அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label Malesiya. Show all posts
Showing posts with label Malesiya. Show all posts

Monday, January 19, 2009

மங்கோலியப்பெண் கொலை வழக்கில் குறுக்கு விசாரணை

மலேசிய நீதிமன்றத்தில் இரு போலிஸ்காரர்களிடம் குறுக்கு விசாரணை
மலேசியாவில் இரு வருடங்களுக்கு முன் காட்டுப்பகுதியில் கொல்லப் பட்டுக் கிடந்த மங்கோலியப்பெண் கொலை வழக்கில் நேற்று குறுக்கு விசாரணை தொடர்ந்தது.
ஷா ஆலம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட இரு போலிஸ் காரர்களில் ஒருவரான தலைமை ஆய்வாளர் திரு அசிலா ஹட்ரி தாம் ஆறு பேரைக் கொன்றதாக அப்துல் ரசாக்கிடம் கூறியதாகக் கூறப்படுவதை மறுத்தார் என்று “திமலேசிய இன்சைடர்” என்ற இணையப்பக்கம் குறிப்பிட்டது.
துணைப் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் திரு அப்துல் ரசாக் பகிண்டா, இதே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.

கோலா திரங்கானு தேர்தல் : தேர்தல் அதிகாரி திடீர் ராஜினாமா

மலேசிய அரசாங்கம் வாக்குகளை வாங்குகிறது; வாக்காளர்களைக் கட்டாயப் படுத்துகிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியதால் முக்கிய தேர்தல் அதிகாரி ஒருவர் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
கோலா திரங்கானு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறு கிறது.
தேர்தலைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட கோலா திரங்கானுவின் மேயர் மட் ரசாலி மட் காசிம், ஆளும் பாரிசான் தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வாக்காளர் களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குறை கூறியிருந்தன.

கோலா திரங்கானு தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி

மலேசியாவின் கோலா திரங்கானுவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் நேற்று மலேசியாவின் ஆளும் கட்சியான தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
கோலா திரங்கானு இடைத்தேர்தலில் மலேசியாவின் ஆளும் தேசிய முன்னணியும் அன்வர் இப்ராஹிமின் எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியக் கட்சியும் நேற்று மோதின.
இஸ்லாமிய நாட்டை விரும்பும் பாஸ் கட்சியின் அப்துல் வாஹிட் என்டுட் 30,252 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2,631 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சிக் கூட்டணியின் வான் அஹமட் ஃபரிட் வான் ளல்லே என்பவரைத் தோற்கடித்துள்ளார்.