அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label histroy. Show all posts
Showing posts with label histroy. Show all posts

Tuesday, December 6, 2011

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும் .

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
 
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்-யை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
 
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது.
 

Wednesday, October 26, 2011

கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்!!!


பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத 
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை!!!



கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை  இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்

Wednesday, July 13, 2011

பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் தங்கக் குவியல்?

திருவனந்தபுரம் பதமாநாப சுவாமி கோயிலின் குளத்திலும் தங்கக் குவியல் உள்ளதாக திருவாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.

நீண்ட நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்த திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றைத் திறக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் குழுவினர் ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். பி அறையை தவிர மற்ற நிலவறை தவிர மற்ற 5 ரகசிய அறைகளும் அடுத்தடுத்து திறக்கப்பட்டன. அவற்றில் பழங்கால அரிய வகை தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல லட்சம் கோடி மதிப்பு பெறும் பொக்கிஷங்கள் இருந்தன. இவற்றின் இன்றைய மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் எனக் கூறப்படுகிறது.
 

இதற்கிடையே 150 வருடங்களாக திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்த பி அறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அறையின் பெரிய மரக்கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்ற போது அங்கு மேலும் பல்வேறு அடுக்கு அறைகளை கொண்டு காணப்பட்டது. மேலும் பி அறையை திறப்பதற்கு மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையைத் திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். ஆனாலும் பி அறையை திறக்க நீதிபதிகள் குழு முயற்சி மேற்கொண்டனர்.
 

இதை எதிர்த்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த அறையை திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளனர். 


இந்நிலையில் பத்மநாப சுவாமி கோயிலின் தெப்பக்குளத்திலும் தங்கக் குவியல் இருப்பதாக திருவாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பிரதாப் கிழக்கே மடம் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு ஆகம விதிகளின்படி கட்டப்பட்டதாகும். 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோயிலைச் சுற்றி 9 கோட்டைகளும் உள்ளன. முக்கிய வாசல் முன்பாக உள்ள பத்ம தீர்த்த குளத்தில் 9 கல் மண்டபங்கள் உள்ளன.

பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள 5 அறைகளில் நகை குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. பி அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள் உள்ளன. 3 அறைகள் குளத்துக்குள் அமைந்துள்ள கிணறுகளாக உள்ளன. இந்த கிணறுகளே 3 ரகசிய அறைகளாக இருந்துள்ளன.

திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலகிராம் புனித கற்கள் கொண்டு வரப்பட்டு இங்கு மூலவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பின்பு மீதமுள்ள சாலகிராம் கற்களும் நகைகளும் பத்ம தீர்த்த குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே ரகசிய பாதாள நிலவறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது போல பத்மதீர்த்த குளத்தின் கிணறுகளிலும் பல கோடி மதிப்பிலான பொற்குவியல் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, January 29, 2011

ரஷியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம்!

ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம்.

இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.

பிபிசி தொலைக்காட்சியில் ‘Tracking The Aryans’ என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார்.

இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார்.

இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை ‘விசிட்டிங்’ பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(tt)

வைரத்தின் வரலாறு....

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?
பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.

இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?
இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?
ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.

உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே,அதனை விளக்கவும்?
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மைHardness என்கிறோம்.

வைரத்தில் தோஷம் என்றால் என்ன ?
அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?
தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.


Tuesday, December 7, 2010

பாப்ரி மஸ்ஜித்:துயர நினைவலைகளின் பதினெட்டாவது ஆண்டு..

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மத சகிப்புத் தன்மையின் மார்பை பிளந்து இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும் இறையில்லமுமான பாப்ரி மஸ்ஜிதின் குவிமாடங்களை ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இடித்துத் தள்ளிய இருளான நினைவலைகளுக்கு இன்று பதினெட்டாவது ஆண்டு.

பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் மஸ்ஜிதை அது நிலைப்பெற்றிருந்த இடத்திலேயே கட்டுவோம் என்ற மத்திய அரசின் வாக்குறுதி இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு சங்க்பரிவார தலைவர்கள்தான் காரணம் என லிபர்ஹான் கமிஷன் கண்டறிந்த பிறகு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் நீண்டகாலமாக காத்திருப்பிற்கு பின் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்போ வரலாற்று உண்மைகளை நிராகரித்துவிட்டு ஆதாரங்களுக்கு பதிலாக புராணங்களுக்கும், புரட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த சந்தேகங்களை தேசத்திற்கு அளித்தது.

வரலாற்றின் மீது சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தும் அத்துமீறல்களுடன் ஆட்சியாளர்கள் மற்றும் நீதிபீடத்தில் வீற்றிருப்போரின் குற்றகரமான பாரபட்ச முடிவுகளும் பாப்ரி மஸ்ஜித் குறித்த நினைவுகளை வேதனைக்குரியதாக மாற்றுகிறது.


நீண்ட 60 ஆண்டுகால காத்திருப்பின் இறுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வெளியிட்ட 'பாகப் பிரிவினை தீர்ப்பு' இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக தகவல்கள் உறுதிச்செய்கின்றன.

தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான நடவடிக்கைகள் ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைமையில் நடந்துவருகிறது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் எனக்கோரி போராட்டங்களை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன முஸ்லிம் அமைப்புகள்.

செய்தி:தேஜ

ஹிஜ்ரீ பிறந்த வரலாறு....


ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன் அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நம்மில் மிகப் பெரும்பாலானவர்கள் அதைப் படித்துவிட்டு, ஹிஜ்ரீ விபரங்களை மட்டும் காஃபி ஃபில்டரில் கவனமாய் வடிகட்டிவிட்டு நிகழவிருக்கும் விசேஷத்தின் ஆங்கில ஆண்டு, மாதம், நாள் ஆகியனவற்றை மனதில், டைரியில், காலண்டரில், சுவற்றில், செல்ஃபோனில் இப்படி எங்காவது குறித்து வைத்துக் கொள்வோம்.

நோன்பு, அதைத் தொடரும் பெருநாள், ஹஜ் இதெல்லாம் ஹிஜ்ரீ ஆண்டுடன் சம்பந்தப்பட்டவை என்பது மட்டும் ஏறக்குறைய நம் அனைவருக்கும் தெரியுமே தவிர மற்றபடி அதற்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது.

ஆங்கில ஏகாதிபத்தியம் பரவி, உலக நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளை ”நல்லதுக்கும் கெட்டதுக்கும்” ஆதர்ச நாயகனாய் ஏற்றுக் கொண்டபின் அவர்களது காலண்டரும் உலகிலுள்ள பெரும்பாலான சமூகத்திற்கு அடிப்படையான நாள்காட்டியாகி விட்டது. முஸ்லிம் சமூகங்களும் “ஊரோடு ஒத்துவாழ்” என்று அப்படியே ஏற்றுக் கொண்டன. “ஹேப்பி நியூ இயர்” என்றால் அது சனவரி 1!

என்றாலும், சம்பிரதாயமோ, அவசியமோ, முஸ்லிம்களே அக்கறை செலுத்தாவிட்டாலும் அவர்களுடைய வாழ்வில் ஹிஜ்ரீ ஓர் அங்கம். அதனால்தான் விட்டகுறை தொட்ட குறையாக போஸ்டர்கள், காலண்டர்கள், அழைப்பிதழ்கள் என்று ஹி.!

ஹிஜ்ரீ துவங்கி 1432 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது ஏன், எப்படி என்பதை அறிந்து கொள்ள ஹிஜ்ரா பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஹிஜ்ரா?

அனைவருக்கும் புலம்பெயர்தல் தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமே அந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்து ஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது.

கையை இறுகப் பற்றிக்கொண்டால் 1432 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று மக்காவை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதுக்கு அப்பொழுது 40 வயதிருக்கும். அனாச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தது அரேபியா. அவற்றையெல்லாம் பார்த்து வெறுத்து ஓதுங்கி, மனைவியும் மக்களுமாய்த் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். திடீரன்று ஒருநாள் வானத்திலிருந்து வந்திறங்கினார் வானவர் தலைவர் ஒருவர் - ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்). "எல்லாரையும் எல்லாவற்றையும் படைத்தவன் யார்?" என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை தேடிக் குகையில் அமர்ந்திருந்த முஹம்மதுவைத் தட்டியெழுப்பி, கட்டிப்பிடித்து இறுக்கித் தழுவி, ”இன்றிலிருந்து தாங்கள் இறைத்தூதர்” என்ற செய்தியையும் குர்ஆன் வசனங்கள் ஐந்தையும் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

முஹம்மது, நபித்துவம் வழங்கப்பெற்ற தூதரானார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆரம்பித்தது மனித குலத்தில் ஒரு திருப்பம்.

சிலை வணக்கம், அது சார்ந்த சாஸ்திரம், சம்பிரதாயம் இது எதுவும் கிடையாது, ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன்தான் அனைத்தையும் படைத்தான், பரிபாலிக்கிறான், முடித்து வைப்பான், தீர்ப்பு வழங்குவான், மறுமை துவங்கும் என்றெல்லாம் பேச ஆரம்பித்ததும், பலர் சிரித்தார்கள், மிகச் சிலர் “அப்படியா? ஏக இறைவன் ஒருவன்தானா? நீங்கள்தான் அவனது நபியா? எனக்கு நியாயமாய்ப் படுகிறது, ஏற்றுக்கொண்டேன்,” என்றார்கள்.

சிரித்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. நாளாக நாளாகக் கோபம் பெருக்கெடுத்தது. “இதென்ன இந்த மனிதர் புதிதாய்க் குழப்பம் விளைவிக்கிறார்? இவரை ஏற்றுக் கொண்டவர்களைக் கொடுமைப் படுத்தினால் வழிக்கு வருவார்கள்,” என்று துவங்கியது கொடுமை. அது எழுத்தில் எழுதி மாளாத கொடுமை!

“ஒரே இறைவன், முஹம்மதே இறுதி நபி,” என்று சொன்ன காரணத்திற்காக ஒருவரை, அதுவும் ஒரு பெண்ணை, அவருடைய பிறப்புறுப்பிலேயே ஈட்டி செருகிக் கொல்லுமளவுப் பெருங்கொடுமை தலைவிரித்தாடியது மக்காவில்.

இஸ்லாத்தை ஏற்ற சின்னஞ்சிறுக் கூட்டம், மக்கா நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பென்னம்பெரிய கூட்டத்தினரிடம் மிதி, உதை பட்டது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். பொறுமையின் எல்லைக்கு விரட்டப்பட்ட அவர்களில் சிலர், நபியவர்கள் அனுமதியின் பேரில் சொத்து, சுகம், நிலம் ஆகியனவற்றை மக்காவில் விட்டுவிட்டு, எடுத்துச் செல்ல முயன்ற சுமையோடு அபீஸீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அன்றுதான் ஆரம்பித்தது ஹிஜ்ரா. முதல் ஹிஜ்ரா.

