அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, October 26, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை!!!



கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை  இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்
புரட்சிகரச் சிந்தனை
முவம்மர் கடாபி சிறுவயது முதலே புரட்சிகரச் சிந்தனை உள்ளவராக விளங்கினார் தான் பிறப்பதற்க்குச் சில வருடங்கள் முன்பு வரை தன் தாய்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டமும் அதில் உமர் முக்தார் போன்றோரின் தியாக வரலாறையெல்லாம் வாய்வழியாகக் கேட்டதும் ரஷ்ய கம்யூனிஸப்புரட்சியைத் தேடிப்பிடித்து படித்ததும் அக்காலகட்டத்தில் பாலஸ்தீன மன்னில் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் தங்களின் தந்திரத்தாலும் இங்கிலாந்தின் நூறுசதவித முழு ஆதரவுடனும் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற அரபு நாடுகளுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தததுமே அவரின் புரட்சிகரச் சிந்தனைக்கு வித்திட்டது எனலாம்
ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல்
லிபியாவை ஆண்ட இத்ரீஸ் மன்னர்
பல்லாண்டு காலமாக லிபியாவை தங்களின் காலனி நாடாக வைத்திருந்த இத்தாலி லிபியாவைச் சுதந்திர நாடாக்கி தாங்கள் நாட்டை விட்டு வெளியேற நினைத்தபோது மேற்க்கத்திய நாடுகளின் வழக்கப்படி தாங்கள் காலனி நாடுகளை விட்டு வெளியேறும்போது தங்களின் ஆதரவாளர் ஒருவரைப் பிடித்து பொம்மை அரசு ஒன்றை நிறுவி விட்டுப்போவார்கள் அது போல் இத்ரீஸ் என்ற மன்னரை நியமித்து விட்டுப் போனதாகவும் சில தகவல்கள் உண்டு இதற்க்கு நேர் எதிராக இத்ரீஸ் என்பவர் ஓர் மார்க்க அறிஞர் அவர் நல்ல முறையில் ஆட்சி நடத்தினார் என்பதாகவும் வரலாறுகள் உண்டு ஆக இத்ரீஸ் மன்னர் மார்க்க அறிஞராக இருந்தாலும் இத்தாலியின் பிரதிநிதி என்ற அளவில் செயல்பட்டுள்ளார் என்றே விளங்கமுடிகிறது இதன் உன்மை நிலையை அல்லாஹ் மிக அறிந்தவன் எப்படியிருந்தாலும் இத்ரீஸ் மன்னரின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிப்பணி பெரிதாக ஒன்றும் நடக்காமல் இருந்ததையும் இஸ்ரேல் என்ற குட்டி நாட்டுடன் மற்றுள்ள அரபுநாடுகள் பெரும் தோல்வியைச்  சந்தித்தையும் கண்ட ராணுவத்தின் உயர்பதவிகளில் இருந்த கடாபியும் அவரின் நன்பர்கள் சிலரும் ராணுவப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தார்கள் அவர்களின் கனவை நினைவாக்கும் விதத்தில் மன்னர் இத்ரீஸ் அவர்கள் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த போது தற்காலிகமாகப் பொருப்பில் இருந்த இத்ரீஸ் மன்னரின் மருமகன் சையது அர்ரிதா  அல்மஹ்தி அஸ்சுனசியை வீட்டுக்காவலில் வைத்து 1969 செப்டம்பர் 1ம் தேதி கடாபியும் அவரின் நன்பர்களும் சேர்ந்து கத்தியின்றி ரத்தமின்றி மன்னர் ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு ராணுவ ஆட்சியை நிறுவினார்கள்
அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள்
புரட்சி மூலம் அதிகாரத்திலேறிய கடாபி அதிரடியாகச் சில மாற்றங்களைச் செய்தார் லிபியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ராணுவத்தலங்களை உடனடியாக மூடினார் அதேபோல் 1970 ல் லிபியாவில் குடியேறியிருந்த இத்தாலியர்களை நாட்டை விட்டே வெளியேற்றினார் இதற்க்குப் பின்னர் லிபயாவின் எண்ணெய் வளங்களை நிர்வாகம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் லிபியாவிற்க்கு வழங்கும் 50% சதவீத லாபத்தை அதிகரிக்க வேண்டும் இல்லையென்றால் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தார் அவரின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த எண்ணெய் நிறுவனங்கள் லிபியாவிற்க்கு வழங்கிக் கொண்டிருந்த 50% சதவீதத்தை 79% ஆக அதிகரித்தது . லிபியா உத்தாலியின் காலனி நாடாகப் பல்லாண்டுகாலம் இருந்ததால் இத்தாலியக் கலாச்சாரத்தின் சில பிரதிபளிப்புகளை  தன்னுல் உள்வாங்கியிருந்தது அவையெல்லாவற்றையும் கடாபி துடைத்தெறிந்தார் அவற்றுள் ஆட்சிமொழியாக அரபுமொழியை அறிவித்தது ஹிஜ்ர காலண்டரை நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தவையும் அடங்கும்
அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி
கடாபி ஆரம்பகாலம் முதலே இஸ்ரேலைக் கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவராக இருந்தார் அதனாலேயே இஸ்ரேல் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் தங்களின் எதிரிகளின் பட்டியலிலேயே வைத்திருந்தார் அவர் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்ப்பதற்க்கு இதுமட்டுமே காரணமாக இருக்கவில்லை இஸ்லாத்தையும் கம்யூனிஸத்தையும் சேர்த்து உண்டாக்கிய அவரின் அரசியல் கொள்கையே இதற்க்கு மற்றொரு காரணம் எனலாம் அதனால் தான் உலகலவில் அமெரிக்காவை எதிர்க்கும்  பிடல்காஸ்ட்ரோ யூகோசாவேஸ் போன்ற அமெரிக்க எதிர்ப்பாளர்களுடன் அவர் நட்புறவு பாராட்டினார் அரபு நாடுகள் சிறிய சிறிய நாடுகளாக இருப்பதால் தான் உலகலவில் அரபுநாடுகளின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை என்று கருதிய அவர் அரபு நாடுகளையெல்லாம் ஒன்றினைத்து ஓர் மிகப்பெரும் சக்தியாக்கவேண்டும் எப்போதுமே அவரிடம் காணப்பட்டது அதனால்தான் அண்டை நாடான எகிப்துடன் லிபியாவை ஒன்றினைத்து ஒரே நாடாக ஆக்கிவிடுவோம் என்று அப்போதைய எகிப்து அதிபராயிருந்த அன்வர்சதாத்திடம் கூறி அப்படி இருநாடுகளையும் ஒன்றினைத்தால் அதிபராக நீங்கள் இருந்துகொள்ளுங்கள் நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொள்கிறேன் என்ற யோசனையை கடாபி அன்வர்சதாத்திடம் முன்வைத்தார் என்ன காரணமோ அது நடக்கவில்லை பின்னர் அத்திட்டத்தை கைவிட்ட கடாபி எகிப்தைத் தவிர மற்றுள்ள அண்டைநாடுகளுடன் அந்த திட்டத்தை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டார் அதனடிப்படையில் தான் 1984 ல் மோரித்தானிய மொராக்கோ அல்ஜீரியா துனிஷியா போன்ற நாடுகளுடன் லிபியாவை ஒன்றினைத்து ஒரே நாடாக ஆக்கும் மக்ரெப் ஒப்பந்த்த்தில் இந்நாடுகளெல்லாம் கையெழுத்திட்டன ஆனால் கடாபியின் அந்த முயற்ச்சியும் கைகூடவில்லை அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சிக்காக கடாபி சில தியாகங்களைக்கூடச் செய்திருக்கிறார் அது மிகையல்ல ஆம் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சிக்காக சிலகாலம் வெளிநாடுகளிலும் பல மாதங்கள் தலைமறைவாக்ககூட இருந்திருக்கிறார் அதன் தொடர்ச்சியாகத்தான் 1972 ல் மேஜர் ஜலுதை பிரதமராக கடாபி நியமித்தார் சில வருடங்களில் தன்னுடைய வேறு சில அதிகாரங்களையும் ஜலுதிடம் ஒப்படைத்த கடாபி ராணுவத்தின் சீப் கமான்டராகத் தொடர்ந்தார்
கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள்
                                                     
