அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 25, 2011

நலத்திட்டங்களை அறிவித்தார் சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா
சவுதி மன்னர் அப்துல்லா

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

அவரின் வருகையை ஒட்டி வீதிகள் எங்கும் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தன. அரச ஊடகம் உற்சாக மிகுதியில் காணப்பட்டது.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் சிலவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சவுதி மன்னர் நாடு திரும்பியுள்ளார்.

சவுதி அரேபியாவின் நீண்ட நாள் கூட்டாளியான எகிப்தின் ஹோஸ்னி முபாராக் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்.

பஹ்ரைன் மற்றும் யெமனில் நடைபெறும் வீதி போராட்டங்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிலர், அரசியல் சுதந்திரம் இல்லாத சவுதி அரேபியாவிலும் பிரச்சனை வெடிக்கலாம் என எண்ணுகின்றனர். சவுதி அரேபியாவை பல பல காலமாக ஆண்டு வருபவர்கள் அங்கு அரசியல் சுதந்திரத்தை அனுமதித்ததே கிடையாது.

இதையெல்லாம் உணர்ந்து தான் என்னவோ, 87 வயதான சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா யாரும் எதிர்பாராத பல அதிரடி நல திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார். இவர் அறிவித்த திட்டங்களின் மதிப்பு கிட்டதட்ட 3700 கோடி அமெரிக்க டாலர்கள்.

பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, வேலை வாய்ப்பிலாமல் உதவுவதற்கு மற்றும் குடும்பங்களுக்கு நியாய விலையில் குடியிருப்பு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் உதவி மற்றும் கடன் தள்ளுபடி போன்ற சலுகைகள் கூட மன்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மன்னரால் அறிவிக்கப்பட்ட நல திட்டங்களில் அரசியல் சீர்திருத்தம் குறித்து எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

உலகத்தில் மிக பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா மன்னராட்சி முறையிலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமோ, அரசியல் கட்சிகளோ கிடையாது.

எதிர்வாதங்களை வைப்பவர்களை சவுதி அரேபியாவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அரசியல் முறை முற்றாக மாற்றப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.

வேலைவாய்ப்பின்மை மற்றும் வீடு பற்றாக்குறை ஆகியவை சவுதி அரேபியாவில் மிகப்பெரிய பிரச்சனை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சவுதி அரேபியாவின் பெரும்பாலான நிலப்பகுதி மன்னர் குடும்பத்தின் சொத்தாக இருப்பதால், இந்த நிலத்தை விற்க போகிறார்களா அல்லது தானமாக கொடுக்க போகிறார்களா என்பது தெரியவில்லை

''ஊழல்கள் குறித்து மன்மோகன் சிங்''

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் மற்றும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பொது வாழ்வில் தூய்மையை நிலைநிறுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

''இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையே தொடர்ந்து பதற்றம் ஏற்படும் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் சென்றாலும் அவர்களைக் கைது செய்யலாமே ஒழிய, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என்று இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய பிரதமர், ஊழல் விவகாரம், உள்நாட்டுப் பிரச்சினை, பணவீக்கம், கறுப்புப் பணம், வேளாண் உற்பத்தி, அண்டை நாடுகளுடனான உறவுகள், சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகப் பேசினார்.

தொலைத் தொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் காமன்வெல்த் போட்டி முறைகேடு பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறைகளில் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன என்பதை நான் மறுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

''தொலைத் தொடர்புத்துறை திட்டங்கள் சரியாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுதான், பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிட்டது எனக் கருதுகிறேன். அது குறித்து, நாடாளுமன்றக் கூட்டுக்குழு, பொதுக்கணக்குக் குழு ஆகியவை விசாரணை நடத்தும். அதில் உள்ள கிரிமினல் அம்சங்கள் குறித்து, சிபிஐ விசாரணை நடத்துகிறது. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கும் அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து, உண்மை வெளிவர நடவடிக்கை எடுக்கும்'' என்றார் பிரதமர்.

காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்து, போட்டிகள் நடப்பதற்கு முன்னதாகவே புகார்கள் வந்தது குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இதில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று அவைக்கு உறுதியளித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் துணை அமைப்பான ஆன்த்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டில், எஸ் பேண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை அரசு அமைத்திருப்பதாகவும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சையை அடுத்து, கேந்திர முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி, அந்த உடன்படிக்கையை விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசிய பிரதமர், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் திட்டம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக உள்ள மத்திய இந்தியாவில், 60 மாவட்டங்களில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்டுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன் மூலம், பழங்குடியின இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் தடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

கொக்கோ கோலாவுக்கு சிக்கல்

கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழி
கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழி
மென்பான தயாரிப்பாளர்களான கொக்கோ கோலா நிறுவனத்திடம் மக்கள் நட்ட ஈடு கோருவதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கேரள மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

கோயம்புத்தூருக்கு மேற்கே இந்த நிறுவனத்துக்கு மென்பானத்தை பாட்டிலில் அடைக்கும் ஆலை ஒன்று உள்ளது.

அந்த ஆலை, அங்கு சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்று அதனை வரவேற்றுள்ளன.

கொக்கோ கோலா நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், இந்தச் சட்டத்தால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக இந்தச் ''சுற்றுச்சூழல் பாதிப்பு'' 50 லட்சம் டாலர்களுக்கும் குறைவானது என்று ஒரு குழு மதிப்பிட்டிருந்தது.

குஜராத் ரயில் எரிப்பு வழக்குத் தீர்ப்பு

கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில்
கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயில்-2002
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக, செவ்வாய்க்கிழமை வெளியாகியிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில், 31 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டவர் உட்பட 63 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் நிலையம் அருகே இந்து அமைப்புக்களைச் சேர்ந்த தொண்டர்கள் வந்த ரயில் நிறுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டது. அதில் 59 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

குஜராத் வன்முறைகளில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
குஜராத் வன்முறைகளில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
இதில், கோத்ரா ரயில் எரி்ப்புச் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மொத்தம் 134 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில், போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் 14 பேர் விடுவிக்கப்பட்டார்கள். ஐந்து பேர் சிறுவர்கள் என்பதாலும், ஐந்து பேர் விசாரணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டதாலும் நீக்கப்பட்டார்கள். 16 பேர் தலைமறைவாக உள்ளார்கள். அதனால், 94 பேருக்கு எதிராக விசாரணை நடந்து வந்தது. அவர்களில் 80 பேர் சிறையில் உள்ளனர். 14 பேர் ஜாமீனில் இருக்கிறார்கள்,.