நாமறிந்த புலம் பெயர்தலெல்லாம் இன்றும் சர்வ சாதரணமாய் நடப்பதுதான். தொழிலுக்காக, வேலைக்காக, சொகுசுக்காக, திருமணத்திற்காக இப்படியான ஏதோ ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஊர்தோறும் புலம்பெயர்தல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதிலெல்லாம் ஏதும் விசேஷமில்லை.

ஆனால் இஸ்லாத்தில் ஹிஜ்ரா என்பது மட்டும் சிறப்பு! தனிச் சிறப்பு!

இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொண்டு அவனைத் தொழ, வழிபட என்று ஆரம்பிக்கும்போது தனிமனித சுதந்தரம் என்பதெல்லாம் கெட்ட சொல்லாய் மாறி, அட்டூழியம் நிகழ்கிறதே, வழிபாட்டு உரிமையெல்லாம் தடுக்கப்படுகிறதே, அதற்கு இணங்கிவிடாமல், இறைவனுக்காகத் தனது அனைத்தையும் துறந்து அந்தத் தனிமனிதன், தனது உறவுகள், உடமைகள், சொத்துகள் என அனைத்தையும் துறந்து, தான் பிறந்த மண்ணிலிருந்து வெளியேறுவதுதான் ஹிஜ்ராவிற்கு தனிச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது. அவனுக்காக, அந்த ஒரே இறைவனுக்காக, சட்டென்று அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பிவிடுவதுதான், உலக மகாச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது.

எந்த அளவிற்கு?

குழந்தையாய், பிறந்த பச்சிளங் குழந்தையாய் புதிதாய் ஆகிவிடுகிறான் அம்மனிதன். அப்படியானால் அதுவரை அவன் செய்திருக்கக்கூடிய பாவம், தீங்கு? அதெல்லாம் துடைத்து எறியப்பட்டு, புதிசாய், புத்தம் புதிசாய் அவனுக்கு மறுபிறப்புத் தொடங்குகிறது. அதனால்தான் ஹிஜ்ரா புனிதம். ஏக இறைவன் நிர்ணயித்த புனிதம்.

முதலில் ஒரு குழு அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரா மேற்கொண்டது என்று பார்த்தோமா? அதற்கடுத்து முஸ்லிம்கள் மற்றொரு குழுவாய்க் கிளம்பி மதீனாவுக்குச் சென்றார்கள். அந்த முஸ்லிம்களுக்கெல்லாம் அது மிகப்பெரும் சிறப்பையும் தரத்தையும் அளித்தது. பட்டமாய் ஒட்டிக்கொண்டது. ஹிஜ்ரா அவர்களின் தரச் சான்றிதழாய் மின்னியது. ஆஸ்கர், நோபல், இத்தியாதி என்று எதுவும் அதற்கு நிகரில்லை.

மக்காவிலோ நாளொரு வேதனையும், பொழுதொரு சோதனையுமாகத்தான் முஸ்லிம்களுக்கு வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. 13 ஆண்டுகள் ஆகியும் அது முடிவிற்கு வரவில்லை. மாறாய், குரைஷிகளின் அட்டகாசம் பெருகிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் மதீனாவில் உள்ள மக்கள் நபியவர்களுடன் அகபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அங்கு இணக்கமான சூழ்நிலை உருவானதும் சிறுகச் சிறுக முஸ்லிம்கள் அந்நகருக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஆரம்பித்தனர். நபியவர்கள் மட்டும் காத்திருந்தார்கள். ஆனால் நிலைமை நாளுக்குநாள் மோசமாகி, அவர்களைக் கொல்வதற்கே குரைஷிகள் தயாராகிவிட, நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து அனுமதி வந்தது. “புலம்பெயருங்கள்!”

தோழர்கள் வரலாற்றில் வாசகர்கள் படித்திருக்கலாம். இங்கு அதைச் சற்று விளக்கமாகப் பார்த்துவிடுவோம்.

oOo

அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியான தோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்று நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமே இருந்தனர்.

"விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது. இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.

அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து "உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்கள் நபியவர்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?"

"நான் புலம்பெயர எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது"

"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார் அபூபக்ரு.

"ஆம்! தோழமை"

அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால் அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.

"அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இரு ஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்"

"அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக் கொள்வேன்" என்றார்கள் முஹம்மது நபி.

இதென்ன பேச்சு? அப்படியெல்லாம் இல்லை, "இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை" என்றார் அபூபக்ரு.

"ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்ட விரும்புகிறேன்"

இறைவனின் தூதர், இறைவனுக்காகத் தான் அடைந்த துன்பம், மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள் என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதை எவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்த மாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, "தாத்துந் நிதாக்கைன் - வாரிரண்டு வனிதை" என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.

மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும் குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச் செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்கு மாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி. முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, "இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்" என்றும் தகவல் அறிவிக்கப்பட்டது.

நபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் - ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரது வீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனா நகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில் - இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து, பதுங்கிக் கொண்டார்கள்.

குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒரு பொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும். அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும்.

நபியவர்கள் தப்பித்துவிட்டார்கள் என்பதை அறிந்த குரைஷிகள் கூட்டம் மக்காவெங்கும் தேடிப்பார்த்து அவர்களைக் காணவில்லை என்றதும் வழித்தட வித்தகர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப் பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது. தேடித்தேடி பின்பற்றி, சரியாகத் தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு.

அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில் வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு.

"ஏன் அழுகை?" என்பதுபோல் அவரை இதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார்.

"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்"

திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டன நபியவர்களிடமிருந்து "வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான்.

மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப் பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது அவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டு விடுவார்கள்"

"இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ் இருக்க என்ன கவலை அபூபக்ரு?" எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மன நம்பிக்கை அது?

இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறினான், "நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்."

அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச் சிரித்து, "இங்கே பார், குகையின் வாசலை ஒரு சிலந்தி வலை அலங்கரித்துக் கொண்டிருப்பதை. அந்த வலைக்கு முஹம்மதைவிட வயது அதிகம் இருக்கும்" படு இலேசான படைப்பினத்தைக் கொண்டு, ஆளரவமற்ற பாழடைந்த குகை என்ற எண்ணத்தை பராக்கிரம எதிரிகளின் மனதில் ஏற்படுத்தி, வெகு சுலபமாய் அற்புதம் நிகழ்த்தினான இறைவன். யார் அறிவார் அவன் வீரர்களை?

ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருந்தது. "அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக் காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது"

அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன் இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்ம வயதுச் சிறுவர். பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ். பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன, எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில் படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகு பொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப் பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது.

அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னு ஃபுஹைரா. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர். இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும் உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையை ஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தட வித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்கு ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவே அப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள் கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப் போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்கு அடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள, இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது - ஹிஜ்ரீ பிறந்தது.

ஆனால், ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

oOo

ஸஃபர் மாதம் 27இல் துவங்கியது பயணம். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் யத்ரிப் வந்தடைய அந்நகரம் மதீனத்துந் நபவீ - நபி புகுந்த பட்டணம் – என்ற புதுப்பெயருடன் புதுவரலாற்றிற்குத் தயாரானது. நவீன போக்குவரத்து இல்லாத காலகட்டமில்லையா? தவிரவும் பின்தொடரும் மக்கத்துக் குரைஷிகளிடமிருந்து தப்பிக்க சுற்றுவழியில் பயணித்து அவர்கள் ஒட்டகத்தில் மதீனா வந்தடைய ஒருமாத காலம் ஆகிப்போனது.

ஹஜ்ஜுக்குச் செல்ல நேரிடும்போது, மக்கா-மதீனா நாலரை மணி நேர பஸ் பிரயாணத்தின்போது எட்டரை மணி நேரம் அதிகப்படியாகக் காத்திருக்க நேர்ந்தால், நபியவர்களின் அந்தப் பயணத்தை அசைபோட்டுக் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கிவிடலாம். கனவில் ஓரிரு சொட்டு நீரும் சுரக்கலாம்.

அதன்பிறகு, மக்காவிலிருந்து ஏனைய முஸ்லிம்கள் சிறுகச் சிறுக மதீனா வந்து சேர்ந்தார்கள். பிற்பாடு, அபீஸீனியாவிலிருந்த மற்ற முஸ்லிம்களும் மதீனாவிற்குக் கிளம்பி வந்துவிட்டார்கள்.

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்கரு ரலியல்லாஹு அன்ஹு ஏறத்தாழ இரண்டரை ஆண்டு ஆட்சி செலுத்திவிட்டு மறைய, அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

பிறகு கலீஃபாவாய்த் தலைமை ஏற்றுக்கொண்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. இந்த முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமும் அதன் ஆளுமையும் அரேபியா நாட்டு எல்லையைக் கடந்து பரவ ஆரம்பித்தன. இஸ்லாமிய வரலாறும் வளர ஆரம்பித்தது! வரலாறு வளர்ந்தால் குறிக்கப்படவேண்டுமில்லையா? அப்பொழுது அவர்களிடம் தேதி உண்டு, மாதம் உண்டு. ஆண்டு?

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

உமர் பின் கத்தாப் ஆட்சி செலுத்த ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். ஒருநாள் அவருக்குக் கடிதம் ஒன்று வந்தது. எழுதியவர் எத்துணைப் பெரிய ஒரு விஷயத்திற்குத் தனது கடிதம் வித்திடப்போகிறது என்பதை அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது, அது வெறும் குசலம் விசாரிக்கும் கடிதமா, நிர்வாகம் சம்பந்தப்பட்டதா என்பதெல்லாம் இங்கு முக்கியமில்லை. ஷஃ'பான் மாதம் இத்தனாம் தேதி என்று குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்த உமர், “ஷஃ'பான் மாதம் என்றால்? கடந்த ஷஃ'பானா? அடுத்த ஆண்டின் ஷஃ'பானா? இந்த ஆண்டின் ஷஃ'பானா?,” என்றார்.

எந்த ஆண்டு என்று தெரிய வேண்டாமா? எப்படி நிர்ணயிப்பது? மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன் தோழர்களையும், மதீனாவின் அன்ஸாரீத் தோழர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார் உமர்.

“நம் மக்களுக்காக ஆண்டு நிர்ணயம் செய்ய வேண்டும். எங்கிருந்து நம் வரலாற்றை ஆரம்பிப்பது? உதவுங்கள்.”

ஒருவர் ”ரோமர்களின் ஆண்டை உபயோகித்துக் கொள்ளலாமே” என்று தெரிவித்தார்.

