அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 9, 2011

விக்கிலீக்ஸ்:பல அரபு உயரதிகாரிகள் சிஐஏவின் ஒற்றர்கள்..

கெய்ரோ,ஜன.6:விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸன்ஜே அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில்,அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு சார்பாக அரபுலகின் உயரதிகாரிகள் தங்கள் அரசாங்கத்தின் பணிகளை உளவு பார்க்கின்றனர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் தங்கள் நிறுவனத்திடம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அதிகாரிகள் அமெரிக்காவுக்காக தங்கள் நாடுகளில் உளவு பார்க்கின்றனர் என்று கூறிய அஸன்ஜே சித்திரவதைக்காக அமெரிக்கா,
குற்றம் சாட்டப்பட்டவர்களை சில நாடுகளுக்கு அனுப்புவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தகவல்களும் தங்களிடம் உள்ளதாக கூறுகிறார்.

இந்த நேர்காணலின் போது அஸன்ஜே தன்னிடம் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆவணங்களை அதிகாரிகளின் பெயர் குறிப்பிடாமல் காண்பித்ததாகவும், அவர் பேச்சிலிருந்து எகிப்தே இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது என்று அல்ஜஸீராவின் அஹமத் மன்சூர் உறுதிபடுத்துகிறார்.

பெயர்களை சொல்லுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பெயர் குறிப்பிடாமல் ஆவணங்களின் சில பகுதிகளை வெளியிடுவதால் மட்டுமே எங்கள் நிறுவனத்தை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்றார் அஸன்ஜே.

பொறியாளர்களைப் போல் கூடு கட்டும் சிறிய பறவைகள்.

மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் பால்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும் பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.

மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்பு, பறவைகள் தாங்கள் வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில், தண்ணீரில் மூழ்கி விடாதபடி, தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும், கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத வடிவத்திலும், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள் இத்தகைய கூடுகளை உருவாக்குகின்றன. பறவைகள் இந்த உலகில் தோன்றும்போதே, இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில், பறவைகள் எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப் போயிருக்கும். எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை. ஏனெனில்,இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள், வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட முறையை கையாளுகின்றன. முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்து, தங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனும் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்தது? பறவைகள் எடுக்கும் மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம், நிலத்தை விட்டு விட்டு புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில், நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில் இருக்கும் வெப்ப நிலையைவிட, பத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே இருக்கும் புதர்களின் வெப்பநிலை. நிலத்திற்கும், புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் இச்சிறிய பறவைகள் நிலத்திற்கும், புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும், தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு விட்டு, குளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.

ஐந்தறிவு மாத்திரமே கொண்டு, பகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பல ஆண்டுகள் படித்து, பட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையை, இச்சிறிய பறவைகள் கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது - கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோ, அல்லது படிப்பறிவோ அவசியமில்லை. அவைகள் தாங்கள் செயலாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ் வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன. பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்: لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
22:64. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
22:65 أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي الْأَرْضِ وَالْفُلْكَ تَجْرِي فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ۗ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

--

சங்க்பரிவாரை தடைச் செய்க - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகியுள்ள சூழலில் அவற்றின் மறைவில் வேண்டுமென்றே கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமெனவும், அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய வேண்டுமென காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரே கூறியிருப்பது தேசத்தின் பாதுகாப்பில் கவலைக் கொண்டவர்களுக்கு ஆறுதலை தருகிறது.

ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த அமைப்புகளை தடைச் செய்வதற்கு காலதாமதம் செய்யக்கூடாது. நீதிமன்றத்தின் முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள கொடிய பயங்கரவாதியான சுவாமி அஸிமானந்தாவின் பெயரை மாற்றி 'ஆஸிஃப் கஸ்மானி' என்ற முஸ்லிம் பெயரை சூட்டி சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் விசாரணையை திசை திருப்பிய வெளிநாட்டு சக்திகளைக் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குஜராத்தை மையமாக வைத்து செயல்படும் கேரள மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயரின் கேரள மாநில செயல்பாடுகளைக் குறித்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

சுரேஷ்நாயரை 'நய்யார்' என மாற்றி விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

காவி பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்துக் கொண்டிருக்கும் மலையாள சினிமாத் துறையில் செயல்படும் பிரமுகர்களின் பொருளாதார பின்னணியைக் குறித்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்களான பேராசிரியர் டி.பி.விஜயகுமார், டாக்டர் பீம்ஜெயராஜ், ரமேஷ் நன்மண்டா, டாக்டர்.எஸ்.எம்.ஜெயப்பிரகாஷ், கஃபூர், முகுந்தன், பேராசிரியர் ராஜூ தாமஸ், ஜாஃபர்,வழக்கறிஞர் பி.ஆர்.சுரேஷ், பேராசிரியர் பஷீர், வழக்கறிஞர் எஸ்.பிரகலாதன், டாக்டர் உஸ்மான், வழக்கறிஞர் டி.எஸ்.ஜோஷி, அஷ்ரஃப், டாக்டர்.பி.கே.சுகுமாரன், வழக்கறிஞர் எ.ஜெயராம், வழக்கறிஞர் கெ.சுபாஷ் சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புகளை மூடிமறைக்க மேலும் கொலைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதம்.

புதுடெல்லி,ஜன.9:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டு நடத்திய குண்டுவெடிப்புகளை மறைப்பதற்கு மேலும் கொலைகளை நிகழ்த்தியதாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை கண்டறிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பை சுனில் ஜோஷியிடம் ஒப்படைத்திருந்தது. குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பிறகு அவற்றில் முக்கிய பங்காற்றிய சுனில் ஜோஷியால் தங்களது ரகசியங்கள் வெளியாகிவிடுமோ என அஞ்சிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் அவரை கொலைச் செய்தது.

இந்நிலையில், சுனில் ஜோஷியின் நெருங்கிய நண்பரும், மத்தியபிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான ராம்ஜி என்ற ராமபிரசாத் கலோடா அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு தேவையான குண்டுகளை சுனில் ஜோஷியிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் ராம்ஜியின் உடல் கடந்த 2008 மார்ச் மாதம் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் கவுதம்புரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரெயில் தண்டவாளத்தில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வேளையில் அவரைக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.

தற்பொழுது இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தங்களது பின்னணி வெளியாகிவிடுமோ என அஞ்சி சுனில் ஜோஷியை கொன்ற விபரத்தை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து அஜ்மீர் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் ராம்ஜியைக் கொன்றதன் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. தொடர் விசாரணையில் இந்த உண்மை தெரியவரும் என கருதப்படுகிறது.

மக்கா மசூதியைத் தாக்கியது நானே : ஆசிமானந்த்

ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டது. இது குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஆசிமானந்த் கூறியுள்ளார்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து ஆசிமானந்த் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜடீன் சட்டர்ஜி என்ற நபா குமார் சர்கார் என்ற பெயரையுடை ஆசிமானந்த் என்றறியப்படும் இந்துத்துவா சாமியார், குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியான மோடாஸாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் இந்துத்துவா பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

இந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நோக்கில் திட்டமிட்ட இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரும் மூளையாக இருந்து செயல்பட்டார் என்று கூறியுள்ள ஆசிமானந்த், கோரக்பூர் மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

சுனில் ஜோஷி மற்றும் ராம்ஜி எனப்படும் ராமசந்திர கல்சங்க்ரா உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்தது இந்திரேஷ்தான் என்று ஆசிமானந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிமினல் சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில், குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கரவாதக் குழுக்களை ஆசிமானந்த் அடையாளம் காட்டியுள்ளார்.

மாஜிஸ்ட்ரேட்டிம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். என்றாலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

சிறையில் சுவாமி ஆசிமானந்திடம் கலீம் நன்முறையில் நடந்து கொண்டதுதான் ஆசிமானந்த் தன் தவறை ஒப்புக் கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்துத்துவா பயங்கரவாதம் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதையும் புலணாய்வு அமைப்புகள் சந்தேகித்ததைவிட அதிக அளவு நெட்வொர் கொண்டதாக இந்து பயங்கவராதம் உள்ளதையும் ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

பிற இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை வெவ்வேறு புலணாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வரும் நிலையில், ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் அவற்றில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது. என்றாலும் அவற்றின் விசாரணைக்கு இது உதவக்கூடும்.