விசாரணையின்போது, 250க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. அதே நேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன், ரயிலில் பெட்ரோல் வீசப்பட்டதால்தான் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறியது.

அதே நேரத்தில், ரயில்வே அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட யு.சி. பானர்ஜி கமிஷன், அந்தச் சம்பவம் விபத்து என்று அறிக்கை அளித்தது.

இந் நிலையில் இன்று 31 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.

பாதிப்பை உண்டாக்கும் 'பஸ்டே'; பாராமுகமாய் காவல்துறை!



0.jpg
மாணவர்கள் இந்தியாவின் வருங்கால தூண்கள் என்று சொல்லப்படுவதுண்டு. காரணம் மாணவப் பருவம் தான் ஒருவனின் வருங்கால வாழ்க்கையின் உரைகல்லாக உள்ளது. மாணவப் பருவத்தில் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட பலர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மேதைகளாக திகழ்ந்து தனக்கும், தனது குடும்பத்தினர்க்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்த்த வரலாறு உண்டு. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இன்று பல்வேறு சமூக சீர்கேடுகளின் தாக்கத்தால் சீர்குலைந்து நிற்கிறது. இன்றைய மாணவர்களிடம் பெற்றோரை மதிக்கும் பாங்கு- ஆசிரியருக்கு கண்ணியமளிக்கும் போக்கு ஆகியவை மிக மிக குறைந்ததன் விளைவு அங்கே 'எவருக்கும் கட்டுப்படாமை' என்ற மனப்பக்குவம் மேலோங்கி நிற்கிறது.
கடந்த நவம்பர், 2008 ல் நடைபெற்ற சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் மோதல் மாணவர்களின் வரலாற்றில் விழுந்த துடைக்க முடியா கரும்புள்ளியாகும். இதுபோக அவ்வப்போது மாணவர்கள் திடீர் திடீர் என கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் பொது இடத்தில் தாக்கிக் கொள்வதும் நடக்கிறது. மாணவர் தலைவர் தேர்தல், அரசியல் தேர்தல்களையும் தாண்டிய மனமாச்சர்யத்தை மாணவர்களிடம் உண்டாக்கி விடுகிறது. அதில் ஏற்படும் விரோதம் மாணவர்களிடையே பகையாக தொடரும் சூழல். இவ்வாறான விஷயங்கள் ஒருபுறமிருக்க, மாணவர்களின் சில கொண்டாட்டங்கள் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பவையாக உள்ளன.
இப்போது சில வாரங்களாக மாணவர்கள் 'பஸ்டே' கொண்டாடுகிறார்கள். அதாவது தாங்கள் எந்த வழித்தடத்தில் கல்லூரி செல்கிறார்களோ அந்த பஸ்ஸை ஆண்டுக்கொருமுறை அலங்கரித்து அளப்பரை செய்வதுதான் இவர்களின் கொண்டாட்டம். பொதுவாக ஒருவரின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டமாகிவிடக் கூடாது. ஆனால் இவர்களின் 'பஸ்டே' கொண்டாட்டம் மக்களுக்கு பல வகையில் இன்னல் தருபவையாக உள்ளன. பஸ்ஸின் கூரை மீது நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்டம் போடுவது; பஸ்ஸில் உள்ள பொதுவான பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது; பஸ்ஸை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முக்கிய சாலைகளில் ஊர்வலமாக செல்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது; பஸ்ஸை சிறைபிடித்தது போன்று தங்கள் கல்லூரியில் பல மணிநேரம் நிறுத்தி வைத்து பயணிகளை இம்சிப்பது; பஸ்ஸை சேதப்படுத்துவது இவ்வாறாக இவர்களின் கொண்டாட்டம் மற்றவர்களுக்கு திண்டாட்டத்தையும் , அரசுக்கு வருமான இழப்பையும் உண்டாக்குகிறது.
ஆயினும் பிரச்சினை செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த மாணவர்கள் பிரச்சினையாக மாறிவிடும் என்ற பயத்தில் காவல்துறையும், 'பஸ்டே' வை படிப்படியாகத்தான் தடை செய்யமுடியும்' என்று கூறி தனது இயலாமையை வெளிப்படுத்துகிறது. காவல்துறையின் இந்த மென்மையான அணுகுமுறை மாணவர்களுக்கு மேலும் தெம்பைத் தருவதாக உள்ளது. அதனால் மாணவர்களின் அளவுகடந்த இம்சையும் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஒரு கல்லூரி முதல்வர், மாணவர்கள் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார் என்றால், இந்த 'பஸ்டே' யின் பாதிப்பை புரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மாணவசக்தி வலுவானது என்பதற்காக மனம்போன போக்கில் செயல்பாட்டை அமைத்துக் கொள்வது ஆரோக்கியமன்று. உண்மையில் 'பஸ்டே' கொண்டாடும் மாணவர்கள் செய்யவேண்டியது என்ன? இதுபோன்ற மக்கள் முகம் சுளிக்கும் செயல்பாட்டை விடுத்து, உங்களை தினமும் பாதுகாப்பாக கல்லூரியில் கொண்டு சேர்க்கும் குறிப்பிட்ட வழித்தடத்தின் ஓட்டுனர்- நடத்துனரை கவுரவித்து, அவர்களுக்கு பர்சிசுப் பொருட்கள் வழங்கினால் உங்கள் மீது அவர்களுக்கும்- பொது மக்களுக்கும் நல்ல அபிப்ராயம் தோன்றும். மாணவர்கள் செய்வார்களா?

சோனியா காந்தி - அன்புமணி சந்திப்பு - கருணாநிதி அதிருப்தி

பாமகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேற்று புது டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து தனது வீட்டு திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். இது திமுகவை எரிச்சலடைய செய்துள்ளது.

சென்ற மாதம் சோனியாவை சந்தித்த கருணாநிதி, பாமகவைத் துரோகி என சோனியா விமர்சனம் செய்ததாக திமுக பொது குழு கூட்டத்தில் கூறியிருந்தார். சென்ற பாராளுமண்ற தேர்தலுக்கு முன் அமைச்சரவையில் பங்கேற்று, தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக விஷயத்தில் கவனமாக இருக்குமாறு சோனியா கூறியதாக கருணாநிதி கூறியது பாமக வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டது. சோனியா அவ்வாறெல்லாம் பேசக் கூடியவர் அல்ல என்றும், தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு விஷயத்தில் பாமகவிற்குத் திமுக "செக்" வைப்பதற்காக கருணாநிதி அவ்வாறு சொனியா கூறினார் என புரளி கிளப்பி விடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

தற்போது அன்புமணியைச் சோனியா சந்தித்தன் மூலம், சோனியா அவ்வாறு கூறியிருக்கமாட்டார் என பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாமக மீது சோனியா கோபமாக இருந்தால் அன்புமணியைச் சந்தித்து இருக்கமாட்டார் என்றும், அதேபோல் தற்போது மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தும் சந்திப்பின் போது கூட இருந்தது பாமகவிற்குப் புது தெம்பைப் கொடுத்துள்ளது. ஏனெனில் குலாம் நபி ஆசாத் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர். ஆகவே அவரும் கூட இருந்தது திமுக தலைமைக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. சோனியாவை அன்புமணி சந்தித்த போது, பாமக குறித்து சோனியா கூறியதாக திமுக கூறியது குறித்து தெரிவித்து இருக்கலாம் என்றும், அவ்வாறு கூறியிருக்கும் பட்சத்தில் சோனியாவின் அதிருப்திக்குக் கருணாநிதி ஆளாக நேரிடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இது திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையை வெகுவாக பாதிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதுவரை திமுக பாமக கட்சிகளிடையே உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தினத்தந்தியின் திருகுதாளம்!

நியாயமின்றி ஒரு கொலை எங்கு நடந்தாலும், எவரால் நிகழ்த்தப் பட்டாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கதே! அதே நேரத்தில் அந்த கொலை பற்றிய செய்தியை வெளியிடும் ஊடகங்கள், அதன் மூலம் ஒரு சாரார் மீது தப்பெண்ணம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிடக் கூடாது. தினத்தந்தியில் வெளிநாட்டு செய்திகள் என்று ஒரு பகுதி உண்டு. இப்பக்கத்தில் இடம்பெறும் செய்திகளை தினத்தந்தி தனது சொந்த நிருபர்கள் மூலமாக சேகரித்து வெளியிடுகிறதா? என்பது நமக்கு தெரியாது. ஆனால் அப்பக்கத்தில் வெளியாகும் செய்திகளில், பல நேரங்களில் முஸ்லிம் நாடுகள் குறித்த செய்திகள் மிகைப்பைடுத்தப்படுகிறதோ என்று எண்னும் வண்ணம் உள்ளன.
பாகிஸ்தானில் ஒருவரை சிலர் சுட்டுக்கொன்றதாக ஒரு செய்தியை தினத்தந்தி தொடர்ந்து இரு நாட்களாக இப்பகுதியில் வெளியிடுகிறது. ஒரு கொலை செய்தியை வெளியிட்டால், கொலையாளியின் பெயரையும், அவரை கொன்றவர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஆனால் தந்தியோ,
dhinathanthi.gif

''பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் சுட்டுக்கொலை'' என்று முதல் நாளும், அதே செய்தியை
''பாகிஸ்தானில் இந்து வியாபாரி சுட்டுக்கொலை'' என்று இரண்டாம் நாளும் வெளியிடுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொல்லப்பட்டவர்கள் குறித்து இதுவரை எத்தனையோ செய்திகளை வெளியிட்ட தினத்தந்தி, அப்போதெல்லாம் இந்து சுட்டுக்கொலை- முஸ்லிம் சுட்டுக்கொலை-கிறிஸ்தவர் சுட்டுக்கொலை என்று போடவில்லையே! மாறாக, பாகிஸ்தானில் நடந்த ஒரு கொலையை ஒரு மத அடையாளத்தோடு , மறுபடி- மறுபடி செய்தியாக்குவது, பாகிஸ்தான் இந்து விரோத நாடு என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கிவிடும் என்பது தினதந்தி அறியாத ஒன்றா?
எனவே ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, குற்றத்தைக் கண்டியுங்கள். குற்றவாளியை தண்டிக்க உறுதுணையாய் இருங்கள். ஆனால் எவனோ ஒருவன் செய்யும் செயலுக்கு மத அடியாளம் காட்டி, மத நல்லிணக்கத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் உங்கள் எழுத்துரு அமையவேண்டாம் என்பதே எமது அவா.

லிபியா : கடாஃபிக்கு எதிராக அமைச்சர்கள் பதவி துறப்பு!!!

லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோல் செயலைக் கண்டித்து அந்நாட்டின் ஏராளமான அமைச்சர்களும் தூதர்களும், வெளியுறவு அதிகாரிகளும் பதவி துறப்பு செய்துள்ளனர்.

கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை இராணுவத்தையும், கூலிப்படையையும் ஏவிவிட்டு சுட்டுத்தள்ளி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் கடாஃபியை கண்டித்து அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் செவ்வாய்க்கிழமை தம் பதவியைத் துறந்தார்.

முஅம்மர் கடாஃபியின் மகனின் மூத்த உதவியாளர் யூசெஃப் சவானியும் பதவியை உதறிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அப்தெல் ஃபதாவும் பதவியை துறந்திருப்பதன் மூலம் கடாஃபிக்கான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.

லிபியாவில் தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது நாடே சீர்குலைந்துள்ளது தெளிவாகிறது. அமைச்சர்களும், தூதர்களும் பதவியை துறந்துள்ளது நாடு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே காட்டுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபி ஆயுதத்தை தூக்குவதை பிரிட்டன் கண்டிக்கிறது என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறினார்.

கடாஃபி அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். லிபியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் குரல் கொடுத்துள்ளன.தனது குடும்பத்தின் நலனுக்காகக் கோடிக்கணக்கான மக்களை அடக்கி ஆண்ட, தொடர்ந்து ஆள முயலும் கடாஃபியின் செயலை பெரு வன்மையாகக் கண்டித்துள்ளது. லிபியாவுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ளது. அந்நாட்டுடனான ராஜீய உறவை முறித்துக் கொண்டுள்ள முதல் நாடு பெரு.

கடாஃபிக்கு எதிராக 22 அரேபிய நாடுகளும் குரல் எழுப்பியுள்ளன. தமது குடிமக்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் கடாஃபி மதிப்பளிக்க வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு முறையாக பதில் அளிக்கும்வரை அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள லிபியாவை அனுமதிக்க முடியாது என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளன

இரவில் ஒரு மகப்பேறு!!!

