அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 9, 2011

மக்கா மசூதியைத் தாக்கியது நானே : ஆசிமானந்த்..

ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டது. இது குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஆசிமானந்த் கூறியுள்ளார்.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து ஆசிமானந்த் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜடீன் சட்டர்ஜி என்ற நபா குமார் சர்கார் என்ற பெயரையுடை ஆசிமானந்த் என்றறியப்படும் இந்துத்துவா சாமியார், குஜராத்தில் முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதியான மோடாஸாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் இந்துத்துவா பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

இந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் நோக்கில் திட்டமிட்ட இத்தகைய வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரும் மூளையாக இருந்து செயல்பட்டார் என்று கூறியுள்ள ஆசிமானந்த், கோரக்பூர் மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

சுனில் ஜோஷி மற்றும் ராம்ஜி எனப்படும் ராமசந்திர கல்சங்க்ரா உள்ளிட்ட காவி பயங்கரவாதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்தது இந்திரேஷ்தான் என்று ஆசிமானந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிமினல் சட்டம் 164ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில், குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட இந்துத்துவா பயங்கரவாதக் குழுக்களை ஆசிமானந்த் அடையாளம் காட்டியுள்ளார்.

மாஜிஸ்ட்ரேட்டிம் அளித்த வாக்கு மூலத்தில், தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். என்றாலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

சிறையில் சுவாமி ஆசிமானந்திடம் கலீம் நன்முறையில் நடந்து கொண்டதுதான் ஆசிமானந்த் தன் தவறை ஒப்புக் கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்துத்துவா பயங்கரவாதம் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பதையும் புலணாய்வு அமைப்புகள் சந்தேகித்ததைவிட அதிக அளவு நெட்வொர் கொண்டதாக இந்து பயங்கவராதம் உள்ளதையும் ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

பிற இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை வெவ்வேறு புலணாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வரும் நிலையில், ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் அவற்றில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது. என்றாலும் அவற்றின் விசாரணைக்கு இது உதவக்கூடும்.

2006ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையும் சிபிஐயும் முஸ்லிம்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருந்தன. ஆசிமானந்தின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் புலணாய்வு அமைப்புகளின் விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

மக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொபைல் போன் வியாபாரியான கலீம் ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். தற்போது வேறு ஒரு வழக்கில் கலீம் கைது செய்யப்பட்டு சுவாமி ஆசிமானந்த் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கலீமுடன் கலந்துரையாடியபோது, மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். நான் சிறையில் இருக்கும் போது, கலீம் எனக்கு அதிகமாக உதவிகள் செய்தார். எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். எனக்காக உணவும் கொண்டு வந்து தந்தார். கலீமின் நன்னடத்தை என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று என்னை என் ஆழ்மனம் தூண்டியது என்று சுவாமி ஆசிமானந்த் தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

No comments: