சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவையே என்ற தலைப்பிட்டு விக்கிலீக்ஸில் வெளியானதாகக் கூறி கடந்த சில நாள்களாக மின்னஞ்சல்கள் மூலம் பட்டியல் ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. அதில், கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாகவும் கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்பட்டடிருந்தது. இந்த நிலையில் அதை மறுத்த கருணாநிதி, தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம்.
புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும்.
தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது. புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.
இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

No comments:
Post a Comment