மற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.

கூடாரத்தின் வெளியே ஒரு மனிதன் கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கி முகமன் கூறிய உமர், “யார் நீ?” என்று விசாரித்தார்.

“நான் பாலைநிலத்தைச் சேர்ந்தவன். அமீருல் மூஃமினீனைச் சந்தித்து நிவாரண உதவி பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது. அக்காலத்தில் மக்கள் அனைவருக்கும் கலீஃபா அறிமுகமானவராய் இருக்கவில்லை. கலீஃபாவும் ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட’ என்று கட்டியக்காரர்கள் புடைசூழ பவனி வருவதில்லை. எளிமையின் இலக்கணம் நபித் தோழர்கள்.

“இதென்ன கூடாரத்திலிருந்து அழுகைக் குரல்?”

“அல்லாஹ்வின் கருணை உம்மீது பொழியட்டும். அதுபற்றி நீர் கவலைப்பட வேண்டாம்”

“பரவாயில்லை, என்னவென்று என்னிடம் சொல்”

“என் மனைவி. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்”

”அவளுடன் யாரும் துணைக்கு இருக்கிறார்களா?”

“இல்லை”

அதற்குமேல் அங்கு நிற்காமல் உடனே கிளம்பி தம் வீட்டிற்கு விரைந்தார் உமர். அலீ (ரலி) அவர்களின் மகள் உம்மு குல்சும் உமரின் மனைவியருள் ஒருவர். அவரிடம் வந்த உமர், “அல்லாஹ் உனக்கு எளிதாக்கி வைத்துள்ள வெகுமதியில் சிறிது வேண்டுமா?”

ஆவலுடன், “என்ன அது?” என்று விசாரித்தார் உம்மு குல்சும்.

“கணவனும் மனைவியும் வழிப்போக்கர்களாய் மதீனாவிற்கு வந்திருக்கின்றனர். அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவளுடன் யாரும் துணைக்கு இல்லை”

“தங்கள் விருப்பப்படியே செய்வோம்” என்றார் உம்மு குல்சும்.

ஊருக்குப் புதிதாய் வந்த வழிப்போக்கருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அதை இரவில் ரோந்து சென்று அறியும் கலீஃபா, வேறு யாரையும் அழைத்து அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. தம் வீட்டிற்கு விரைந்து சென்று தம் மனைவியை எழுப்பி உதவிக்கு அழைக்கிறார். மனைவியும் “இதோ வந்தேன்,” என்று விரைந்து வருகிறார். மறுமையே முதன்மையாய் வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் அது.

“பிரசவம் நிகழ்த்த என்னென்ன தேவையோ அதற்குண்டான அனைத்தும், துணியும், தைலமும் எடுத்துக் கொள். ஒரு பாத்திரமும் தானியமும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பும் எடுத்து வா”

உம்மு குல்சும் அவர் கேட்டதை எடுத்துக் கொண்டுவர, “வா போகலாம்” என்றார் உமர்.

பாத்திரத்தையும் தானியத்தையும் உமர் எடுத்துக்கொள்ள, உம்மு குல்சும் பின்தொடர விரைந்து அந்தக் கூடாரத்தை அடைந்தார்கள் பரந்துபட்ட நாடுகளின் கலீஃபாவும் அவர் மனைவியும்.

“நீ உள்ளே சென்று உதவு” என்று மனைவியை அனுப்பிவிட்டு அந்த மனிதனுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார் உமர்.

“வா, இங்கு வந்து அடுப்பில் நெருப்புப் பற்றவை” என்று அவனை அழைக்க, நடப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதன் நெருப்பைப் பற்ற வைத்தான். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சமைக்க ஆரம்பித்து விட்டார் கலீஃபா உமர்.

இதனிடையே உள்ளே பிரசவம் நலமே நிகழ்ந்து முடிந்தது. உமரின் மனைவி கூடாரத்தின் உள்ளிருந்து பேசினார். “ஓ அமீருல் மூஃமினீன்! உங்கள் தோழரிடம் ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள்.”

அதைக் கேட்ட அந்த மனிதன் “என்னது அமீருல் மூஃமினீனா?” என்று ஆடிவிட்டான். ஓடோடி வந்து சமைத்து உதவி செய்பவர் அமீருல் மூஃமினீனா? பிரசவம் பார்த்து உதவியவர் அவரின் மனைவியா? அதிர்ச்சியடைந்து பின்வாங்க ஆரம்பித்தான் அந்த மனிதன்.

“அங்கேயே நில்” என்றார் உமர்.

சமையல் பாத்திரத்தை எடுத்துக் கூடாரத்தின் வாயிலில் வைத்துவிட்டுத் தம் மனைவியிடம் கூறினார், “அந்தப் பெண்ணை உண்ணச் சொல்”

பாத்திரம் உள்ளே சென்றது. பிரசவித்த பெண் நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் மீத உணவும் பாத்திரமும் வெளியே வந்தன. எழுந்து சென்று அதை எடுத்து வந்த உமர் அந்த மனிதனிடம் அதை நீட்டி, “நீயும் இதைச் சாப்பிடு. இரவெல்லாம் தூங்காமல் விழித்திருக்கிறாயே” என்று உபசரித்தார்.

பிறகு உமர் தம் மனைவி உம்மு குல்சுமை அழைத்தார், “வா நாம் போகலாம்”

அந்த மனிதனிடம், “நாளை எம்மை வந்து சந்திக்கவும். உமக்குத் தேவையானதை நாம் அளிப்போம்”

மறுநாள் அதைப்போலவே அந்த மனிதன் சென்று உமரைச் சந்தித்தான். கணவன் மனைவிக்கும் புதிதாய்ப் பிறந்த அவர்களின் குழந்தைக்கும் சேர்த்து நிவாரணம் அளிக்கப்பட்டது.

நமக்கெல்லாம் விந்தையாகிப்போன இத்தகைய செயல்கள் கலீஃபா உமரின் இஸ்லாமிய ஆட்சியின் காலத்தில் வெகு இயல்பாய் நிகழ்ந்தன.

Thursday, February 24, 2011

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

cargo-ship.jpg

தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.

இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.

வரலாறு முழுவதும் கடலோர முஸ்லிம்கள் அரபு நாடுகள், இலங்கை மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழகத்தின் உள்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலம் கடற்கரை பட்டிணங்களுக்கு கொண்டு வரப்பட்டு அது கடலோர முஸ்லிம்களால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைக்கும் கூட இதற்கான அடையாளங்களை கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் காண முடிகிறது. இப்படி கொடி கட்டிப் பறந்த வியாபாரத்தை போர்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷார் வந்துதான் நாசமாக்கினார்கள்.