”அட, அவர்கள் துல்கர்ணைன் காலத்திலிருந்து அல்லவா கணக்கு வைத்துள்ளார்கள். நமக்கு அது சரிபட்டு வராது,” என்று அந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

மற்றொருவர் பாரசீகர்களின் ஆண்டை உபயோகிக்கலாமே என்றதும், ”அது சரி, அவர்களுக்கு ஒவ்வொரு முறை ஒரு மன்னன் தேர்ந்தெடுக்கப்படும் போது, கர்ம சிரத்தையாய் முந்தைய மன்னனின் ஆண்டுக் கணக்கை கழித்துக் கட்டுவதுதான் வேலை. அதெல்லாம் சரிப்படாது,” என்று சொல்லிவிட்டார்கள். நமது அரசியல் கட்சிகளை மெச்சிக்கொள்ளலாம் போலிருக்கிறது. முந்தைய அரசின் திட்டங்களைத்தான் சொதப்புகிறார்கள். நல்லவேளையாக காலண்டரில் கைவைப்பதில்லை!

”எதற்கு அங்கேயும் இங்கேயும் தேடிக்கொண்டு? நமக்கு வாழ்வும், வழிகாட்டலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த வந்தது. இதையும் அவர்களிடமிருந்து பெற வேண்டியதுதான்,” என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்.

”ஆம், அதுதான் சரி,” என்ற கருத்து வலுப்பெற்றதும் நபியவர்களின் வரலாற்றிலிருந்து நான்கு முக்கிய நிகழ்வுகளைத் தோழர்கள் குறிப்பிட்டனர்.

ஒன்று, நபியவர்கள் பிறந்த ஆண்டு, அடுத்தது அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய ஆண்டு, அடுத்தது அவர்களது ஹிஜ்ரா, கடைசியாக அவர்கள் இறந்த ஆண்டு. இதில் எந்த நிகழ்வை அடிப்படையாக அமைத்துக் கொள்வது என்று அடுத்தபடியாகத் தொடர்ந்தது விவாதம்.

நபியவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதில் தோழர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதைப் போலவே அவர்கள் எந்த ஆண்டு தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்கள் என்பதிலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது.

அவர்கள் இறந்த ஆண்டு என்றாலோ அதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கு ஆற்றமாட்டா துயர். அவர்களின் இழப்பு அவர்களுக்கு சோகத்தை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வு. அன்றைய நாள் அவர்களுக்கு உலகமே இருண்டு போனதைப் போலான ஒன்று. எனவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

“மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபியவர்கள் புலம் பெயர்ந்ததே நமக்கெல்லாம் மிக முக்கிய நிகழ்வு. நமது வரலாறு அங்கிருந்துதான் பெரிய திருப்புமுனையை அடைந்தது. அங்கிருந்து ஆரம்பிப்போம்,” என்று இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் கலந்தாலோசித்தார் உமர். “ஷிர்க்கில் மூழ்கியிருந்த நகரைவிட்டு நபியவர்கள் வெளியேறிய நாளிலிருந்தே முஸ்லிம்களின் ஆண்டிற்கான ஆரம்பம் அமையவேண்டும், அதுவே சரியானதாக இருக்கும்” என்பது அலீயின் ஆலோசனை.

அப்படியே முடிவானது!

ஆனால், நபியவர்களின் ஹிஜ்ரா பயணம் துவங்கியதோ ஸஃபர் மாதம். அது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாம் மாதம். அவர்கள் மதீனாவில் நுழைந்ததோ ரபீஉல் அவ்வல். அது மூன்றாம் மாதம். பிறகு முஹர்ரம் எப்படி முதல் மாதமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அதற்கான காரணத்தை விவரித்துள்ளார்கள். ”ஸஃபர் மாதம் பிரயாணம் துவங்கியிருந்தாலும், புலம்பெயர்வதற்கான உறுதியான தீர்மானம் முஹர்ரம் மாதமே உருவாகியது. ஹிஜ்ரா மேற்கொள்ள முன்னோடியாய் அமைந்த இரண்டாம் அகபா உடன்படிக்கை துல்ஹஜ் மாதம் நிகழ்வுற்றது. அதற்கடுத்த மாதமான முஹர்ரமில்தான் ஹிஜ்ரா எண்ணம் உறுதியானது. எனவே அதுவே இஸ்லாமிய ஆண்டிற்குப் மிகப் பொருத்தமான முதல் மாதமாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது.”

ஹிஜ்ரீ ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்திய காலகட்டம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம். அதில் ஹிஜ்ரீ ஆண்டின் நிர்ணயம் மிக முக்கியத் தீர்மானம். எல்லை தாண்டி விரிவடைந்து கொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திலுள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்க அது பேருதவி புரிந்தது.

இன்று ஹிஜ்ரீ 1432ஆம் ஆண்டு என்றால் அது வெறும் எண் அல்ல. அதன் துவக்கத்தில் இஸ்லாமிய வரலாற்றின் வேர் படர்ந்திருக்கிறது; தியாகங்களின் வரலாறு ஒளிந்திருக்கிறது!

-ஆக்கம் : நூருத்தீ

Sunday, October 31, 2010

பாபைர பின்பற்றுவோம் வாருங்கள்



 



கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்
பாபர் நாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.


ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
source : நான் தான் பாபரி பேசுகின்றேன் -ஆடியோ இலக்கிய சோலை வெளியீடு   

Thursday, October 28, 2010

அந்தமான் சிறைச்சாலை

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்று தேசபக்தர்களை நாடுகடத்தியதாகும். நாடு கடத்தப்பட்ட அவர்கள் அந்தமானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். சிப்பாய்க்கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் 1857 ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு அந்தமான் தீவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டனர். வனாந்தரக் காட்டில் அனாதையாக விடப்பட்டவர்கள் வனவிலங்குகளுக்கு இரையாவார்கள் என்றும், பழங்குடி மக்களால் கொல்லப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்தனர் ஆங்கிலேயர்கள். பல கைதிகள் செத்து மடிந்தனர். பல கைதிகள் இந்தோனேஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியிருந்த கைதிகளை பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த ‘காசிம்’ என்ற இஸ்லாமிய வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை கட்டுமானப்பணி 1896 ம் ஆண்டு தொடங்கி 1906 ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். வகாபி இயக்கம், மாப்ளா இயக்கம், ராம்பா இயக்கம், கதார் புரட்சி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தலைவர்கள் இதில் முக்கியமானவர்கள். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். காற்றோட்டமோ, வெளிச்சமோ இல்லாத காரணத்தால் பல கைதிகள் மரணமடைந்தனர். இவ்வளவு சித்திரவதைகளுக்கும் சாட்சியான அந்த சிறைச்சாலை அந்தமானில் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது

Saturday, October 23, 2010

மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு!


ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மம்மியும் 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோளுக்கு இணங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு Prof.Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. Prof:.Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும் அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார்.

அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

Prof.Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது.

மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது.

எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.

Sunday, October 17, 2010

கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II



நியாண்டர்தல் மனிதர்கள் (Neandertals or Neanderthals) - நமக்கும் குரங்கிற்கும் இடைப்பட்டவர்கள் இல்லை:

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "நியாண்டர்தல் மனிதர்கள் அறிவில் மனிதர்களை விட குறைந்தவர்கள் என்று கூட கேள்விப்பபட்டிருக்கின்றோமே?" என்றும் கேட்கலாம்.

ஆம், நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எந்த அளவுக்கு என்றால், நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்னோர்கள் என்ற கூற்று போய் இப்போது இவர்களுக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் என்று கூறும் அளவிற்கு....



"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் ஏன் குரங்குகள் இருக்கின்றன?" என்று பரிணாமவியலாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினால், உடனே "உங்களுக்கு பரிணாமம் பற்றி தெரியவில்லை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாறாக நமக்கும் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர்" என்று பதில் சொல்லுவார்களே, அதுபோலத்தான் இப்போது மனிதனிற்கும் நியாண்டர்தல் மனிதர்களுக்கும் உள்ள உறவை விளக்குகின்றனர் பரிணாமவியலாளர்கள்.

"Neandertals (Homo neanderthalensis) are currently believed to be our closest evolutionary relatives. Although some researchers once thought they were our immediate ancestors in Europe, most now agree that Neandertals and modern humans most likely shared a common ancestor within the last 500,000 years, possibly in Africa." --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org
நியாண்டர்தல் மனிதர்கள் பரிணாமப்படி நமக்கு நெருங்கிய உறவினர்களாக நம்பப்படுகின்றார்கள். அவர்கள் நம்முடைய immediate மூதாதையர் என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டிருந்தாலும், இப்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மனிதர்களும் தற்காலத்திய மனிதர்களும் பொதுவான மூதாதையர்களை கொண்டிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றனர் --- (Extract from the original quote of) The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org

நியாண்டர்தல் மனிதர்களில் இருந்து நாம் வந்ததாக இந்த பதிவை படிக்கும் வரை நீங்கள் நினைத்திருந்தால் (Ape like creatures --> Neandertals --> Modern Humans) இன்றோடு அந்த நம்பிக்கையை புதைத்து விடுங்கள். நமக்கும் அவர்களுக்கும் பொதுவான மூதாதையராம் (Common Ancestor --> Neardertals & Common Ancestor --> Modern Humans).

அது சரி, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக நியாண்டர்தல்களை காட்டி பரிணாமத்திற்கு இது ஆதாரம் என்று சந்தோஷப்பட்ட பரிணாம உலகத்திற்கு இந்த பலத்த அடி எப்படி ஏற்பட்டது?

இதற்கு விடைக்காண நீங்கள் நியாண்டர்தல் குறித்த ஆய்வுகளை உற்று நோக்கினால் பரிணாமவியலாளர்களுக்கு அப்படி ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணரலாம்.

முதலில், யார் இவர்கள்?

1829 ஆம் ஆண்டே நியாண்டர்தல் படிமங்கள் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகள் கற்கால மனிதர்களின் படிமங்களாக அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் தான் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்த படிமங்கள் நியாண்டர்தல்-1என்று அழைக்கப்பட்டன.

1886 ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் கிட்டத்தட்ட முழுமையான இரண்டு நியாண்டர்தல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல நியாண்டர்தல் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தல்கள், சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர். அதாவது இந்த இனம் சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டது. எப்படி அழிந்தன?...பதிவின் இறுதியில் பார்ப்போம்.

சரி, நியாண்டர்தல்களுக்கும் தற்காலத்திய மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

உடலளவில் வித்தியாசங்கள் உண்டு. நியாண்டர்தல்களின் உயரம் தற்காலத்திய மனிதனை விட சுமார் 5-6 இஞ்சுகள் குறைவு. இதையே 20,000 ஆண்டுகள் முந்தைய ஐரோப்பிய மனிதர்களோடு ஒப்பிட்டால் நியாண்டர்தல்களும் அந்த மனிதர்களும் ஓரே மாதிரியான உயரம்தான். நியாண்டர்தல்கள் திடமான உடலமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள். அவர்களுடைய மண்டை ஓடு பெரியதாகவும், மூளை தற்காலத்திய மனிதர்களோடு ஒப்பிடுகையில் சற்று பெரிதாகவும் இருந்துள்ளது.

மனிதர்களுக்கு முன் வந்தவர்களா நியாண்டர்தல்கள் ?

இல்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித படிமங்கள் காணக்கிடைக்கின்றன. நியாண்டர்தல்களோ சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைந்திருக்கின்றனர். ஆக, ஒரே காலக்கட்டத்தில் இருவரும் வாழ்ந்திருக்கின்றனர்.

"A few years ago, they [Neandertals] were thought to be ancestral to anatomically modern humans, but now we know that modern humans appeared at least 100,000 years ago, much before the disappearance of the Neandertals. Moreover, in caves in the Middle East, fossils of modern humans have been found dated 120,000-100,000 years ago, as well as Neandertals dated at 60,000 and 70,000 years ago, followed again by modern humans dated at 40,000 years ago. It is unclear whether the two forms repeatedly replaced one another by migration from other regions, or whether they coexisted in some areas " --- Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006.
சில வருடங்களுக்கு முன்னால், அவர்கள் (நியாண்டர்தல்) உடல்ரீதியாக தற்காலத்திய மனிதர்களுக்கு முன்னோர்களாக கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது நமக்கு கிடைக்கும் தகவல்படி, தற்காலத்திய மனிதர்கள் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கின்றார்கள், அதாவது நியாண்டர்தல்கள் மறைவதற்கு பல காலங்களுக்கு முன்னராகவே.
அதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் உள்ள குகைகளில், 120,000-100,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும், 60,000-70,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தல்களின் படிமங்களும், பிறகு மறுபடியும் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வகைகளும் மாறி மாறி குடியேறினார்களா அல்லது இருவரும் சேர்ந்தே வாழ்ந்தார்களா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது --- (Extract of the original quote of) Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006.

நியாண்டர்தல்கள் மனிதர்களுக்கு முன்வந்தவர்கள் என்றால் அல்லது குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்றால், எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க முடியும்?....இது முதல் அதிர்ச்சி....

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருந்தால் மிக சமீபத்திய ஆய்வு முடிவுகள் இன்னும் வியப்பை தரும். ஆய்வாளர்களுக்கோ இது ஒரு மிகப்பெரிய ஷாக். என்னவென்றால், மனிதர்களும் நியாண்டர்தல்களும் ஒன்றோடு கலந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கவேண்டும் என்பதுதான் அது.




தற்காலத்திய மனிதர்களின் மரபணுக்களில் (ஆப்ரிக்கர்கள் தவிர) 1-4% நியாண்டர்தல்களிடமிருந்து வந்துள்ளவாம். அதாவது நியாண்டர்தல்கள் அழிந்து விடவில்லை, அவர்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்களாம்.

"Researchers sequencing Neandertal DNA have concluded that between 1 and 4 percent of the DNA of people today who live outside Africa came from Neandertals, the result of interbreeding between Neandertals and early modern humans" --- Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.
நியாண்டர்தல் DNA வை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், ஆப்ரிக்காவிற்கு வெளியே வாழும் மனிதர்களிடம் 1-4% நியாண்டர்தல் DNAக்கள் இருப்பதாக முடிவு செய்திருக்கின்றனர். இது நியாண்டர்தல்களும் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களும் இணைந்ததால் ஏற்பட்டது --- (Extract from the original quote of) Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.

அது ஏன் தற்காலத்திய ஆப்ரிக்கர்களிடம் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் காணப்படவில்லை?...இதற்கு எப்படி விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், தற்காலத்திய மனிதர்கள் ஆப்ரிக்காவில் தோன்றியவர்களாம், நியாண்டர்தல்களோ ஐரோப்பாவில் தோன்றி ஆசியா வரை சுற்றியவர்களாம். மனிதர்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி மத்திய கிழக்கிற்கு குடியேறிய போது அங்கிருந்த நியாண்டர்களுடன் கலந்து விட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பியர்கள், ஆசியர்களது மரபணுக்களில் நியாண்டர்தல்கள் காணப்படுகின்றார்களாம். அதே சமயம் ஆப்ரிக்கர்களிடம் இவர்கள் காணப்படவில்லையாம்.

ஒரு நிமிஷம்........இந்த இருவரும் சேர்ந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கின்றார்கள் என்றால், பிறகு எப்படி நியாண்டர்தல்களை வேறு ஒரு உயிரினமாக பார்க்க முடியும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை மனித இனங்களில் ஒன்றாகத் தானே பார்க்கவேண்டும்?....

ஆம், அறிவியலாளர்கள் இப்போது இந்த கருத்தையும் ஆதரிக்க துவங்கியிருக்கின்றார்கள்.

மரபணு சோதனைகள் ஆரம்ப காலகட்டங்களில் இருப்பதால் பொறுத்திருந்து தான் இவை இன்னும் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

ஆக, குரங்கு போன்ற உயிரினத்திருக்கும் நமக்கும் இடைப்பட்டவர்கள் நியாண்டர்தல்கள் என்ற கூற்றும் தவறு, அதுபோலவே நியாண்டர்தல்கள் மனிதர்கள் அல்ல என்ற கூற்றும் தவறு....

நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களா?

இதுவும் ரொம்ப காலமாக நம்பப்பட்டு வந்த ஒன்று. அதாவது மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாம், நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாம். அதனால் தான் அவர்கள் அழிந்துவிட்டார்களாம்.

முதலில் அறிவில் குறைந்தவர்கள் (நியாண்டர்தல்), பிறகு அறிவில் சிறந்தவர்கள் (தற்காலத்திய மனிதர்கள்) என்று வந்திருப்பதால் இது பரிணாமத்திற்கு ஆதாரம் என்று காட்டினார்கள் பரிணாமவியலாளர்கள். அந்தோ பரிதாபம், அந்த ஆதாரமும் சுக்கு நூறாக நொறுங்கியிருக்கின்றது.

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், நியாண்டர்தல்களுக்கு பின்னர் வந்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகள் நியாண்டர்தல்கள் உருவாக்கிய கருவிகளை விட சிறந்தவை இல்லையாம். இது பரிணாமவியலாளர்களுக்கு மற்றொரு அடி.

"Research by UK and American scientists has struck another blow to the theory that Neanderthals (Homo neanderthalensis) became extinct because they were less intelligent than our ancestors (Homo sapiens). The research team has shown that early stone tool technologies developed by our species, Homo sapiens, were no more efficient than those used by Neanderthals" --- New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.
நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாக இருந்ததால் மறைந்து விட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு. மனிதர்கள் உபயோகப்படுத்திய ஆரம்ப கால கருவி யுக்திகள், நியாண்டர்தல்கள் உபயோகப்படுத்திய யுக்திகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இல்லை என்று இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது --- (Extract from the original quote of) New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.

இது மட்டுமா, இவர்கள் உடல் ஆபரணங்களை செய்திருக்கின்றார்கள், இறந்தவர்களை புதைத்திருக்கின்றார்கள், தாங்கள் வாழும் இடங்களை ஒழுங்குபடுத்திருக்கின்றார்கள் என்று பல...

சுருக்கமாக சொல்லுவதென்றால் இவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நியாண்டர்தல்கள் பேசினார்களா?

இது போன்ற கேள்விகளுக்கு படிம ஆதாரங்கள் மூலம் விடை கூறுவது கடினம். ஆனால், அவர்கள் பேசுவதற்குண்டான தகுதிகளை கொண்டிருந்தார்கள் என்கின்றன ஆய்வுகள். எப்படி?, மனிதர்கள் பேசுகின்றார்கள் என்றால் அதற்கு காரணமான மரபணுக்களில் FOXP2 என்ற மரபணு முக்கியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களின் இந்த மரபணுவில் உள்ள வேறுபாடுகள் அப்படியே நியாண்டர்தல் மனிதர்களிடமும் உள்ளனவாம்.

"Neandertals and modern humans share the same variant of the language gene FOXP2" --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org

அதனால் அவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"Genetic studies hint Neanderthals were equipped for language" --- Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177
மரபணு ஆய்வுகள் நியாண்டர்தல்கள் பேசுவதற்குரிய தகுதியை பெற்றிருந்ததாகதெரிவிக்கின்றன --- (Extract from the original quote of) Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177

சரி, எப்படி இவர்கள் மறைந்தார்கள்?

இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. பல்வேறு யூகங்கள் உள்ளன. மற்றொரு மனித இனத்தால் இவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், மற்ற மனிதர்களோடு இணைந்ததால் காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்பது போன்ற யூகங்கள்...

ஆக, நியாண்டர்தல் மனிதர்கள்,

  • தற்காலத்திய மனிதர்களோடு ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் நமக்கு முன்வந்தவர்களோ அல்லது குரங்கிற்கும் நமக்கும் இடைபட்டவர்களோ கிடையாது.
  • அவர்கள் மனித இனம் தான். முன்னர் எண்ணப்பட்டது போல அவர்கள் ape-like கிடையாது...
  • அறிவில் சிறந்து விளங்கியிருக்கின்றாகள்.
  • பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள்.


இனியும் உங்களிடம் யாரும் வந்து நியாண்டர்தல்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றோ, நமக்கும் குரங்கு போன்ற உயிரினத்திற்கும் இடைப்பட்டவர்கள் என்றோ, அவர்கள் அறிவுத்திறனில் நம்மை விட குறைந்தவர்கள் என்றோ கூறினால், ஆய்வு முடிவுகளை எடுத்துக் காட்டி விளக்கம் கொடுங்கள். அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக எடுத்து கூறுங்கள்.

நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே...அதுவெல்லாம் சுத்த non-s****....

இன்ஷா அல்லாஹ் இது பற்றி எதிர்கால பதிவுகளில்...

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
Picture - 1: Designed by Aashiq Ahamed
Picture - 2: As appeared in Science Daily magazine dated 26th August 2008.
Picture - 3: As appeared in Max Planck Institute's website

My sincere thanks to:
1. Max Planck Institute, Germany.
2. Science Magazine.
3. Science Daily.
4. Nature Magazine.
5. Scientific American.
6. Wikipedia.
7. New Scientist Magazine.

References:
1. A Draft Sequence of the Neandertal Genome - Science 7 May 2010: Vol. 328. no. 5979, pp. 710 - 722, DOI: 10.1126/science.1188021.
2. The Neandertal Genome - Sciencemag.com.
3. New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.
4. In praise of… Neanderthal man - The Guardian, Wednesday 13 January 2010
5. Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.
6. Creationist Arguments: A Neandertal in Armor? - FAQs, talkorigins.org.
7. Neanderthals and Humans Likely Interbred - K. Kris Hirst, dated 6th May 2010, archaeology.about.com.
8. The Neandertal Genome Project - The Max Planck Institute for Evolutionary Anthropology. www.eva.mpg.de.
9. Neanderthal genome reveals interbreeding with humans - Ewen Callaway, New Scientist, 6th May 2010.
10. Neandertals, Humans Share Key Changes To 'Language Gene' - Science Daily, 21st October 2007.
11. Neandertals have the same mutations in FOXP2, the language gene, as modern humans - 18th October 2007, anthropology.net.
12. Neanderthal 'make-up' containers discovered - BBC, 9th January 2010.
13. Welcome to the family, Homo sapiens neanderthalensis - New Scientist, Magazine issue 2760, 13th May 2010.
14. Neanderthals, Francisco Ayala, FOXP2 gene - Wikipedia.