மலேசியாவின் கோலா திரங்கானுவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் நேற்று மலேசியாவின் ஆளும் கட்சியான தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
கோலா திரங்கானு இடைத்தேர்தலில் மலேசியாவின் ஆளும் தேசிய முன்னணியும் அன்வர் இப்ராஹிமின் எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியக் கட்சியும் நேற்று மோதின.
இஸ்லாமிய நாட்டை விரும்பும் பாஸ் கட்சியின் அப்துல் வாஹிட் என்டுட் 30,252 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2,631 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சிக் கூட்டணியின் வான் அஹமட் ஃபரிட் வான் ளல்லே என்பவரைத் தோற்கடித்துள்ளார்.
No comments:
Post a Comment