இறைவன் படைத்த கடலுக்கு எல்லைகள் வகுத்து தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கும் நெருக்கடி கொடுத்தனர். பிரிட்டிஷாருக்கு தெரியாமல் இலங்கை சென்று வியாபாரம் செய்தவர்களை (Smugglers) கடத்தல்காரர்கள் என்ற படத்தைச் சூட்டினார்கள். சென்ற நூற்றாண்டு வரை கூட இலங்கைக்கான வியாபாரங்கள் தொடர்ந்து வந்தன. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமான கப்பல் போக்குவரத்து என்று சொல்லி தனுஷ்கோடிக்கும் – தலை மன்னாருக்கும் இடையே கப்பல் விட்டனர்.

தனிப்படட முறையில் மரக்கலன் வைத்து ஏற்றுமதி செய்து வந்த முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியதால் அதைப் பயன்படுத்தி இலங்கை சென்று வியபாரம் செய்து வந்தனர். இந்த கப்பல் போக்குவரத்து 50 ஆண்டுகள் நீடித்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்தோ – சிலோன் போட் மெயில் என்ற இரயில் 110 பயணிகளுடன் பாம்பனிலிருந்து தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் நுழைய இருந்த நேரத்தில் மிகப்பெரிய கடல் அலையால் தாக்கப்பட்டு 110 பேரும் 5 பணியாளர்களும் உயிரிழந்தனர். கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

புயலுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. 1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நேரத்தில் வட இலங்கையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர். அனைத்தையும் இழந்து அகதிகளாக இராமேஸ்வரத்தில் வந்து இறங்கினார்கள் முஸ்லிம்கள். அதோடு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

வேறு வழியில்லாமல் அப்போது முதல் அரபு நாடுகளுக்கு அடிமை வேலை செய்திட புறப்பட்ட பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் இன்று வரை அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தனது பாரம்பரியத்தை அறியாத மக்களாக மாதச் சம்பளத்திலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.

இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளை முஸ்லிம் சமுதாயம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக் கலவரம் முடிந்து அமைதி திரும்பியுள்ள சூழலில் அங்கே வியாபாரத்திற்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து பெரிய அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்த கப்பல் போக்குவரத்து சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் வியாபாரம் செழித்து வளரும் என்பதும் உண்மை. தமிழகத்தின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் இலங்கையின் தற்போதைய தேவையை உணர்ந்து வியாபாரம் செய்ய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேற்றத்திற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகை 60-75 இலட்சம். இலங்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-25 லட்சம். ஆக மொத்தம் 1 கோடி மக்கள் தொகை.

இவ்விரு நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே 95 விழுக்காடு ஒன்றுதான். எல்லாவற்றையும் விட இவர்களின் இறைவழிபாட்டுக் கொள்கை 100 விழுக்காடு ஒன்றுதான். அதனடிப்பபடயில் இவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனையும் ஒன்றுதான். நாடுகளுக்கு மத்தியிலான எல்லைகளால் கடந்த 60 ஆண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஒரே சமூகம் ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கும் இந்த சமூகக் கலப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்யும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைத்துள்ள கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தமிழக முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையை இரு சமூகங்களும் சேர்ந்து பயன்படுத்திட தேவையான பொருளாதாரம் மற்றும் வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்திட வேண்டும்.

அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளியல் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அது சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையில் உழைத்திட வேண்டும்.


உடல் நலம் – இனியாவது விழித்துக் கொள்வோம்!

உலகில் ஆதிக்க வர்கத்தால் உருவாக்கப்படும் அனைத்து விதமான அடிமைத்தனத்திலிருக்கும் மக்களை விடுதலை செய்யும் ஆற்றலும் வல்லமையும் இணையற்ற வாழ்வியல் நெறியான இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது.

இஸ்லாத்தின் வீரியமிக்க அனைத்து கருவிகளும் எல்லா காலத்திலும் உயிர்ப்புடன் இயங்க வைக்கப்பட்டால் உலகில் எந்த ஒரு மனிதனையும் யாராலும் அடிமைப்படுத்திட இயலாது.

ஆனால் இஸ்லாத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கக் கடமையுடைய முஸ்லிம்கள் அதன் வீரியம் அறியாமல் வீணாக்கி வரும் அவலத்தை உலகம் முழுவதும் கண்டு வருகிறோம்.

இஸ்லாமானது வணக்க வழிபாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மட்டுமே பொருந்தும். வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வல்லமை இஸ்லாத்திற்கு இல்லை என்ற மடமைத்தனம் முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களிடம் தான் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது.

இதனால் முஸ்லிம் சமுதாயம் பல நிலைகளிலும் சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். வழிகாட்டுவோர், மீட்டெடுப்போர் தன்னிலை மறந்து அலட்சியமாக கிடக்கின்றனர்.

இன்றைய முஸ்லிம்கள் சந்தித்து வரும் சோதனைகளில் மிக அடிப்படையானது தான் உடல்நலம்.

கடந்த 20 ஆண்டுகளில் விவசாயம், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற மனிதனின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய துறைகளில் அரசு அறிமுகப்படுத்திய தாராளமயம், உலகமயம் என்ற முதலாளித்துவத்தின் சுரண்டல் நிறைந்த வழிமுறைகளால் இந்தியச் சமூகமே சிக்கிச் சீரழிந்து வருகிறது. அதில் முஸ்லிம் சமுதாயமும் தனது வழிமுறை மறந்த காரணத்தால் சிக்குண்டு சீரழிந்து கிடக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்தில் நமது பாரம்பர்ய வழிமுறைகள் பின்பற்றப் படாமல் மேற்கத்தியவாதிகளின் இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் நமது நிலங்களில் அதிகம் கொட்டி அதில் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களை உண்டதினால் மக்கள் அனைவரும் பெரும் வியாதியுடையவர்களாக மாறிவிட்டனர். இந்த நஞ்சு மிகுந்த உணவை உட்கொள்வதால் மக்களின் சேமிப்பும் பரம்பரை சொத்துக்களும் மருத்துவதிற்காக கரைந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் சிறுகச் சிறுக சேமித்த சொத்துக்கள், குழந்தை குட்டிகளை பிரிந்து வாழ்நாளெல்லாம் அரபு மண்ணில் இரத்தம் சிந்தி உருவாக்கிய செல்வம் எல்லாம் மருத்துவத்திற்காக கரைந்து கொண்டிருக்கிறது.

pesti.jpg

விவசாயத்தில் விஷத்தைக் கொட்டி உணவை நஞ்சாக்கி மக்களை நோயாளிகளாக்கி அந்த நோய்க்கு மருந்தையும் புதிது புதிதாக அவர்களே உருவாக்கி அதைக் கொண்டு வந்து நமது தலையிலேயே கொட்டுகின்றனர். டன் கணக்கில் கொட்டப்படும் இராசாயனங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் மக்களுக்கு புதுப்புது வியாதிகள் முளைக்கின்றன.

