அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, November 3, 2009

மோடிக்கு பன்றிக்காய்ச்சல்! பீதியில் தொழிலதிபர்கள்


அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது, வியாழனன்று அவரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பபட்டு இருந்தது சோதனையின் முடிவில் அவ்ருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளதாக நேற்று காலை குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே அவருடன் மாஸ்கோ சென்ற பெரும் தொழிலதிபர்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து குஜராத் மந்திரி சபையில் கடந்த வியாழனன்று முதல்வர் மோடியுடன் மூன்று மணி நேர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஒரு அமைச்சர் கூறும்போது மோடிக்கு பன்றிக்காய்ச்சல் என்ற சந்தேகமான நிலையில் அவர் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்தி இருக்ககூடாது பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என்றார்.எனினும் குஜராத் அரசு இதை இன்னும் உறுதிபடுத்த மறுத்துவிட்டது முதல் சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் நேற்று மாலை மீண்டும் மற்றொரு மாதிரி சோதனக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்நிலையில் மோடி அரசு ஏற்கனவே மோடிக்கு பன்றிக்காய்ச்சல் தாக்குதலை மறைப்பதற்காக அந்த மாதிரியை ரமேஷ் என்பவரின் பெயரில் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
source:inneram

பள்ளி இமாமை கொன்றது FBI. அதிர்ச்சியில் அமெரிக்க முஸ்லீம்கள்


அமெரிக்காவில் டெட்ராய்ட் அருகே டியர்பார்ன் எனும் இடத்தில் உள்ளூர் பள்ளி இமாம் அமெரிக்க உளவு படையால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அமெரிக்க முஸ்லீம்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைக்கும் உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்புமுமில்லை என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கூட்டமைப்பின் (CAIR) தலைவர் தாவூத் வலீத் கூறினார்.

53 வயதான லுக்மான் அமீன் அப்துல்லா டியர்பார்னில் உள்ள சரக்கு கிடங்கில் புலனாய்வு துறையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அட்டர்னி அலுவலகம் கூறுகிறது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவை அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்த முயற்சி செய்த மிக முக்கியமான தீவிர போக்கு கொண்ட சுன்னி தலைவராக ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

ஆனால் அப்துல்லாவை அதிகாரிகள் பல தடவை திருடு போன பொருட்களை விற்றதாகவும் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்ய முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
CAIR தலைவர் வலீத் அப்பள்ளியில் எவ்வித சட்ட விரோத காரியமும் நடைபெறவில்லை என்றும் தாம் அறிந்த வரையில் அப்துல்லா ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறினார். அப்துல்லா பல தடவை தன்னிடமுள்ள உடைமைகளை பிறருக்கு அன்பளிப்பு செய்துள்ளதாகவும் அவர் மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்றும் வலீத் கூறினார்.

மேலும் வலீத் அப்துல்லாவை பற்றி கூறுகையில் ”அப்துல்லா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். நிறைய இளைஞர்களை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார்” என்றும் புகழாரம் சூட்டினார்.
source:foxnews,inneram

Sunday, November 1, 2009

பாஜக ஆட்சியில் ரூ. 1,60,000 கோடி ஊழல்!

பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவு முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது.

2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் செüரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் செüரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.


நன்றி:
http://www.dinamani.com/edition/story.aspx?Title=பாஜக+ஆட்சியில்+ரூ.+1.6+லட்சம்+கோடி+டெலிகாம்+ஊழல்:+ஆ.+ராசா+குற்றச்சாட்டு&artid=147228&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

மார்கோவா குண்டு வெடிப்பு: வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரணை! , சனாதன் சான்ஸ்தாவை தடைசெய்ய கோவா பரிசீலனை!

கோவா மாநிலம் மார்கோவாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடைய சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி இந்து அமைப்பின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து கோவா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராம்நாதி என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வெளிநாட்டிலிருந்து சிலர் அடிக்கடி வந்து போயிருக்கின்றனர். இதனை காவல்துறையிடம் உறுதி செய்து கெண்டேன். வெளிநாடுகளிலிருந்து வருவோர் காவல்நிலையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய "சி"ஃபார்மைக்கூடத் தாக்கல் செய்யவில்லை என்று கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த இடத்திற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் வந்து சென்றிருக்கின்றனர். இங்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இங்கு வந்து சென்ற வெளிநாட்டவர் குறித்து அறிய காவல்துறையினர் முயன்றனர். ஆனால் ஆசிரமத்தில் இதுபற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்தியது சனாதன் சான்ஸ்தா என்ற அமைப்புதான் என்ற குற்றச்சாட்டை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய அந்த அமைப்பைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் சிலர் இது தொடர்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இனிமேல்தான் முறைப்படி கைது செய்யப்பட வேண்டும். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்தின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து அறிவது மிகவும் முக்கியம் என்றும் ரவி நாயக் கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த ஆசிரமத்தில் மூன்று பிரெஞ்சுக்காரர்கள் தங்கியிருந்தார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது அவர் கூறினார்.
இந்த அமைப்பை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து அரசு ரீதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று கோவா மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சுபோத் கான்டக் திங்கள் கிழமையன்று கூறினார்.இந்த அமைப்பை மத்திய அரசுதான் தடை செய்ய வேண்டுமா அல்லது கோவா மாநிலத்தில் மட்டும் தடை செய்யலாமா என்பது குறித்து மாநில சட்ட அமைச்சகம் ஆய்ந்து வருவதாக அவர் கூறினார்.
தீபாவளி அன்று மார்கோவாவில் நடைபெற்ற இருவரைப் பலிவாங்கிய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சனாதன் சான்ஸ்தா அமைப்பு மாநிலக் காவல்துறையால் தீவிரமாகக் கன்காணிக்கப்பட்டு வருகிறது.

சம்ஜெளதா குண்டு வெடிப்பு: பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களிடம் விசாரணை


2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் இருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் நால்வரிடம் CBI விசாரணை நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சைக்கிள் கடை நடத்திவருபவர் பிரவீன் மண்டல், இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். நேற்று, இவரிடமும், மேலும் 3 பேரிடமும் பலாசியா காவல் நிலையத்தில் வைத்து CBI நீ்ண்ட நேரம் விசாரணை நடத்தியது.

சம்ஜெளதா விரைவு இரயிலில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் இந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதை அறிந்த CBI அது தொடர்பாக பலரை கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தூர் நகருக்கு வந்து இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டுவெடிப்பில் 68 பயணிகள் கொல்லப்பட்டனர், பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் இயக்கங்களே காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
CBI ன் இந்த விசாரணையின் மூலம் சங்பரிவார் அமைப்பினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!


வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரி ஒருவரிடம் முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்பைக் கொடுக்க முயன்றதாக நோசட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணியாற்றி வந்த நோசட், நாசாவிலும் இடம் பெற்றிருந்தார்.52 வயதாகும் நோசட், திங்கள்கிழமை எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்ய்பட்டார்.

இதுகுறித்து இஸ்ரோ அறிவியல் செயலாளர் பாஸ்கர நாராயணா கூறுகையில், இஸ்ரோ மையங்களுக்கு இருமுறை நோசட் வந்துள்ளார். இருப்பினும் முக்கிய மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அவர் அனுமதிக்கப்பட்டதில்லை. இஸ்ரோவின் பாதுகாப்புக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், இஸ்ரோவின் திட்டங்கள் தொடர்பான எந்த முக்கியத் தகவலும் அவரிடம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நோச்ட கைது நாசாவின் உள் விவகாரம். இதுகுறித்து நாம் கருத்து கூற முடியாது என்றார்.

லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!


"லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை" என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இரு பெண்கள் தொடர்புடைய வழக்கில், அவர்களின் கணவர்கள் முன் ஜாமீன் கேட்டு பதிவு செய்த மனுவினைத் தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், "கேரளத்தில் லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு செயல்படுகிறதா? அதற்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டா? தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முதலான சமூக விரோத செயல்களில் அதற்கு பங்குண்டா?" என்பது உட்பட விரிவாக விசாரணை நடத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள டிஜிபி, தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு கேரளத்தில் செயல்படுவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை"எனவும் "அவ்வாறான ஒரு இயக்கம் கேரளத்தில் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இஸ்லாமிய மதத்திற்கு மற்ற மதத்திலிருந்து பெண்களை மதம் மாற்றும் செயல் நடைபெறுகிறதா? என்பதைக் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவா குண்டுவெடிப்பு!! - கார்ட்டூன்