அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 18, 2011

Popular Front of India Protest - Exclusive Gallery


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில்
மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தனர். இந்த ஆர்பாத்தில் சுமார் 2000 துக்கு அதிகமாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தின் மூலம் மேலப்பாளையம் சந்தை முக்கு பெரிய மாநாடு நடைபெறுவதை போல காட்சியளித்தது.

SDPI  மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி
நம் நாட்டில் சுதந்திர போராட்டத்தின் தொடக்கமான 1857 சிப்பாய் கலகம் நடைபெற காரணமாக அமைந்தது தொடங்கி, கப்பலோட்டிய தமிழனுக்கு கப்பல் வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்தது, தனது இரண்டு மகன்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட போதும் இந்தியாவிற்கான சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் சற்றும் பின்வாங்காத மாமனனர் பகதூர்ஷாவின் தியாகம் என சுதந்திர போராட்ட வரலாற்றுச் சுவடுகளின் எல்லா பக்கங்களிலும் நீங்கா இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு, இன்று பெற்ற சுதந்திரத்தை கொண்டாடுவதற்க்கும், சுதந்திர போராளிகளின் தியாகங்களை நினைவு கூறுவதற்கும் அனுமதி கிடையாது என்பது நமது காவல்துறை மற்றும் தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா

விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக்


மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன்


























தமிழக மற்றும் காவல்துறையின் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய போக்கினை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 ஆகஸ்ட் 2011 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக 17-08-2011 நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 2000 திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் தலைமை ஏற்று வழிநடத்தினார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில், தேசிய அரசியல் கட்சி SDPI ன் மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத்துணை தலைவி A. பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகிய அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்த பொதுமக்களும் சிறுபான்மை உரிமைகளை மீட்டும் நோக்கோடு சுய ஆர்வத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்று விசாரித்த வழிப்போக்கர்களும், கண்டன உரையை செவிமெடுத்த மேலப்பாளைய வாழ் மக்களும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த போக்கினை வன்மையாக கண்டித்தனர்.  
Thanks
Melapalayam voice

Sunday, August 14, 2011

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை

நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை.நாளை நடைபெறவிருக்கும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிப்பதாக நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜலு ஐ.பி.எஸ்.கூறியுள்ள மறுப்பு கடிதத்தில் கூறியுள்ளதாவது .பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு கேரளா,மற்றும் கர்நாடகவில் அணிவகுப்பிற்கு தடை அறிவிக்க பட்டு இருபதால் தமிழ்நாட்டிலும் உங்களுக்கு சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதிக்க படுகிறது என கூறியுள்ளார்.எனவே மேல பாளையத்தில் அனைத்து பொது மக்களும் பெரும் கொந்தலிபில் உள்ளனர்.மேலும் பெருமளவில் போலிசார் குவிக்க பட்டு இருப்பதால் நெல்லையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.சுதந்திர தின அணிவகுப்பை தடுக்க வேண்டும் என்ற நோக்கோடு நெல்லை மட்ட காவல் துறை செயல்படுகிறது என அனைத்து இயக்கங்களும் கூறுகின்றனர்.மற்றும் 2008 -ல் மதுரையில் அணிவகுப்பு நடத்த அனுமதி வேண்டிய போது கேரளத்தில் சாலைகளில் அணிவகுப்பு நடைபெற்றதை காவல் துறையினரிடம் கூறிய போது கேரளா நிலைமை வேறு தமிழக நிலைமை வேறு என்று கூறிய காவல் துறை இப்போது மட்டும் அங்கு அனுமதி கொடுக்கவில்லை ஆதலால் இங்கும் அனுமதி மறுக்க படுகிறது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.மற்றும் இவர்கள் நீதி மன்றத்தை அணுகி அனுமதி பெற்று விடுவார்களோ என்ற ஐயத்திலும் தான் வெள்ளிகிழமை மாலை மறுப்பு கடிதத்தை வழங்கியதாகவும் சனி மற்றும் ஞாயிறு அன்று நீதி மன்றம் விடுமுறை என்பதை கருதில் கொண்டே கடைசி நேரதில் அனுமதி மறுத்தது என  பாப்புலர் ஃப்ரண்ட் வட்டாரங்கள் தெரிவிகின்றன ......