இவற்றிற்கு வைத்தியம் பார்ப்பதற்கு என்று புதிய புதிய பகாசுர மருத்துவமனைகள் முளைத்து மக்களை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றனர் இந்த படுபாவிகள் அடிக்கும் பகல் கொள்ளையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று அனைவருக்கும் பங்கு.

போதாக் குறைக்கு அந்த நவீன மருந்துகளிலும் போலி மருந்துகள் வேறு மக்களிடத்தில் புழக்கத்தில் விடப்பட்டு அதிலும் கொள்ளை.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை விவசாயத்தில் குறைவானவர்களே ஈடுபடுகின்றனர். பிற மக்களைப் பார்த்து முஸ்லிம்களும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ள இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பான்மையான முஸ்லிம்கள் விவசாயம் என்றால் என்னவென்று கூட அறியாத மக்களாக வியாபாரிகளாகத் தான் இருக்கின்றோம். இதன் காரணமாக விவசாயத்தில் செய்யப்படுகின்ற இந்த படுபாதகச் செயலை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை.

உணவில் நஞ்சு. தாய்ப்பாலில் கூட நஞ்சு. நிலத்தடிநீர் மறைந்து வருகிறது. குளம், குட்டைகள் மாசடைந்து போய் மறைந்தும்விட்டன. கடலில் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் கடலோர கிராம மக்களும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன.

தமிழக கடலோர கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்ட அமிலத் தன்மையின் காரணமாக பெருவாரியான மக்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். இத்தனைக்குப் பிறகும் இவை ஏன் நடக்கிறது. யார் காரணம். இதற்கு என்ன செய்வது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் மக்கள் தொலைக்காட்சி தொடர்களிலும் டாஸ்மாக் உற்சாகத்திலும் மூழ்கி கிடக்கின்றனர்.

மக்களின் உடல்நலம், சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வாழ்வியல் வழிமுறைகளில் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய நடைமுறைகள் குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்ட வேண்டிய ஆலிம்கள், ஜமாஅத் நிர்வாகம், சமூக அமைப்புகள் இந்த சீரழிவுகள் குறித்து எந்த அக்கறையும் இன்றி அறியாமையில் இருக்கின்றனர்.

இனியும் இந்த அக்கிரமங்கள் குறித்து மக்களிடம் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையென்றால் பிறகு ஜமாஅத் நிர்வாகத்தின் பெயர் மட்டும் தான் பலகையில் இருக்கும். ஜமாஅத்தார்களான மக்கள் அனைவரும் நோயாளிகளாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

அதேபோல அமைப்புகள் இருக்கும். ஆனால் கொடிபிடிக்கவோ கோஷம் போடவோ நிதிதிரட்டவோ தொண்டர்களிடம் வலிமை இல்லாமல் நோயாளிகளாக மாறிவிடுவார்கள்.

என்ன செய்வது?

முஸ்லிம்களுக்கு பொறுப்பேற்றுள்ள அனைவரும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு களம் இறங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மதரஸாக்களிலிருந்து பணியை தொடங்க வேண்டும். மதராஸாக்கள் விழித்துக் கொண்டு மக்களை சுற்றி வளைக்கும் இந்த விபரீதத்திலிருந்து அவர்களை பாதுகாத்திட முயற்சி எடுக்க வேண்டும்.

மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய விவசாய முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சொல்லி விவசாயம், உணவு உற்பத்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் தொடர்புடைய விவகாரங்களில் இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் செயல்திட்டங்கள் குறித்து மிக நுட்பமாக போதிக்கப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பயிற்றுவிக்க வேண்டும்.

ஜும்ஆ மேடைகள்

இன்றைய நவீன உலகில் மக்களின் வாழ்க்கை முறையை பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பீடு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

வெறுமனே வானத்திற்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும் மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருந்தால் முஸ்லிம்கள் அனைவரையும் நோயாளிகளாக மாற்றிய பெருமை தான் ஆலிம்களுக்கு கிடைக்கும்.

கோபப்படாதீர்கள்! நிலைமை அவ்வளவு மோசமாகிக் கொண்டிருக்கிறது.

ஜமாஅத்

ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. 30, 40 இலட்சம் செலவு செய்து பெருமைக்கு வீட்டை கட்டி கழிவுநீர் வாய்க்காலை வீட்டின் முன்பக்கம் ஓடவிடும் “சிறந்த” பழக்கம் முஸ்லிம்களிடம் நிலவுகிறது.

கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி கேந்திரமாக காட்சியளிக்கிறது. அரசை எதிர்பாராமல் ஜமாஅத் நிர்வாகம் தலையிட்டு மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு ஊரின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜமாஅத்திற்கு இருக்கிறது.

இது மார்க்கச் சட்டமாகவும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

“அசுத்தங்களை வெறுத்துவிடுங்கள் அல்லாஹ் தூய்மையாக இருப்போரை நேசிக்கின்றான்” -அல்குர் ஆன் – 2:222.

மருத்துவம்

நோய்களினால் தங்களது சொத்துக்களை இழந்து வரும் மக்களை மீட்டிட தயவு கூர்ந்து ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் சேர்ந்து பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உணவு, மருத்துவம் ஆகியவற்றை மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

பெண்கள்

மாறிப்போன இந்த உணவு மற்றும் வாழ்க்கை முறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்கள் தான். இன்றைய தலைமுறை பெண்கள் ஏறக்குறைய 80 விழுக்காட்டினருக்கு இரத்த சோகை நோய் பிடித்துள்ளது.

muslim-women.jpg

17, 18 வயது நிரம்பிய பெண்களை மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றால் உடலில் இரத்தம் இல்லை என்று தான் மருத்துவர் கூறுகிறார். முதல் பிரசவத்திற்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. தாய்ப்பாலும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. இது மிகமிக ஆபத்தானது. நாளடைவில் முஸ்லிம் மக்கள் தொகை குறைவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமையும்.