கடாபியை கவிழ்ப்பதற்க்கு இப்போது நடந்த புரட்சி மட்டுமல்ல இதற்க்கு முன்பும் பல தடவைகள் புரட்சி மேற்கொள்ளப்பட்டன கடாபியின் சில உயர் அதிகாரிகள் செய்த சதியை எகிப்தின் உளவுப்பிரிவு கண்டுபிடித்து முறியடித்தது அதிலிருந்து தான் கடாபி உயர்அதிகாரிகளை விட குடும்பத்தினருக்கு அதிகாரங்களைக் கூடுதலாக வழங்கினார் அதேபோல் 1980 ஆகஸ்ட் மாதம் லிபியாவின் ராணுவத்தினர் சிலர் உண்டாக்கிய கலவரத்தை மிகக்கடுமையாக கடாபி அடக்கியிருக்கின்றார் இதுபோல் தனக்கெதிராகச் செயல்படும் எல்லோரையும் கொள்வதற்க்காகவே உள்நாட்டிலும்  வெளிநாட்டிலும் பல கூலிப்படைகளை கடாபி உருவாக்கி வைத்திருந்தார் தனக்கெதிராக யாரும் களமிறங்கக்கூடாது என்பதற்க்காக்கல்வி நிலையங்கள் அரசு அலுவகங்கள் உட்பட நாட்டின் எல்லா இடங்களையும் கண்காணிப்பதற்க்கென்றே சிறப்பு உளவுப்படைகளை கடாபி வைத்திருந்தார் 

No comments: