 2011
அழகிரி, மம்தா மோசமான அமைச்சர்கள் ...
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.
புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..
திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Tuesday, June 14, 2011
தயாநிதி மாறனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - ஜெயா கோரிக்கை!
Monday, May 9, 2011
கனிமொழியைக் காப்பாற்ற ராசாவை பலி கொடுப்பதா? - கிருஷ்ணசாமி கண்டனம்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர்,
Thursday, May 5, 2011
ஆ.ராசா இருக்கும் சிறையில் சுரேஷ் கல்மாடி.
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகள் வழக்கில் கைதாகியுள்ள காமன்வெல்த் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து திஹார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட விஐபிக்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் கல்மாடியும் அடைக்கப்படுகிறார். அங்கு 14 நாள் சிறைக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கல்மாடி உள்ளிட்ட 3 பேர் நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையி்ல ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 18ம் தேதி வரை அனைவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சர்மா உத்தரவிட்டார்
'ஸ்பெக்டரம்' - பொதுக் கணக்குக் குழு அறிக்கை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்த பொதுக் கணக்குக்குழுவின் அறிக்கை சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி அந்த அறிக்கையை மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறார். பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியின் பணிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஜோஷி வலியுறுத்தியுள்ளார். அந்தக் குழு தயாரித்த வரைவு அறிக்கையில், பிரதமர் அலுவலகம் மீதும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தது. கசியவிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாயின. காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் எதிர்ப்பு
அதற்கு முன்னதாக நடந்த கடும வாக்குவாதத்தை அடுத்து, கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு வெளியே சென்றார் ஜோஷி. அந்த அறிக்கை சட்டப்படி செல்லாது என்று கூறப்படும் நிலையில், அதை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்திருக்கிறார் ஜோஷி. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும், அவரது முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், பிரதமரைப் பற்றி அறிக்கையில் குறிப்பிடுவதை காங்கிரஸார் விரும்பாததால் தான் பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்கள் என்று ஜோஷி குற்றம் சாட்டினார். இவ்வளவு பெரிய முறைகேடு தொடர்பான அறிக்கையை சீர்குலைக்க முயல்வது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றார் ஜோஷி. | ||||||||
அமலாக்கப்பிரிவு சம்மன்:கனிமொழியுடன் கருணாநிதியும் உடன் செல்வார்...

2G அலைக்கற்றை ஒதுக்கீடு முறைக்கேடு குறித்த வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியை நீதிம்னறத்தில் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குத் துணையாக கருணாநிதியும் டெல்லிக்குச் செல்வார் என்று தெரிகிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் 20% பங்குதாரரான கனிமொழி எம்.பி. 2G ஊழலில் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என்று CBI தாக்கல்செய்த துணைக் குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மே-1 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் கனிமொழி கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல்கள் பரவியுள்ள நிலையில் மத்திய அமைச்சரும் சகோதரருமான மு.க.அழகிரி நேற்று ஏற்கனவே டெல்லிக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கனிமொழியை தனது மகள் என்று பார்க்காமல் கட்சி விசுவாசி என்று கருதவேண்டும் என்று கருணாநிதி பேசியிருந்தார். கனிமொழி எம்.பி.டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது உடனிருப்பதன்மூலம், உடனடியாகக் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என்பதற்காகவே முதல்வர் கருணாநிதியும் உடன் செல்ல வேண்டியுள்ளது என்பதாகச் சொல்லப்பட்டாலும், ஏற்கனவே அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்று விட்டதால், தனியாகக் கைது செய்யப்படவேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கனிமொழிக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என்று அறிவாலய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ராசாவுக்கு ஆதரவாக ஆஜராக ஜெத்மலானி மறுத்து விட்டதைத் தொடர்ந்து பிரபல திமுக வழக்கறிஞர் ஷன்முக சுந்தரம் ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2G வழக்கை சட்டப்படி சந்திப்பதற்காக திமுஅ தரப்பிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஏற்கனவே முகாமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொல்றாங்கோ..! கொல்றாங்கோ..?
கடந்த முறை அதிமுக ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது 1991-96 வரை அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் அனைத்து அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனால் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்ததோடு இனிமேலும் அதிமுகவில் தொடர்ந்தால் வழக்குகள் பாயும் என்ற பயத்தில் முன்னாள திமுக அமைச்சர்கள் சிலர், தி.மு.கவில் தஞ்சம் புகுந்தனர். மேலும் சிலர், அரசியலில் இருந்து, "வேணாம்டா சாமி, விட்டால் போதும்' என்று ஒதுங்கி வழக்குகளிருந்து தப்பித்தனர். திமுக அரசு பதிவு செய்த வழக்குகள் காரணமாக, அ.தி.மு.கவின் செல்வாக்கு கணிசமாகச் சரிந்து அடுத்தடுத்த தேர்தல்களில் கடும் பின்னடைவைச் சந்தித்தது.
2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சி தலைமை உறுதி நம்புகிறது. அவ்வாறு ஆட்சி அமையும் போது,"1996 இல் அ.தி.மு.கவுக்கு எதிராக ஊழல் வழக்குகள் மூலம் நெருக்கடி கொடுத்ததுபோல், தற்போது தி.மு.கவுக்கு கொடுக்க வேண்டும்' என அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இருந்து உயர் பதவியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ள அரசு அதிகாரிகள் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் கடந்த ஐந்தாண்டு கால, தி.மு.க., ஆட்சியில், துறை வாரியாக நடந்த முறைகேடுகள், ஊழல் விவகாரங்களை ஆதாரங்களோடு பட்டியல் போட்டு, அ.தி.மு.க., தலைமையிடம் கொடுத்துள்ளதோடு அதிமுக ஆட்சி அமைந்ததும்,இவற்றின் அடிப்படையில், முதல்வர் கருணாநிதியில் துவங்கி, முக்கிய அமைச்சரவை சகாக்கள்மீது வழக்குகள் பதிவாகும் என்று கூறப்படுகிறது.
2G வழக்கின்மூலம் துள்ளி எழுந்துள்ள அதிமுகவுக்கு பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் திமுக அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பின்னணி குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப்பணிகள்,செம்மொழி மாநாட்டின் போது கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 1,000 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றில் நடந்த குறைபாடுகளையும் தொகுத்து அதிமுக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அமைச்சர்கள் சிலர் மீது எழுந்துள்ள கொலை சம்பவங்களில் தொடர்பு, நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து போன்ற புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் படிவு செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Tuesday, May 3, 2011
காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? துவங்கியது போட்டா போட்டி!
கட்டுப்பாடு இழந்து நிற்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதில், கோஷ்டி தலைவர்கள் வரிந்துக்கட்டிக்கொண்டடு, டெல்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
முன்பு காங்கிரஸ் தலைவராக வாசன் பதவி ஏற்ற பின், மாநில நிர்வாகிகள் நியமிக்கபடவில்லை என்ற ஒரு குறையை தவிர, கட்சியை பலவீனப்படுத்தும் அளவிற்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.அவர் தலைவராக இருந்த போது, 2004ல், லோக்சபா தேர்தல் வந்தது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி, 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.
அதன்பின், புதிய தலைவராக கிருஷ்ணசாமி பதவி ஏற்றார்.இவர் பதவி ஏற்றும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இவர் தலைவர் பதவியில் இருந்த போது, சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது. அதன்பின், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, கிருஷ்ணசாமி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தங்கபாலு தலைராக்கப்பட்டார்.லோக்சபா தேர்தலில், தி.மு.க.கூட்டணியில் 10 எம்.பி. சீட்டுகளிலிருந்து, 13 சீட்டுகளாக பெற்றுக் கொண்டாலும், ஆறு பேர் மட்டும் தான் எம்.பி.யாக வெற்றி பெற்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.கூட்டணியில், காங்கிரஸ் 63 சீட்டுகளை பெற்றாலும், தகுதியில்லாத வேட்பாளர்கள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி போன்றவை காரணமாக தங்கபாலுவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு, காங்கிரசில் கலவரம் நடந்தது. கட்சியின் கட்டுப்பாடு சீர்குலைந்து, தடி எடுத்தவர்கள் தண்டல்காரர்கள் என்பது போல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக, காங்கிரசார் உள்குத்து வேலைகளில் ஈடுப்பட்டனர்.
தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ரிசல்ட் வந்தால் தான் தங்கபாலு தலைக்கு மேல் தொங்கும் கத்தி விலகும். இல்லையென்றால், அவரது பதவி பறிபோவது உறுதி என்கிறது காங்கிரஸ் வட்டாரம். தமிழக சட்டசபை தேர்தல் முடிவு தலைகீழாக இருக்குமானால், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நாற்காலி பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே, டில்லியில் கோஷ்டி தலைவர்கள் அனைவரும் சோனியாவை சந்தித்து தமிழக காங்கிரஸ் நிலவரத்தை விலாவாரியாக விளக்கியுள்ளனர். ரிசல்ட் வந்த பின் முடிவு எடுக்கலாம் என, மேலிடம் காத்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில் மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம் ஆகிய இருவரில் ஒருவரை தலைவராக நியமித்தால் தான், கட்சி பலப்படுத்தப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. கட்சியைகட்டுக்கோப்புடனும், எழுச்சியுடனும் நடத்தி செல்வதற்கு இந்த இரு தலைவர்களால் தான் முடியும் என்பது தொண்டர்களின் எண்ண ஓட்டம்.
ஆனால், சிதம்பரத்தை பொறுத்தவரையில், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இருப்பதால், அவரால் அப்பதவியை விட்டு விலகி, மாநில தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார். ஆனால், தன் ஆதரவாளரும், கடலூர் எம்.பி.யுமான, கே.எஸ்.அழகிரிக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.
"தனக்கு மத்திய அமைச்சர் பதவியும், மாநில தலைவர் பதவியும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஐந்தாண்டுகள் வரை சுதந்திரமாக செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்' என்பன உள்ளிட்டநிபந்தனைகளுக்கு மேலிடம் பச்சைக் கொடி காட்ட வேண்டும் என வாசன் விரும்புகிறார். அவரது விருப்பம் நிறைவேறும் பட்சத்தில், தலைவர் பதவி ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.இரண்டையும் தர டில்லி மேலிடம் மறுக்குமானால், மத்திய அமைச்சர் பதவியில் தொடரவும், தன் ஆதரவாளர்களான, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க அவர் பரிந்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், மாநில தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவி வகித்த போது, கட்சி பலமாகவே இருந்தது. எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் கட்சியை தூக்கி நிறுத்துவார் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.தனக்கு பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக பரபரப்பாக பேட்டி தரும் இளங்கோவன், தேர்தல் ரிசல்ட் வரை அமைதி காத்து வருகிறார்.
இவர்கள் போக, சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார், ஜெயக்குமார் போன்றவர்களும் தலைவர் பதவியை எதிர்பார்த்து டில்லியில் காய்களை நகர்த்தி வருகின்றனர் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
Tuesday, April 26, 2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ர்ல் 2ம் தேதி, விசேஷ கோர்ட் நீதிபதி சைனி முன் தாக்கல் செய்தது. அதில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பல்வா உட்பட ஒன்பது பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இவ்வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது (துணை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.அதில், தி.மு.க.கட்சியின் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் "டிவி”யின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் ரெட்டி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்னொரு துணை குற்றப்பத்திரிகையும் சி.பி.ஐ. தரப்பில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, அடுத்து மாதம் 30ம் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