இதுகுறித்து அந்த அந்த ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் கடுமையாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருத்துவ முறைகளோடு ஒன்றிப் போகக்கூடிய சித்தா, ஆயுர்வேதம், யூனானி போன்ற மருத்துவமுறை பயின்ற மருத்துவரை பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தே இலவசமாக மக்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். இதற்கு பெரிதாக ஒன்றும் செலவிட வேண்டிய அவசியம் இருக்காது.

இதுபோன்ற சேவைகளைச் செய்யும் போது முஸ்லிம் அல்லாத மக்களிடம் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் நல்ல புரிதல் எற்படும் என்பதில் ஐயமில்லை.

100-150 ஆண்டுகளுக்கு முன்பாக மதரஸாக்களில் படித்து பட்டம் பெறும் அனைவரும் மார்க்கத்தோடு மாநபியின் மருத்துவத்தையும் கற்று மக்களுக்குச் சேவை செய்துள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது. அது தான் இஸ்லாமிய கலாச்சாரம்.

ஆங்கில வழி மருந்துகள் இந்த மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட 50-60 ஆண்டுகளிலேயே மக்கள் அனைவரும் தலைமுறை நோயாளிகளாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எல்லாவற்றிக்கும் சரியான, முறையான, நேர்த்தியான தீர்வை தந்துள்ள இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றாமல், நடைமுறைப் படுத்தாமல் இருந்தது நமது குற்றம்.

காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து நாம் பணியாற்ற வேண்டும்.

சுற்றுச் சூழல்

மனிதன் தனது சுயநலத்தின் காரணமாக மனித இனத்திற்கும் இந்த பூமிக்கும் நன்மை பயக்கும் மரங்களை வரைமுறையற்று வெட்டிச் சாய்க்கின்றான். இறைவனுடைய அருள் என்ற மழையை பெய்வித்து பூமியை குளிரச் செய்யும் மரங்களை அவசியமில்லாமல் வெட்டுவதை இஸ்லாம் தடுக்கிறது என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்த வேண்டும்.

அதைத் தான் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நாளையே உலகம் அழியப் போகிறது” என்று தெரிந்தாலும் இன்று மரம் நடுவதை ஒரு மனிதர் நிறுத்திவிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

ஊர் முழுவதும் கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஜமாஅத் நிர்வாகமும் ஆலிம்களும் ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக மருத்துவ குணம் நிறைந்த வேப்பம், வேம்பு, இலுப்பை மரங்களோடு விலைமதிப்புள்ள தேக்கு செம்மரம் போன்றவைகளை வளர்த்திடும் போது வாழ்க்கை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பயனுள்ளதாக அமையும்.

ocean.jpg

அதேபோல பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை நிறுத்திட ஜும்மா மேடைகளை ஆலிம்கள் அதிகமதிகம் பயன்படுத்திட வேண்டும். விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தில் எவ்வித வழிகாட்டுதலும் வெற்றி அடையாது. முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்கான முழு பொறுப்பும் கடமையும் ஜமாஅத் நிர்வாகத்திற்குத்தான் உள்ளது.

ஜமாஅத் நிர்வாகத்திடம் மாற்றம் ஏற்படாமல் முஸ்லிம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.

-

துனீஷியா – இஸ்லாத்திற்கு துரோகம் இளைத்த முஸ்லிம் ஆட்சியாளர்கள்!!!!

Tunisia.gif

1431 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வரலாறு நெடுக காண முடிகிறது. இது இன்று வரை தொடர்கதையாகவே இருக்கிறது.

மார்க்கத்தை விளங்காத மக்கள் செய்த துரோகத்தைக் காட்டிலும் விளங்கி புரிந்து கொண்ட ஆட்சியாளர்களும் அறிஞர்களும் தான் அதிகளவில் துரோகம் இழைத்துள்ளனர்.

இது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் துனீஸியாவில் நடந்துள்ள சம்பவங்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் பாரம்பர்யத்திற்கு சொந்தமான நாடுதான் துனீஸியா. வடஆப்ரிக்காவில் மத்தியத் தரைக்கடலின் கரையோர இஸ்லாமிய நாடுகளில் ஒன்று.

அரபியில் “மகரிப்” என சூரியன் மறையும் இடம் என்றழைக்கப்படும் நாடுகளான லிபியா, துனீஸியா, அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளில் துனீஸியாவும் ஒன்று.

கடந்த இரண்டு மாத காலமாக துனீஸியா மக்கள் அங்கு நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

என்ன நடந்தது?

zine-el-abidine.jpg

1987 ஆம் ஆண்டு முதல் ஜைய்னுல் ஆபீதின் பின் அலி என்பவர் துனீஸியாவின் அதிபராக இருந்தார்.

இஸ்லாமிய நாடுகளில் யார் ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலும் அவர் தங்களுக்கு அடிமைப்பட்டவராக இருந்தால் மட்டும் தான் அவரை ஆட்சியில் நீடிக்க விடுவோம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் வல்லூறுகளான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் துனீஸிய அதிபர் பின் அலி தங்களுக்கு அடிமை போல செயல்படுவதைக் கண்டு பூரித்துப் போய் அதிபர் பின் அலியின் அடாவடித்தனம் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தனர்.

27 ஆண்டு கால பின் அலியின் ஆட்சியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான மேற்கத்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் வலிந்து மக்களிடம் திணிக்கும் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

முதலில் பின் அலி அடிப்படையில் தான் ஒரு முஸ்லிம் என்பதையும் இஸ்லாமிய பாரம்பர்யமிக்க நாட்டின் ஆட்சியாளன் என்பதையும் மறந்து இஸ்லாத்தை துனீஸியாவிலிருந்து அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக்கினார்.

ஒன்றரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட துனீஸியாவில் 99 விழுக்காடு சன்னி முஸ்லிம்கள். மாலிகி மத்ஹபைப் பின்பற்றுகின்றனர். சிறிய அளவில் காரிஜியாக்கள் எனும் எதிர் புரட்சியாளர்களும் உள்ளனர்.