2006ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையும் சிபிஐயும் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருந்தன. ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் புலணாய்வு அமைப்புகளின் விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொபைல் போன் வியாபாரியான கலீம் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வேறு ஒரு வழக்கில் கலீம் கைது செய்யப்பட்டு சுவாமி ஆசிமானந்த் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கலீமுடன் கலந்துரையாடியபோது, மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் சிறையில் இருக்கும் போது, கலீம் எனக்கு அதிகமாக உதவிகள் செய்தார். எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். எனக்காக உணவும் கொண்டு வந்து தந்தார். கலீமின் நன்னடத்தை என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று என்னை என் ஆழ்மனம் தூண்டியது என்று சுவாமி ஆசிமானந்த் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

டாப் 10 ஊழல் (இந்தியாவில்)

ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாவற்றிலேயும் டாப் டென் பார்த்தாச்சு......இதிலும் பார்த்துவிடுவோம்.......
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:
இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.
இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)
ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)
உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)
பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!
நான் படித்து மலைத்து போய்விட்டேன்....நீங்களும் மலைக்க வேண்டாமா..........

நாடு போற போக்கு; இதிலுமா இலவசம்...

வாக்குகளை வளைத்துப்போட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசம், 'ஆட்சியாளர்களின் இருப்பை' கண்டுகொள்ளாமல் இருக்க இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், மின்சாரமின்றி எரியும் மக்களை கட்டுப்படுத்த எரிவாயு அடுப்பு இலவசம், இவ்வாறாக பல்வேறு பெயர்களில் தொடரும் இலவசங்கள் வழங்க அரசின் கஜானாவை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது 'டாஸ்மாக்' எனப்படும் அரசின் மது விற்பனை நிலையங்கள் தான் என்றால் அது மிகையல்ல.
'டாஸ்மாக்' என்ற பெயரில் அரசே என்றைக்கு மது விற்பனையை தொடங்கியதோ அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையின் இலக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2010 ம் ஆண்டு அரசு நிர்ணயித்த மது விற்பனை இலக்கான 15 ஆயிரத்து 981 கோடியையும் தாண்டி, டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
இவ்வாறு இலக்கு வைத்து மக்களை குடிகாரர்களாக ஆக்கும் அரசு ஒருபுறம் என்றால், பண்டிகை காலங்களில் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்று துணிகள்- அழகு சாதனப் பொருட்கள்- வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குவார்களே அது போன்று, திருப்பூரில் உள்ள பார் ஒன்றில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என நோட்டீஸ் விநியோகித்துள்ளார்கள்.
வெங்காய விலை விண்ணை முட்டிக்கொண்டிருக்கையில், மக்களைக் கெடுக்கும் மதுபானம் இனாமாக கிடைப்பதில் 'குடிமக்கள்' வேண்டுமானால் மகிழலாம். ஆனால் சாமான்யர்கள் அரசின் மீது சரி கோபத்தில் உள்ளதை உணர்ந்து விரைவில் பூரண மதுவிலக்கை கொண்டுவர கருணாநிதி முயற்சிக்க வேண்டும். இல்லையேல் ஆறாவது முறை முதல்வராகும் எண்ணம் ஆற்றில் கரைத்த உப்பாக ஆகிவிடும் என்பதை உணர்ந்துகொண்டால் சரி!
-

மின்னி மறைந்த 365 நாட்கள்..

அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்த நாட்களை அளித்துவிட்டு 2010 ஆம் ஆண்டு விடைப்பெற்றது.
ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் துபாயில் வைத்து மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டது முதல் வெனிசுலா நாட்டின் பிரதிநிதியின் விசாவை அமெரிக்கா ரத்துச் செய்தது வரையிலான சிறியதும், பெரியதுமான என பல சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்தேறின.

காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச்சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்யப்பட்டதும், மெக்ஸிக்கோ வளைகுடாவில் பிரிட்டீஷ் எண்ணைக் கம்பெனியின் எண்ணைக் கிணறு வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும், உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்காவின் அதீத ரகசியங்கள் விக்கிலீக்ஸினால் அம்பலமானதும் கடந்த ஆண்டில் நமது கவனத்தை ஈர்த்த சம்பவங்களாகும்.