போதையில் அரசு டாக்டர் நிர்வாண நடனம்! செவிலியர்கள் ஓட்டம்..

மதுரை: அரசு பொது மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் குடிபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, நிர்வாண நடனமாடியதால் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவான 5வது வார்டுக்கு முதலுதவி சிகிச்சை வார்டில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகள் அதிகம் வரவில்லை. இதனால் பணியிலிருந்த டாக்டர் மது  அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில், அணிந்திருந்த பேண்ட், சட்டையை கழற்றி லுங்கி அணிந்து கொண்டார். இங்கு தினமும் அதிகாலையில் நாய்க் கடிக்கு ஊசி போடுவதற்காக வருவது வழக்கம். நேற்று அதிகாலையிலேயே ஏராளமான நோயாளிகள் நாய் கடி தடுப்பு  ஊசி போடுவதற்காக வந்தனர்.
 

ஆனால், உச்சகட்ட போதையில் இருந்த மருத்துவர்  வந்திருந்த நோயாளிகளுக்கு ஊசி போடவில்லை. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. நோயாளிகள் வந்திருப்பது குறித்து செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மருத்துவரிடம் தெரிவித்தனர். ஏற்கனவே போதையில் இருந்த டாக்டர், யாருக்கும் சிகிச்சை செய்ய முடியாது. எனக்கூறி, செவிலியர் மற்றும் பணியாளர்களை ஆபாசமாக பேசிய மருத்துவர் அணிந்திருந்த லுங்கி நழுவி கீழே விழுந்தது.
 

இதை கண்ட செவிலியர்கள், நோயாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமானுஜம், நிலைய மருத்துவ அதிகாரிகள் திருவாய்மொழி பெருமாள், பிரகதீஸ்வரன் ஆகியோர் அந்தப் பிரிவுக்கு விரைந்து வந்தனர்.
 

உயர் அதிகாரிகள் வருவதை பார்த்ததும், போதையிலிருந்த  மருத்துவர் அங்கிருந்த அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதற்கிடையே, ‘இந்த மருத்துவர் பணியில் இருந்தால், நாங்கள் இங்கு பணிபுரிய மாட்டோம்‘ என செவிலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

இதையடுத்து, உடனடியாக அங்கு மாற்று மருத்துவரை நியமித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் இந்த மருத்துவர் ஏற்கனவே சில தினங்களுக்கு முன் இதேபோல குடிபோதையில் ரகளை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை அதிகாரிகள் முடிவு செய்து 3 பேர் கொண்ட மருத்துவ குழுவை நியமித்துள்ளனர்.

கருப்பான அழுக்கு தோல் தமிழர்கள் : அமெரிக்க தூதரக அதிகாரி

சென்னை : சென்னையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி மவுரீன் சவோ கருப்பான மற்றும் அழுக்கு தோல் படிந்த தமிழர்கள் என குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்த சம்பவத்துக்கு அமெரிக்க தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள புகழ் பெற்ற எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி மவுரீன் சவோ 20 வருடங்களுக்கு முன் தான் இந்தியாவில் படித்த போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
"20 வருடங்களுக்கு முன் என் பல்கலைகழகத்தில் வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டிய வாய்ப்பு வந்த போது இந்தியாவின் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு படிக்க வந்தேன். டெல்லியிலிருந்து ஒரிஸாவுக்கு 24 மணி நேரத்தில் வரும் இரயிலில் நான் வந்தேன். ஆனால் கிட்டத்தட்ட 72 மணி நேரம் கழித்து ஒரிஸ்ஸா வந்ததால் என் தோல் முழுக்க தமிழர்களை போன்று கருப்பாகவும் அழுக்காகவும் ஆகி விட்டது" என்றார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் சவோவின் கருத்துகள் பொருத்தமற்றவை என்றும் அவரின் கருத்துகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் கோருவதாகவும்