அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, August 10, 2011

1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி உடனடி அமல் : தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சமச்சீர் கல்வியை, 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 1 முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்துவதாக, சட்ட சபையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' நேற்று தீர்ப்பு வெளியிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு செல்லும் என, தீர்ப்பளித்த ”ப்ரீம் @கார்ட் "பெஞ்ச்' , இதற்கு, 25 காரணங்களையும், பட்டியலிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில், புதிய அரசு பதவியேற்ற பின், மே 22ம் தேதி முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய தினம், அதாவது மே 21ல், பழைய கல்வி முறையில் பாடப் புத்தகங்களை வெளியிட டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது, சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் கூட்டியே அரசியல் முடிவு எடுக்கப்பட்டது என்பதை காட்டுகிறது.சமச்சீர் கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்பதற்கு அடிப்படையாக, அரசு முன் எந்த ஆவணமும் இல்லை. சமச்சீர் பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யவில்லை.ஆட்சியில் இருந்த அரசியல்கட்சித் தலைவரின் (கருணாநிதி) சொந்த கொள்கையை விளம்பரப்படுத்தும் வகையில், தனிப்பட்ட புகழ் பாடும் வகையில் பாடப் புத்தகங்களில் சில பகுதி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.அத்தகைய பகுதிகளை நீக்கியிருக்கலாம். அதற்குப் பதில், காலவரையற்ற முறையில் சட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். பொருளாதார, சமூக, கலாசார பாகுபாடு பார்க்காமல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டு வர, கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், மற்ற வகுப்புகளுக்கு, 2011-12ம் ஆண்டிலும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது என சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்பதால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கையை தவிர்க்க, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்ற தமிழக அரசின் வாதம் ஏற்கக் கூடியதாக இல்லை. ஐகோர்ட் உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும்தீர்ப்பளித்துள்ளது. சட்டத் திருத்தம் மூலம் இந்த தீர்ப்புகளை ரத்து செய்யும் விதத்தில், சட்டசபையை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வகையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. எனவே, இந்த வகுப்புகளைப் பொறுத்தவரை, சமச்சீர் கல்வி சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் வகை செய்யப்பட்டபடி, அட்டவணையை மாற்றி உத்தரவுகளை பின்பற்றியிருக்கலாம். சட்டத்தில் கூறியுள்ள பிரிவுகளை அமல்படுத்த, நிர்வாக உத்தரவுகளை அரசு பிறப்பிக்க, சமச்சீர் கல்வி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் தரக் குறைவாக இருக்கிறது என, பலர் முறையீடுகள் செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மே 16ம் தேதி புதிய அரசு பதவியேற்றது. அதன்பின், சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள், அமைப்புகள் தரப்பில் அளிக்கப்பட்ட முறையீடுகளை, 17, 18ம் தேதிகளில் அரசு பெற்றுள்ளது. இவ்வாறு முறையீடுகள் செய்த பெரும்பாலான அமைப்புகள், சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து, அதில் தோல்வியடைந்தவர்கள். இந்த முறையீடுகள் எல்லாம் விசாரணைக்கு உகந்ததல்ல. அரசே இந்த முறையீடுகளை அனுமதித்திருக்கக் கூடாது. இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு : ""சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டில்லிபாபு பேசும்போது நடந்த விவாதம்:
டில்லிபாபு: குன்னூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு, நேரடியாக தேர்வு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். 1 கோடியே, 25 லட்சம் பள்ளி மாணவர்கள், பாடப் புத்தகங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: சமச்சீர் கல்வி தொடர்பாக, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை, 10 நாளில் அமல்படுத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்தும்.

டில்லிபாபு: சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஒரு முடிவு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

சமச்சீர் கல்வி இதுவரை...: சமச்சீர் கல்வி என்பது தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநில அரசு கல்வி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு கல்வி முறைகளை ஒன்றாக்குவதே இதன் முக்கிய நோக்கம். 
2010: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் அறிக்கை மற்றும் கல்வியாளர்கள் குழுவின் ஆய்வு அறிக்கையை அடுத்து சமச்சீர் கல்வி சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். 
2010 -11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டது. இக்கல்வியை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
2011 மே 11: தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது. 
மே 22: சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அ.தி.மு.க., அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. 
ஜூன் 7: சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றம். இதன்படி இந்தாண்டு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு. பல்வேறு திருத்தங்களுடன் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., தகவல்.
ஜூன் 8: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு.
ஜூன் 10: தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை. மேலும் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புடன் சேர்த்து ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு. 
ஜூன் 13: சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு.
தங்களது மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கல்வியாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு. 
ஜூன் 15: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு இந்தாண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் அதை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ஐகோர்ட் அதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. 
ஜூன் 17: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தலைமை செயலர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. 
ஜூலை 5: தமிழக அரசின் நிபுணர் குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 
ஜூலை 18: அறிக்கையை விசாரித்த ஐகோர்ட் இந்தாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு. 
ஜூலை 19: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு. 
ஆக. 4: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.
ஆக. 8: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு.
ஆக. 9: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தாண்டே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு. 
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து சமச்சீர் கல்வி இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஜெ., அறிவிப்பு. 

Ban on Freedom Parade in Kerala: Popular Front Moves Court..


freedom parade2
Freedom Parade Poster in Malayalam
Kochi: Popular Front of India Kerala state committee filed a petition in Kerala High Court against ban on Freedom parade slated to be organised in four towns on August 15 as part of Independence Day celebrations. Petition will be heard tomorrow.
The petition moved through senior advocate K Ram Kumar against the decision of district collectors to impose ban on Freedom parade at Punaloor, Thamarassery, Manjeri and Chavakkadu. Petitioner questioned the veracity of reasons put forward by these collectors of four districts to put the ban that there were strong opposition from the part of organisations like RSS and CPM. At the same time all other parties were given permission to conduct various programmes on the same day.  To single out Popular Front and blocks its programme only is nothing but illogical and unlawful. The decision by the collectors amounts to the denial of citizens’ right to celebrate Indian independence, petition said.
Last day Populkar Front had termed official ban on Freedom Parade on Independence Day as gross violation of civil rights of the citizens to celebrate country’s freedom. Kerala state committee meeting termed the police decision highly condemnable and objectionable.
It should be noted that Freedom Parade was being conducted in different parts of Kerala right from 2004. And it was Freedom Parade that popularized Independence Day celebrations which was restricted to official programmes till then. High public participation of the parade was clear indication for this.
There was no untoward incident reported in connection with the parade so far in the state. So it is unreasonable and against facts to ban it on the grounds of law and order problems. The ban decision is no doubt the result of prejudiced notion of the government towards Popular Front of India. There is no point in denying Popular Front activists right to celebrate independence when all other organizations has chance to do it through various programmes, sate committee had observed.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் துவங்கியது : இன்று முடிக்க அதிகாரிகள் தீவிரம்.

சென்னை: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று மாலை துவங்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொறுத்து, அரசு வழங்கும் உத்தரவின் அடிப்படையில் பாடப் புத்தகங்களை வினியோகிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுச்செல்ல, குறிப்பிட்ட மையங்களுக்கு தயாராக வருமாறு, அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, சென்னையில் நேற்று பல பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை வாங்க காத்திருந்தனர். எனினும், மாலை 4 மணி வரை எந்தவித உத்தரவும் வராததால், பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யவில்லை. 4.30 மணிக்கு, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டதும், காத்திருந்த ஒரு சில பள்ளிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், மற்ற இடங்களிலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறியதாவது: சென்னையில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. நான்கு மாவட்டங்களிலும், தலா ஒரு மையத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை (நேற்று) தான், பாடப்புத்தகங்கள் வழங்க அனுமதி கிடைத்தது. அதன்படி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காத்திருந்த பல்வேறு பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் பாடப்புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகிய அனைத்திற்கும், நாளை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். ஒவ்வொரு பள்ளியிலும், அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் குறித்த விவரங்களை ஏற்கனவே நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனடிப்படையில், பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். வினியோக மையத்தில் இருந்து, பள்ளி பிரதிநிதிகள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, அதன்பின் மாணவர்களுக்கு வழங்குவர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அவர்கள், விலைக்குத் தான் வாங்க வேண்டும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு நாகராஜ முருகன் கூறினார்.
அனைத்துப் பள்ளி பிரதிநிதிகளும், இன்று மதியத்திற்குள் பாடப் புத்தகங்களை பெற்றுச்சென்று, பள்ளி முடிவதற்குள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். எனவே, இன்றைக்குள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைத்துவிடும். இதன்மூலம், இரண்டு மாதங்களாக நீடித்துவந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

சென்னையில் சமச்சீர் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்படும் மையங்கள் விவரம் 

சென்னையில், நான்கு இடங்களில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி-ராயபுரம் (சென்னை-கிழக்கு)
2. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் (சென்னை-வடக்கு)
3. எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி-சேத்துப்பட்டு (சென்னை-தெற்கு)
4. ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை (சென்னை-சென்ட்ரல்)
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் பிரதிநிதிகள், சம்பந்தபட்ட மையத்திற்குச் சென்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். 

"பெண்"ணாக இருத்தலின் வலி...

என் புன்னகை என்னும்
முகமூடிக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு இருப்பது என் முகமல்ல..
எப்பொழுதும்
அழுதுகொண்டே இருக்கும்
என் இதயம்...
"பெண்"ணென்ற பால்மை வேறுபாட்டின்
வரையறைகளுக்குள்
வார்க்கப்பட்டிருப்பதென்னவோ
வாழ்வின் பெருந்துயரம் தான் தோழி!

நீ
நேசிக்கப்படுவதற்கும்
வாசிக்கப்படுவதற்கும்
செவிகூர்ந்து கேட்கப்படுவதற்கும் பின்னணியில்
நீயொரு "பெண்"ணாக இருத்தலின்
தாத்பர்யம் கூர்மைபெறுகிறது...
"உன்னுடையவை" என்பதான அனைத்துக்கும்
அளிக்கப்படும் பெறுமானம் - நீ
"அவள்" ஆக இருப்பதாலேயே
ஒருபடி தாழ்ந்துவிடுகிறது,
அன்றேல்,
"அவன்" ஆக இருப்பதினின்றும்
வித்தியாசப்படுகின்றது.

வீட்டிலோ வெளியிலோ
கடலிலோ கரையிலோ
காவியக் கதைகளிலோ
எல்லாவகையான வன்மம் தீர்த்தலிலும்
பெண்மை பாத்திரமாகிறது;
நெடுந் துயரத்தின் பாதை
நீண்டு விரிகிறது.

மொழியின் வழக்குக்குள் மட்டுமென்ன,
மானபங்கம் ஒருதலைப்பட்சமானதுதான்!
ஆற்றிலும் சேற்றிலும்
கால்புதைத்து நிமிர்ந்துசெல்லும்
"ஆண்குண"த்தின் மமதைக்கு
வாங்கப்படும் வக்காலத்துக்கள்
பெண்ணென்று வந்திடிலோ
ஆக்கத்தின் அழிவும்
சிரித்தலில் இழிவுமாய்
வகைதொகையின்றி வசைபாடுகின்றன!

பூமிக்கு உவமை சொல்லி
பொங்கியெழல் தவிர்த்ததுவும்...
கற்புக்கு ஒப்புசொல்லி
அதையே சூறையாடியதும்...
ஏய்ப்பதற்கும் மேய்ப்பதற்கும்
கால்நடைபோல் மாற்றியதும்
இன்று நேற்று உள்ளதுவா? - மனம்
மரத்துத்தான் போனதுண்மை!

சமையலுக்கும் சுமைகளுக்கும்
அமைந்ததிந்த வாழ்க்கையெனில்,
வேண்டாம் அது நமக்கு
இன்றே வா மறுதலிப்போம்!
இழிதலற்ற வாழ்வுநோக்கி
இனி புதிய யுகம் படைப்போம்!

டக்ளஸை ஏன் கைது செய்யவில்லை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்...

தேடப்பட்டு வரும் குற்றவாளியான டக்ளஸ் தேவானாந்தா டெல்லி வந்தபோது அவரை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் ஈழப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை 4ஆவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.   தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற டக்ளஸ், இலங்கை அரசின் ஆதரவாளராக மாறினார். அதன் பயனாக ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
 

இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் வராததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.   கடந்த ஆண்டு அவர் டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது அவரை கைது செய்யக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது. 


இதனால் பயந்துபோன டக்ளஸ் தனக்கு எதிரான கைது வாரண்டு உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி மனு செய்தார். தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.
 

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடந்தது.   அப்போது டக்ளசுக்கு ஜாமீன் கொடுக்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து டக்ளசுக்கு ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். டக்ளஸ் ஐகோர்ட்டில் சரண் அடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.
 

ஆனால் இதுவரை அவர் சரண் அடையவில்லை . இந்த நிலையில், டக்ளஸை எதிராக  தொடரப்பட்டுள்ள பொது நல  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தேசியகீதத்தில் 'சிந்த்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை எதிர்த்து மனு.

தேசியகீதத்தில் சிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்ட் என்பவர்.

1950ஆம் ஆண்டில் சிந்த் என்ற வார்த்தை சிந்து என மத்திய அரசால் மாற்றப்பட்டுவிட்டது. சிந்த் என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதியாயைக் குறிக்கும். சிந்து நதி இந்தியாவிலும் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நதியின் பெயர் சிந்து என மாற்றப்பட்டுவிட்ட பின்னரும், தேசிய கீதத்தில் சிந்த் என்றுதான் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் கல்வி - மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி: கருணாநிதி!

சமச்சீர் கல்வியின் வெற்றி சாமான்ய மக்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பு ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து கருணாநிதி கூறியதாவது:

சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அரசுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது போல புதிய தலைமை செயலக வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை தாமதமாக செயல்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இடைக்கால இழப்பீட்டை ஈடுசெய்ய கல்வியாளர்களை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வியின் வெற்றி, சாமான்ய மக்களுக்கு, மாணவர்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இதே தீர்ப்பு தி.மு.கழக ஆட்சியிலே உச்சநீதி மன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப் போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறையையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சமச்சீர் கல்விக்குக் கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

சுவிஸ் வங்கியில் என் கணக்கில் ரூ. 35 ஆயிரம் கோடியா?: இல்லை என்கிறார் கருணாநிதி!

சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவையே என்ற தலைப்பிட்டு விக்கிலீக்ஸில் வெளியானதாகக் கூறி கடந்த சில நாள்களாக மின்னஞ்சல்கள் மூலம் பட்டியல் ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. அதில், கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாகவும் கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் கூறப்பட்டடிருந்தது. இந்த நிலையில் அதை மறுத்த கருணாநிதி, தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம்.

புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது. புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது.   இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.

இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

சமச்சீர் கல்வியே - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமச்சீர் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் 10 தினங்களுக்குள்  தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவையற்ற பாடங்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.

எனினும் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  கால அவகாசம் கேட்கும் என்று தெரிகிறது.

Tuesday, August 9, 2011

சூடு பிடிக்கும் சுதந்திர தின அணிவகுப்பு விளம்பரங்கள்.



மலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாசல் திறக்கிறது..


 malegaon
மும்பை:2006-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நிரபராதிகளான ஒன்பது முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்தவாரம் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் இவர்களின் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் வேளையில் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்கவேண்டாம் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) முடிவுச்செய்துள்ளது.
2006-ஆம் ஆண்டு பராஅத் தினத்தில் முஸ்லிம்கள் மலேகான் மஸ்ஜிதிலிருந்து வெளியே வரும் வேளையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதில் 38 அப்பாவிகள் கொலைச் செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை13 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது. இவர்களில் முஹம்மது அலிஆஸிஃப் கான்ஜாவேத் ஷேக்,ஸல்மான் ஃபாரிஸிஷபீர் அஹ்மத்ரஈஸ் அஹ்மத்டாக்டர் ஃபாரூக்அன்ஸாரிஅப்ரார் அஹ்மத்நூருத்துதா தோஹா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால்கடந்த ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுவாமிஅஸிமானந்தா மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் மலேகான்அஜ்மீர்சம்ஜோதா குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கில் திருப்பு முனை ஏற்பட்டது.
2008-ஆம் ஆண்டு நடந்த 2-வது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நேர்மையான அதிகாரியான மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பிரக்யாசிங் தாக்கூர்தயானந்த் பாண்டேஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்டோரை கைதுச் செய்தார். இவ்வழக்கிலும் முதலில் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதும்இன்னொரு வழக்கின் ஆதாரத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் அனுமதிக்க இயலாது என சுட்டிக்காட்டி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
2010 ஆம் ஆண்டு மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையிடமிருந்து இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தேசிய புலனாய்வுஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்திருந்தாலும் தொடர் விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் ஜாமீன் மனு அளிக்கும்போது அதனை எதிர்க்கவேண்டாம் என்ற முடிவுக்கு என்.ஐ.ஏ வந்ததாக கருதப்படுகிறது.
இவ்வழக்கில் கர்னல் புரோகித்தையும்ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளது. இவ்வழக்கில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு நிரூபணமானதைத் தொடர்ந்து முன்னர் இவ்வழக்கை விசாரித்து அப்பாவிகளை சிறையில் அடைத்த ஏ.டி.எஸ்ஸும்,சி.பி.ஐயும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவர்.
செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலைச் செய்யக்கோரி பல்வேறுஅமைப்புகளும்மனித உரிமை இயக்கங்களும் களமிறங்கியிருந்தன
 

Monday, August 8, 2011

சிறையில் எழுதிய புத்தங்களை வெளியிட உதவ வேண்டும் பாக். தீவிரவாதி கோரிக்கை

காஜியாபாத்: தான் எழுதிய புத்தகங்களை வெளியிட பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று சிறையில் உள்ள தீவிரவாதி கோரிக்கை விடுத்துள்ளான்.
காஜியாபாத் அருகே உள்ள மோடி நகரில் கடந்த 1996ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம் பவம் தொடர்பாக ஹர்கத் உட் அன்சார் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த பாக். தீவிரவாதி அப்துல் மாடின்னை, காஷ்மீரில் 1997ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இவனுக்கு ராஜஸ்தானில் நடந்த தீவிரவாதச் செயலுக்கு உள்ள தொடர்பு நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு விடுதலையான மாடின்னை மோடி நகர் குண்டு வெடிப்புக்காக போலீசார் கைது செய்து, தாஸ்னா சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அப்துல் மாடின், தீவிரவாதம் பற்றி 2 புத்தங்களை எழுதியுள்ளான். இந்த புத்தங்களை வெளியிட அனுமதி கோரி காஜியாபாத் நீதிமன்றத்தில் மாடின் மனு தாக்கல் செய்தான். அவனது மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் அரசுக்கு மாடின் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விஷயத்தில் தலையிட்டு, புத்தகங்களை வெளியிட பாகிஸ்தான் தூதரகம் உதவ உத்தரவிட வேண்டும் என்ற கோரியுள்ளதாக மாடின் வக்கீல் அவத் குமார் தியாகி தெரிவித்தார். 

போலி என்கவுன்டரில் உத்தர பிரதேசம் முதலிடம்..

புதுடெல்லி : போலி என்கவுன்டர் நடந்ததில் உத்தர பிரதேசம் மாநிலம் முதலிடத்திலும், மணிப்பூர் மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரவுடிகளை போலீசார் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் போலீசாரை தாக்குவதுண்டு. அப்போது போலீசார் பதிலுக்கு தாக்குதல் நடத்துவார்கள். இந்த என்கவுன்டரில் இருதரப்புக்கும் காயம் ஏற்படலாம். ஆனால், என்கவுன்டரில் பெரும்பாலும் ரவுடிகள்தான் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். 

இதனால், போலீசுக்கு பிடிக்காத ரவுடிகள் அல்லது ஆளும் கட்சிக்கு பிடிக்காதவர்கள் இந்த ‘போலி’ என்கவுன்டரில் சுட்டு கொல்லப்படுகிறார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. இது குறித்து நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் தேசிய மனிதஉரிமை ஆணையத்துக்கு வருகிறது. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் வரை மனித உரிமை ஆணையத்தில் 369 போலி என்கவுன்டர் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 90 வழக்குகளில் போலி என்கவுன்டர் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4.54 கோடி நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 271 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

போலி என்கவுன்டர் புகார் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உத்தர பிரதேசம். இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 120 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார் வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

நக்சல் அபாயம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜார்கண்ட்டில் 13 பேரும், ஒரிசாவில் 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிபூங்கா என கூறப்படும் தமிழ்நாடு,மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தலா 15 பேர் போலி என்கவுன்டரில் பலியாகியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 23 பேரும், தலைநகர் டெல்லியில் 6 பேரும் என்கவுன்டரில் பலியாகியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையை ஆ‌ய்வு செ‌ய்‌ய ரூர்கி ஐஐடிக்கு கேரளா அழைப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்த வருமாறு ரூர்கி ஐ.ஐ.டி. நிறுவனத்துக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் முதலமை‌ச்ச‌ர் உம்மன் சாண்டி தலைமையில் நடைபெற்ற கேரள அரசின் உயர் நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு‌ள்ளது.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி பகுதியில் அண்மையில் 3.5 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் பதிவானது. பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் அணையின் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க ரூர்கி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தை கேட்டுக் கொள்வது என்று கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

தக்வா தரும் பாடம்...

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7
தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய "அல்லாஹ்" நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.

நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது தக்வாவின் விரிந்த பொருளாகும்.
"அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றை செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் "தக்வா"வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவனாக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.
ஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், "நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்" என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை தமது தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கிறார்.
ஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனதில் இறையச்சம் மிகுந்து என்றும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு,  தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.
இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்

சுப்ரமணியசாமி வீடு மீது தாக்குதல்!

டெல்லியில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு ஞாயிற்றுக் கிழமை மாலையில் தாக்கப்பட்டது.  அந்த வீட்டுக்குள்  சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசித் தாக்கியது.

அதில் சிலர்,  வீட்டின் சுவரில்  ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.
 

சம்பவம்  நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. அவருடைய பேத்தி மட்டுமே இருந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தடையை மீறி கடலில் முற்றுகை போராட்டம் : கோட்டை விட்ட போலீசார்


ராமேஸ்வரம் : படகில் சென்று கடல் முற்றுகைப் போராட்டம் செய்த, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை கவனிக்காமல், மரைன் போலீசார் கோட்டை விட்டனர்.

ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், கடலில் இறங்கினால் கைது செய்யப்படுவர் என, போலீசாரால் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்கள், ராமேஸ்வரத்திற்கு வந்தனர். போராட்டத்திற்கு முதல் நாள், ராமேஸ்வரம் வந்த பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வழக்கமாக தங்கும் இடத்தைத் தவிர்த்து, ராமேஸ்வரம் துறைமுகத்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள விடுதியில் தங்கினார். நேற்று அதிகாலை விடுதியின் பின்புறமாக வந்த பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலர் சுப.நாகராஜன் மற்றும் தொண்டர்கள் சிலர் அங்கு தயாராக நின்ற சிறிய படகில் ஏறி, ஆழ்கடலுக்குச் சென்றனர். காலை 11.30 மணிக்கு மீனவர்கள் போல் படகிலிருந்து கரையில் இறங்கியவர்கள், மறைத்து வைத்திருந்த கொடியை தூக்கிப் பிடித்து கோஷம் போடத் துவங்கியவுடன், கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், இவர்களை கரையேற்றி மேடைக்கு அழைத்து வந்தனர். மேடைக்கு அருகில் ஆரவாரத்துடன் வந்தவர்களைப் பார்த்ததும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள், போலீசார் தடையை மீறி படகுகள் கட்டப்பட்டிருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றனர். எஸ்.பி., காளீராஜ் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ""காலை 6 மணிக்கு நான்கு பேருடன் படகில் புறப்பட்டு, ஆழ்கடல் பகுதிக்குச் சென்று கரை திரும்பினேன். படகில் இருந்து இறங்கி, கடலில் நின்று கோஷம் போட்ட பின்பே, போலீசார் வந்து எங்களை அழைத்து வந்தனர். 6 மணி நேரம் கடல் முற்றுகை போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்; ஆனால் கைது செய்யவில்லை, என்றார். பொன்.ராதாகிருஷ்ணன் செல்வதற்கு படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத் துறை, முன்பே தகவல் கொடுத்தும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் போலீசார், பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர்.

சாதிக் பாட்சா சாவில் இருந்துவந்த மர்மம் விலகியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர்  சாதிக்பாட்சாவின் சாவில் இருந்துவந்த மர்மம் விலகியது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, சாதிக்பாட்சாவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். விசாரணைக்கு ஆஜராகவேண்டிய நாளான கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கினார்.

அவரது சாவில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சாதிக்பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக தடயவியல் நிபுணர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தனர். சாதிக்பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த அவர்கள் இது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.

இது தொடர்பான அறிக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களாக சாதிக்பாட்சா சாவில் நிலவி வந்த மர்மம் தற்போது விலகியுள்ளது.

ஏடிஜிபி ஜாபர் சேட் பணியிடை நீக்கம் -அரசு அதிரடி நடவடிக்கை!

முந்தைய திமுக அரசுக் காலத்தில் உளவுப் பிரிவு ஏடிஜிபி யாக பணியாற்றிய ஜாபர் சேட்டுக்கு அரசு வீட்டு மனை ஒதுக்கப் பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப் பட்டதை அடுத்து கடந்த மாதம் 26 ம் தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள ஜாபர் சேட்டின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய தகவல்கள் அடங்கிய சி டி மற்றும் லேப் டாப் சிக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் பணியாற்றி வரும் ஏடிஜிபி ஜாபர் சேட் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் அமளியால் பார்லிமென்ட் இன்று முடங்கும்?

புதுடில்லி: காமன்வெல்த் போட்டி தொடர்பாக, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது கூறப்பட்டுள்ள புகார், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகம் மீது கூறப்பட்டுள்ள புகார் ஆகிய விவகாரங்களை பார்லிமென்டில் எழுப்பி, சபையில் புயலைக் கிளப்ப, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த வாரம் துவங்கி, நடந்து வருகிறது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சபை இன்று மீண்டும் கூடுகிறது. இதற்கிடையே, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கையில், டில்லி காமன்வெல்த் போட்டிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், இதில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில், பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களையும் முன்வைத்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், பெரும் புயலை கிளப்ப, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, "2ஜி' ஒதுக்கீடு தொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்துவதற்கு, அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டால், பார்லிமென்டில் அமளியை ஏற்படுத்தவும், பா.ஜ., தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரங்களை, பார்லிமென்டில் எப்படி கையாளுவது என்பது குறித்து விவாதிப்பதற்காக, பா.ஜ., பார்லிமென்ட் கமிட்டி கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. 

இந்த கூட்டத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தலைமை வகித்தார். கூட்டம் முடிந்ததும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ். அலுவாலியா கூறியதாவது: கடந்த சில நாட்களாக, ஊழல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தை பார்லிமென்டில் எப்படி கையாளுவது என்பது குறித்து, இன்று (நேற்று) விவாதிக்கப்பட்டது. எனினும், கூட்டணி கட்சிகளுடனும் இதுகுறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. தே.ஜ., கூட்டணி கட்சிகளின் கூட்டம், இன்று நடக்கிறது. இதில், இந்த விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். காமன்öவ்ல்த் போட்டிகளில் நடந்த முறைகேட்டில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது, மத்திய தணிக்கை கணக்கு அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, அவர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்.இவ்வாறு அலுவாலியா கூறினார்.

சி.பி.ஐ., விசாரணை: பா.ஜ., தகவல் அறியும் உரிமைப் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விவேக் கார்க் கூறியதாவது: டில்லி காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலில், முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தொடர்பு இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. சாலைகள் அமைத்தது, தாழ்தள பஸ்கள் வாங்கியது, தெரு விளக்குகள் அமைத்தது, வீரர்கள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்தது போன்ற விஷயங்களில், டில்லி மாநில அரசு முறைகேடு செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்துகிறது. இது தொடர்பான மனுவை, சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய கணக்கு தணிக்கை துறையின் முன்னாள் ஆடிட்டர் ஜெனரல் சுங்குலு ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும், இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கோர்ட்டையும் அணுகவுள்ளோம். இவ்வாறு விவேக் கார்க் கூறினார்.

பதில் அளிக்க முதல்வர் ஷீலா தீட்சித் தயார் : காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக டில்லி அரசு மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிப்பதற்கான நடவடிக்கைகளை, முதல்வர் ஷீலா தீட்சித் முடுக்கி விட்டுள்ளார். கடந்தாண்டு டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக, புகார் தெரிவிக்கப்பட்டது. போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மூலம், டில்லி மாநில அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக, முதல்வர் ஷீலா தீட்சித் மீது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது. இதுகுறித்து, டில்லி மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக, ஏற்கனவே சுங்குலு கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதில் அளிப்பதற்காக, சம்பந்தப்பட்ட துறைகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமும் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், ஒவ்வொரு அலுவலகம் மீதும் கூறப்பட்டுள்ள புகாருக்கு, தகுந்த பதில்களை தயார் செய்யும்படி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட துறைகள், இதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் இது தொடர்பான விரிவான அறிக்கையை, விரைவில் தயார் செய்யவுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். 

பாலியல் வன்கொடுமை - மற்றுமொரு 'பாபா' பிடிபட்டார்.

உளவியல் ஆலோசனை பெறவந்த பதின்ம வயதுப் பெண்ணை தன் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்ட 26 வயது 'பாபா' ஒருவரை டெல்லி காவல்துறை நேற்றுகைது செய்துள்ளது. அப்பெண், தன் பணி உரிமையாளரால் பாலியல் கொடுமை அனுபவிப்பதிலிருந்து தப்புவதற்காகவே இந்த  'பாபா'விடம் ஆலோசனை பெற வந்தாராம்.

பாபா வாம் தேவ் ராம் எனப்படும் அவருக்கு பாம்தேவ் என்றும் ராம்ஜி மஹராஜ் என்றும் வேறு பெயர்கள் உள்ளனவாம். இந்தப் போலியை கடந்த செவ்வாயன்று பஞ்சாபி பாக் பகுதியில் காவல்துறை கைது செய்துள்ளதாக துணை ஆணையர் வி. ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

பெயர் குறிப்பிடப்படாத அந்த 18 வயது இளம்பெண் தன் பணியகத்தில் பாலியல் தொல்லைக்குள்ளானதால், பாபாவிடம் மனோ ஆலோசனை பெற வந்தபோது, வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்தாற்போல் தன்னிலை ஆனதாகவும்  'பாபா'வும் தன்னை வன்புணர்ந்ததாகவும் காவல்துறையில் கடந்த  மே மாதமே முறையிட்டுள்ளார். 

பன்னிரெண்டாவது வரை படித்துவிட்டு, பகவத் கீதை, ராம் கதா, ஆகியவற்றை சொற்பெருக்குச் செய்து பிரபலமடைந்த பாபாவை   ஆள் கடத்தல் வழக்கில்  ஜார்க்கண்டின் சிமேட்கா  நகர காவல்துறை கடந்த 2006 ஆம் ஆண்டே  கைது செய்ததும், பின்னர் அவரை கூட்டுவன்புணர்வு வழக்கொன்றில் ராஞ்சி நகர காவல்துறை தேடி வருவதும், குறிப்பிடத்தக்கது. 

ஜார்கண்டிலிருந்து மலைவாழ் இளம்பெண்களை வேலைவாய்ப்பு ஆசை  காட்டி டெல்லிக்கு அனுப்பும் வழக்கம் கொண்டிருந்த பாபா, அவர்களுக்காக மனோ ஆலோசனை மையம் என்ற பெயரில் துஷ்பிரயோகம் செய்வந்துள்ளதாகவும் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றம், மசூதிக்குள் வெள்ளம் புகுந்து நாசம்!

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள மசூதிக்குள் வெள்ளம் புகுந்து நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், தேங்காய்ப் பட்டணம் கடற்கரை பகுதிகளில் நேற்று கடல் சீற்றம் காணப்பட்டது. கடல் அலைகள் 60மீட்டர் உயரத்திற்கு எழும்பியதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகுகள் மாயமானது.
தேங்காய்பட்டணம் புத்தன்துறை சாலையில் கடல் நீர் புகுந்து நாசப்படுத்தியதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

தேங்காய்பட்டணம் கடற்கரையில் இருந்த மசூதி ஒன்றுக்குள் கடல் நீர் புகுந்து நாசப்படுத்தியது. அப்பகுதியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் கடற்கரையோர மீனவர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். மீனவர்கள் இரவில் வீட்டில் தங்க பீதி அடைந்து சர்ச் வளாகத்தில் தங்கி வருகின்றனர்.
கடல் சீற்றம் சற்று குறைந்திருப்பினும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் இன்னும் முழுமையாக விலகவில்லை.

என் சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவையே: மு.க.அழகிரி

நான் மற்றும் என் குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துகள் சட்டத்துக்குட்பட்டு வாங்கியவைதான் என மத்திய அமைச்சர். மு.க. அழகிரி கூறியுள்ளார். ஊடகங்கள் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க. அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.

என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன். இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.