கால்பந்து வீரர்கள் மண்டேலாவின் நாட்டில் பந்தை உருட்டியபொழுது உலகம் ஆப்பிரிக்காவை உற்றுநோக்கியது நேற்று நடந்ததுபோல் உள்ளது.

ஹைத்தியிலும், பாகிஸ்தானிலும், சீனாவிலும், தாய்லாந்திலும் தற்பொழுது ஆஸ்திரேலியாவிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை நாம் கண்டோம். இந்த ஆண்டின் பிந்தைய நாட்கள் நமக்கு மறக்கமுடியாத நிகழ்வுகளை அளித்துச் சென்றது.

அவற்றில் சில:
உலகம் சிரித்தது சிலியுடன்:
அதிர்ச்சியுடன் கேட்ட செய்திக்கு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. பூகம்பத்தால் தகர்ந்துபோன சிலியின் சான்ஜோஸ் சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்பதனை 17 நாட்கள் கழித்து உலகம் அறிந்தபொழுது நம்பமுடியாத செய்தியாக இருந்தது. வெளி உலகினோடு தொடர்பு கொள்ளவியலாமல் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கும், மனோநிலை பாதிக்கப்படாமலிருக்கவும் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தினர். 69 தினங்களுக்கு பிறகு 33 தொழிலாளர்களும் சுரங்கத்தை விட்டு வெளியேறும் வரை உலகம் மனமுருகி பிரார்த்தித்தது சிலியுடன்.

ஐரோப்பாவில் தனிமனித சுதந்திரத்தின் மீது விழுந்த அடி
முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்குவிதமான புர்காவை அணியக்கூடாது என ஐரோப்பாவில் வலதுசாரிகள் கச்சைக்கட்டி களமிறங்கிய வருடமாக 2010 அமைந்தது.

பிரான்சிலும், ஸ்பெயினில் சில நகரங்களிலும் பெண்கள் புர்காவை அணிவது தடைச்செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரை நிர்வாணத்துடன் பெண்கள் சுற்றித் திரிவதை சுதந்திரம் எனக்கூறும் மேற்கத்திய உலகம் தங்களது முகத்தை தாமாகவே மறைக்க விரும்பும் முஸ்லிம் பெண்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு தனது இரட்டை முகத்தை பகிரங்கப்படுத்தியது.

புர்காவை தடைச் செய்ததற்கு ஆட்சியாளர்கள் கூறிய காரணம் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என பதிலளித்தனர்.

இத்தாலியும், நெதர்லாந்தும் பிரான்சின் முட்டாள்தனத்தை பின்பற்றியது. ஒடுக்கப்பட்ட ரோம இனத்தவரை நாடு கடத்தப் போவதாக பிரான்சு மிரட்டியது.

பார்ஸல் குண்டுகள் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக மாறியது. ஆனால், அதன் பெயரால் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை.

தோற்றுப்போன மேற்காசிய அமைதி முயற்சி
அமெரிக்காவின் தலைமையில் அக்டோபர் 2-ஆம் தேதி ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவங்கியது.

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணங்களை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தது எவ்வித பலனையும் தரவில்லை.

10 மாத மொரட்டோரியத்திற்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற நிர்மாணத்தை துவக்கியபொழுது பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. அமைதியை விரும்பாத இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என ஏற்கனவே ஹமாஸ் முன்னறிவிப்பு செய்திருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்காவும் அறிவித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்
அமெரிக்காவின் ஆதரவுடன் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் தினந்தோறும் அப்பாவி மக்களுக்கு கொலைக் களமாகும் பாகிஸ்தானை 2010 ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பிரளயம் பிடித்து உலுக்கியது.

செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த பெய்த மழையால் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 ஆயிரம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு லட்சம் கால்நடைகள் செத்து மடிந்தன. விவசாயத்துறை முற்றிலும் சீர்குலைந்த பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவுமாறு ஐ.நா கோரிக்கை விடுத்தது.

சுனாமி, ஹைத்தி பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு உலக சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு, பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஆக்கிரமிப்பின் மீதிக்கதை
2003 ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு பாதியளவு முடிவடைந்த பொழுது மீதமாக அமைந்தது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை. மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவடைந்த பொழுதிலும் எட்டு மாதத்திற்கு பிறகுதான் ஷியா, சுன்னி, குர்து பிரிவினர் கூட்டாக இணைந்து புதிய அரசை உருவாக்கினர்.

91 இடங்களை கைப்பற்றிய நூரி அல் மாலிகி பிரதமரானார். இயாத் அல்லாவியின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. ஷியா அறிஞர் முக்ததா அல் ஸத்ரின் ஆதரவு கிடைத்ததன் மூலம் நூரி அல் மாலிகி ஈராக் அதிபராக மீண்டும் பதவியேற்றார். நவம்பரில் பதவியேற்ற அதிபர் ஜலால் தலபானி மாலிகியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்தார். ஆனால், ஈராக்கில் பாதுகாப்பு மேம்பட்டதாக கூறும் அமெரிக்காவின் கூற்று பொய் என்பதை நிரூபிக்கின்றன அந்நாட்டின் வீதிகளில் அடிக்கடி நடைபெறும் குண்டுவெடிப்புகள்.

அம்பலமான ரகசியங்கள்
அமெரிக்க தூதரகச் செய்திகளை ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியன் அஸென்ஜே ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதை உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்கா அதிர்ச்சியுடன் நோக்கியது.

உலகின் ஒவ்வொரு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்கள் வழியாக அந்நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்பதுதான் விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் சாராம்சம்.

2006 முதல் விக்கிலீக்ஸின் ரகசிய கண்கள் பல்வேறு நாடுகளின் ரகசியங்களில் நோட்டமிட்டன. பல செய்திகளையும் அவர்கள் வெளியுலகிற்கு அளித்தனர். ஆனால், 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்வதன் வீடியோ காட்சியை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டதுடன் விக்கிலீக்ஸ் இணையதளம் உலகின் பார்வையை தன் பக்கம் நோக்கி இழுத்தது.

ஆப்கானில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜேவும் அமெரிக்காவினால் குறி வைக்கப்பட்டனர்.

நவம்பரில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசியங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ். சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் ஜூலியன் கைதுச் செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார்.

உஸாமா பின் லேடனுக்கு அடுத்து அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதியாக ஜூலியன் அஸென்ஜே மாறியுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய கூட்டுப்படுகொலை
காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியில் புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்தது இஸ்ரேல்.

சுய பாதுகாப்பிற்காக சுட்டதாக இஸ்ரேல் தனது அக்கிரம செயலை நியாயப்படுத்தியது. இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் துருக்கி விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் மதிக்கவேயில்லை. இஸ்ரேலின் கொடூர ராணுவ நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்தன.

ஹைத்தி துயரத்தின் பூமி
ஜனவரி 12 ஆம் தேதி ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்ஸில் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் பலிவாங்கப்பட்ட ஹைத்தியில் பின்னர் நடந்த அதிபர் தேர்தலிலும் தீவிர வன்முறை வெடித்தது. சில மாதங்களுக்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் பலரும் வீடுகளை இழந்தனர்.

ஹைத்தி அகதிமுகாம்களில் தூய்மையற்ற நிலையின் காரணமாக காலரா நோய் வேகமாக பரவுகிறது. நோயால் பீடிக்கப்பட்ட 3333 பேர் மரணித்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா படையில் நேபாள ராணுவத்தினரிடமிருந்துதான் காலரா நோய் பரவியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தீரா துயரத்துடன் ஹைத்தி மக்கள் புதுவருடத்தை வரவேற்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட துயரம்
மெக்ஸிக்கோ வளைகுடாவில் கரையிலிருந்து 48 மைல்கள் தொலைவிலிருக்கும் பெயாண்ட்(beyond) பெட்ரோலியம் எனப்படும் நிறுவனத்தின் எண்ணை கிணறு கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டது.

தினமும் ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. பின்னர் தினமும் ஐந்து ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில் 25 ஆயிரம் முதல் 80 பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது.

இச்சம்பவம் பல நாட்களுக்கு பிறகே உலகிற்கு தெரியவந்தது. எண்ணை கசிவு கடலில் கலந்ததால் ஏற்பட்ட விஷத் தன்மையின் காரணமாக இறந்துபோன மீன்கள் அமெரிக்க கடற்கரையில் ஒதுங்கின. எண்ணை கசிவை முற்றிலும் அடைப்பதற்கு பல மாதங்கள் ஆகின. அமெரிக்க மீன்பிடித்துறை - சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக மாறியது இச்சம்பவம். பெயாண்ட் பெட்ரோல் கம்பெனி அமெரிக்காவிற்கு 2 ஆயிரம் கோடி டாலர் நஷ்டஈடு வழங்கியது.

பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் பொதுக்கடனை அடைப்பதற்கு வேலைவாய்ப்பையும், சலுகைகளையும் குறைத்தது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.

போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுத்துறை பணியாளர்களின் சலுகைகளை குறைத்தனர். வரியை அதிகரித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வீதியில் இறங்கி போராடிய மக்களை போலீஸ் எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமைய தளர்த்த ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது.

செய்தி:செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கர்காரேக்கு மிரட்டல்:ஆதாரங்களை வெளியிட்டார் திக்விஜய்சிங்

புதுடெல்லி,ஜன.5:மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தீவிர ஹிந்துத்துவாக்களிடமிருந்து தனது உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்தார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதுத் தொடர்பான ஆதாரங்களை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் அவர்.


கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாலை 5.44 மணிக்கு மும்பையில் தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைமையகமத்திலிருந்து 022308733 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து தனது மொபைல் எண்ணான 09425015451க்கு கர்காரே அழைத்ததன் ஆவணங்களை திக்விஜய் வெளியிட்டுள்ளார். அதே நாளில் மாலை 8 மணிக்கு மும்பையில் தாக்குதல் நடைபெறுகிறது. சில மணிநேரங்களில் கர்காரே கொல்லப்படுகிறார்.

நான் பொய்க் கூறினேன் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மன்னிப்புக் கோரவேண்டும் எனக் கூறிய திக்விஜய்சிங், கர்காரேயும், நானும் தொலைபேசியில் உரையாடியதற்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்த மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் மன்னிப்புக் கோரவேண்டுமென அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தொலைபேசி பதிவின் படி 6.21 நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினை வெளிப்படுத்தியதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுதான் தான் இவ்வழக்கினைக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கர்காரே தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக திக்விஜய்சிங் தெரிவித்தார்.

உரையாடல்களின் ஆவணங்களை ஒரு வருடத்திற்கு மேலாக பாதுகாப்பதில்லை என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்ததாக திக்விஜய் சிங் கூறியிருந்தார்.

தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் தான் நிம்மதி இழந்திருப்பதாகவும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரை அடையாளங் காண முயற்சிப்பதாகவும் கர்காரே தெரிவித்ததை திக்விஜய்சிங் வெளியிட்டார்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் தனக்கெதிராக வெளியிடப்பட்ட தலையங்கம் வேதனை ஏற்படுத்தியது என கர்காரே தெரிவித்துள்ளார்.

துபாயில் கர்காரேயின் மகன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக சாம்னாவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் கர்காரேயின் மகன் துபாயில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான்.

புனே பேக்கரி குண்டுவெடிப்பு மற்றும் வாரணாசி குண்டு வெடிப்புகளைத் தவிர இந்தியாவில் குண்டுவெடிப்புகள் குறைந்துள்ளதாக திக்விஜய்சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

"இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பின்னணியில் ஒரு தனிக்குழு செயல்பட்டு வருகிறது. சபரி கும்பமேளாவில் வைத்துதான் மலேகான் குண்டு வெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் உள்ள சுவாமி அஸிமானந்தாவை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியாகும். தீவிரவாதத் தாக்குதல்களின் பெயரால் இவர்களை கைதுச் செய்யும்பொழுது பா.ஜ.கவுக்கு ஏன் வேதனையாக இருக்கிறது? ஏன் அவர்களுக்காக இவர்கள் களமிறங்குகிறார்கள்? இந்திரேஷ் குமாரின் நேராக விரல் சுட்டிக் காட்டப்படும் பொழுது ஏன் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்?இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டும்.

சுனில் ஜோஷியின் கொலை உட்பட தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் மத்தியபிரதேச அரசு உண்மைகளை மறைத்துவிட்டது. சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ்தான் கொலைச் செய்துள்ளது. இவ்வகையில் வேறு சிலரும் அச்சுறுத்தப்படுகின்றனர்." என திக்விஜய்சிங் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்

புதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.

அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: "இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம்.

ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.

பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார்.

அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது." இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.

ஃபாசிசத்தின் கோரப்பிடியில் - பாதிக்கப்படும் முஸ்லிம் கிராமங்கள்



நமது பகுதிகளில் சங்கபரிவாரங்களின் வெறிச்செயல்களும்,
காட்டுமிராண்டித்தனமான வேலைகளும், அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறதை
சமீமகாலமாக அதிகமாக நம்மால் காணமுடிகிறது. குஜராத்தில் முஸ்லிம்கள்
படுகொலை செய்யப்பட்டார்கள், கோவையில் முஸ்லிம்களின் சொத்துக்கள்
சூரையாடப்பட்டன, முத்துபேட்டையில் முஸ்லிம்களின் பள்ளிகளின் மீது
கல்வீச்சு மற்றும் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்று
செய்திதாள்களிலும், செய்தி ஊடகங்களிலும் பார்த்து அங்கே அவர்களிடம்
ஒற்றுமையில்லை அதனால் பதிக்கப்படுகின்றனர் என்று கூறிக்கொண்டிருந்த
முஸ்லிம்களே உஷார் !!! இதோ அந்த பிரச்சனைகளும், மிரட்டள்களும் உங்கள்
வீட்டு கதவுகளை தட்ட ஆரம்பித்துவிட்டன. இந்துக்களே ! உஷார் !!
அப்பாவிகளான உங்களை முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று
கட்டுக்கதைகளை கூறி அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரச்சனையை
ஏற்படுத்தி அந்த பிரச்சனையினால் விளையும் கலவரத்தில் ஓட்டப்படும்
குருதியில் குளிர்காய நினைக்கிறது சங்கபரிவார ஃபாசிச கூட்டம். இவர்கள்
தங்களது ஃபாசிச கோரமுகங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில்
காட்டிவருகின்றனர். சிலமாதங்களுக்கு முன்பு அழகங்குளத்தில் நடந்த ஒரு
பிரச்சனையில் அப்பாவிகளாக அந்த ஊரின் பேருந்து நிலையத்தில்
நின்றுகொண்டிருந்த சில வயதானவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி
இருக்கிறார்கள் அத்தோடு முஸ்லிம்களையும், பெண்களையும் தரக்குறைவாக பேசி
கேலிகிண்டல் செய்துவிட்டு சென்றுஇருக்கிறது இந்த கும்பல். அதன்
தொடர்சியாக பனைக்குளத்தில் முஸ்லிம்கள் கொண்டாடும் பெருநாள் தினத்தில்
கடற்கரைக்கு சென்ற பெண்களை தாமரை ஊரணியை சேர்த்த ஒருசில RSS குண்டர்கள்
கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் இதனை கேட்க சென்ற ஒரு பெரியவரை
இரக்கமில்லாமல் அவரது மண்டையை உடைத்து இருக்கின்றனர். இதன் பிறகு ஒரு சில
இளைஞர்கள் அவர்களை தட்டி கேட்க இருதரப்பினருக்கும் இடையில் சண்டை
நடந்திருக்கிறது. இதன் விளைவாக நடந்த பிரச்சனையினால் நமது பகுதிகளில்
ஓடும் பேருந்துகள் ஒரு நாள் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. பள்ளிகளுக்கும்
விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அடுத்த நாள் சென்ற நிஜாம்
பஸ்ஸின் கண்ணாடியை தாமரை ஊரனியில் வைத்து உடைத்திருக்கிரார்கள் RSS
தீவிரவாதிகள். இன்று ஆற்றங்கரையில் ரேஷன் கடையில் சாமான் வாங்கும் பொழுது
ஒரு வயதான ஒரு முஸ்லிம் பெண்மனி வரிசையில் வராமல் பொருள்களை வாங்கியதாக
கூறி அவரை தரக்குறைவாகவும் அவரை மட்டும் அல்லாது முஸ்லிம் பெண்கள்
அனைவரும் இழிவுபடுத்தியும், கேவளமாகவும் பேசியிருக்கிறான்.அதனை தொடர்ந்து
அந்த பெண்னை அரிவாளல் வெட்டி இருக்கிறான் இதனை பார்த்தவர்கள் தடுக்க
சென்ற போது அவர்களையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியிருக்கிறான் அவனோடு
சேர்ந்து அவனது நண்பர்களும் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால்
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்ற
வேலையில் வெட்டியகூட்டம் வேலையைமுடித்துவிட்டு வேறுவழியிலும் முஸ்லிம்களை
சிக்கவைக்க வழக்கு தொடுத்துவிட்டார்கள் இதன் விளைவு இரண்டு அப்பாவி
முஸ்லிம் இளைஞர்கள் பிரச்சனைக்கு காரணம் என்று கைதுசெய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் பிரச்சனையின் பின்னனியில்
நாட்டில் ரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரையை நடத்திய தீவிரவாத
கும்பலை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அழகங்குளத்தில் நடந்த
பிரச்சனையின் மூலகர்த்தாவாக செயல்பட்டவன் மாதவன் மற்றும் லீலாதரன்.
பனைகுளத்தில் நடத்தபட்ட பிரச்சனையின் முன்னோடியாக தாமரைஊரணியை சேர்ந்த
பாலா, முருகன், மற்றும் கார்த்தி. இன்றைய ஆற்றங்கரையின்
இனவெறிதாக்குதலுக்கு காரணமானவர்கள் பால குரு, நல்ல முத்து, சசி.
இதுபோன்று ஒவ்வொரு ஊரிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்
இருந்துகொண்டு இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து வருகின்றனர். இவர்களை
போன்ற சமூக விரோதிகளை இனம் கண்டு சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவது
ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.
இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்
இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.
யார் விண்ணப்பிக்க முடியும்?
1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். தொலை தூர கல்வியில் படித்துஇருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
2. 21-வயதிற்க்கு மேல் இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. காவல் துறை பணிகளில் சேர உடல் தகுதி Physical fitness இருக்க வேண்டும்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : ஜனவரி 28
விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், சென்னையில் உள்ள TNPSC அலுவலகம். இந்த www.tnpsc.gov.in இணைய தளத்திற்க்கு சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்க்லாம். விண்ணப்பத்தின் விலை ரூ.30.
தேர்வு கட்டணம் : முதல் கட்ட தேர்வு ரூ.75. இரண்டாம் கட்ட தேர்வு ரூ.125
தேர்வு நடக்கும் இடங்கள் : அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடத்தபடுகின்றன
சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் :
1. 10 - ஆம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்ட படிப்பிற்கான சான்றிதழ். ஒரிஜினல் சர்டிபிகேட்டை சமர்பிக்க வேண்டாம், நகலை அட்டஸ்டேஷன் செய்து அனுப்பினால் போதும்.
2. உடல் தகுதி Physical fitness சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Tamil Nadu Public Service Commission, Commercial Taxes Annexe Building, No.1 Greams Road, Chennai – 600 006
தேர்வை பற்றி
இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும். இதில் தேரியவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.tnpsc.gov.in இந்த இணைய தளத்தில் உள்ளது. மேலும் விபரங்கள் அறிய sithiqu.mtech@gmail.com இந்த மின் அஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

கபுர் வணங்கிகளின் முரண்பாடுகள்!

அஸ்ஸலாமு அலைக்கும்..
இன்று தர்ஹாக்களை கட்டிக்கொண்டும், இறந்து போனவர்களிடம் உதவி தேடலாம் என்றும் கூறிக்கொள்ளும் கூட்டத்தார், தங்களுக்கு தாங்களே முரண்பட்டுக்கொள்கிறார்கள் என்பது தான் வேடிக்கை!!

இவர்கள் புனித நூலாக போற்றக்கூடிய மத்ஹப் நூல்கள் சொல்பவற்றை பாருங்கள்..



தர்ஹா கட்டுவது கூடாது!

ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)


கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)



கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!
கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காக செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும்
(ஷாஃபி மத்ஹப் நூல் : முக்னில் முஹ்தாஜ் பாகம் : 1 பக்கம் : 364 )


அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!
நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)


இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்!
மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)
(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர­) அவர்கள் ‘உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் ” உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது ” (27 : 80) ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)



கொள்கையும் தவறு!!.. கொண்ட கொள்கையை தங்களுக்கு தாங்களே முரணாக்கிக்கொள்வது அதை விடவும் கேலிக்குரியது!!!