இப்படி முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் பொதுச் சட்டத்தில் ஃபிரென்ஞ்சிவில் சட்டத்தைப் புகுத்தி பெருவாரியான முஸ்லிம்களை குடும்ப இயலில் ஷரிஅத்திலிருந்து விலகிட வைத்தார். இன்றும் துனிஸியாவில் பாகப்பிரிவினை இஸ்லாமிய அடிப்படையில் நடைபெறுவது கிடையாது.

அதேபோல பலதார மணத்திற்கு தடைச்சட்டம் இயற்றிய ஒரே முஸ்லிம் நாடு துனீஸியா தான்.

4512118504_f2c8e27763_z.jpg

விவாகரத்திற்கு கடுமையான தடைகள். பெண்கள் ஹிஜாப் அணிய சட்டரீதியான தடை. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலை பூட்ட வேண்டும். பொது இடங்களில் தொழுகை நடத்த தடை. இஸ்லாமிய கலாச்சாரத்தோடு வாழும் ஆண்கள் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டனர்.

வலுக்கட்டாயமாக தாடியை மழிக்க வைக்கப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படையில் இயக்கங்கள் நடத்த தடை என்று 27 ஆண்டுகளாக துனீஸிய மக்களை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார் அதிபர் பின் அலி.

ஒரு முஸ்லிம் ஆட்சியாளராலேயே முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு விலக நேரந்தது.

மேலும் இவரது கண்மூடித்தனமாக மேற்கத்திய அடிமைத்தனமும் பொருளாதார கொள்கையில் இவர் பின்பற்றிய மேற்கத்திய வழிமுறையும் பின் அலியின் மனைவி முதல் ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து அடித்த கொள்ளையின் காரணமாகவும் துனீஸியாவின் பொருளாதாரம் நசிந்தது.

வேலை இல்லாத் திண்டாட்டம் எல்லை மீறிச் சென்றது. உணவுப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், லஞ்சம், ஊழல், மனித உரிமை மீறல்கள், நசிந்துபோன வாழ்க்கை தரம் என்று மக்கள் விழி பிதுங்கி நின்றனர்.

இந்த நேரத்தில் தான் துனீஸியாவின் ‘சித்திபஅசித்’ என்ற நகரில் காய்கறி கடைவைத்திருந்த பட்டதாரி முகம்மது பவுசி என்ற 24 வயது இளைஞன் காவல்துறையின் அட்டூழியம் தாங்காமல் தற்கொலை. செய்து கொண்டான்.

செய்தி துனீஸியா முழுவதும் பரவியது. காத்துக் கொண்டிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பி தெருக்களில் அரசிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். மேலும் தற்கொலைகள் நடந்தன.

காவல்துறை மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சி மேலும் தீவிரமாகியது. துனீஸியாவில் உள்ள 90 விழுக்காடு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டவுடன் அவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

உலகம் முழுவதிலுமிருந்த மனித உரிமை அமைப்புகள் பின் அலியை கடுமையாக விமர்சித்தன.

கருத்துச் சொல்லும் எல்லோரையும் ஒடுக்க நினைத்தார். அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தடை, இணைய தளத்திற்கு தடை என்று எல்லாம் செய்து பார்த்தார்.

மக்கள் புரட்சி மேலும் தீவிரமாகியது. இறுதியாக தங்கள் எஜமானர்களான அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸிடம் கெஞ்சிப் பார்த்தார். அவர்கள் எப்போதும் “நன்றி” உள்ளவர்கள் அல்லவா!

அவர்களும் சரியான சமயத்தில் பின்அலியை கழற்றிவிட்டனர். கையில் கிடைத்த தங்க கட்டிகளுடன் புகழிடம் தேடி புறப்பட்ட பின் அலியின் விமானத்தை தரையிறங்கிட ஃபிரான்ஸ் அரசு அனுமதி தரவில்லை. வேறு வழியில்லாமல் சவூதி அரேபியாவில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார்.

பின்அலி புறப்படும் முன் அவரது ஆதரவாளர்களை வைத்து அமைத்த தற்காலிக அரசையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

துனீஸியாவில் ஏற்பட்டுள்ள இந்த மக்கள் புரட்சி அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவி வருகிறது. அல்ஜீரியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உலகில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின் மேம்பாட்டிற்காக இறைவன் இஸ்லாமிய நாடுகளில் வழங்கிய வளங்களை ஒருசிலர் மட்டும் கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த கொள்ளையர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

இதன் காரணமாக 57 இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

இஸ்லாத்திற்கு துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கை தொடர்கிறது. தீர்வு எப்போது?


தொட்டால் சினிங்கிக்கும் அரபு அரசுகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன!!!

தூனிசியா தொடக்கி வைத்த போராட்ட தினம் தொட்டு முயற்சித்ததை சாதித்துவிட்டோம் என்று ஒரு கூட்டம் கைதட்டி சந்தோக்ஷப்படலாம்,
ஆனால் அதை தொடர்ந்து பல தேசங்கள் பத்தி எரிய ஆரம்பித்துள்ளன.

தூனிசியாவில் சர்வதிகார ஆட்சி தலைதூக்கியுள்ளது, அதை மக்கள் புரட்சி மூலம் தான் மாற்றலாம், இந்த புரட்சி மக்களுக்குத் தேவையான அரசாங்கத்தை உறுவாக்க உதவும் என்கின்ற மனோநிலை ஒரு சிலரால் நவீன தொடர்பு சாதனங்கள் மூலம் தூனுசிய இளைஞர் சிந்தனைகளை தூண்டிவிட்டு அந்த நாடு பல தினங்கள் எரிந்து அரசரே ஓடி ஒலிந்துவிட்ட நிலையில்.

இது சரியான முடிவாக இருக்குமோ என்று எகிப்து மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு பல நாட்களாக வீட்டு குமரிகளெல்லாம் பாதைக்கு வந்து மானம் மரியாதையை காற்றில் பரக்க விட்டு விட்டு போரட்டமாம் ……..?1

தொடர்ந்து ஏன்? எதற்கு? என்று தெரியாமலே சில குழுக்களால் இந்த போராட்டம் பஹ்ரைன், எமன், லிபியா, ஈரான் என்று பட்டியல் நீண்டு செல்கின்றது.

பக்கத்து நாட்டைப் பார்த்து, எழுச்சியுற்று பாதைக்கு வந்து பல காயங்கள், பல சாவுகள் என்று ஆர்பாட்டங்கள் இந்த நாடுகளில் இன்று வரை வீரியமாகி நிற்கின்றன.

இந்த மக்கள் எழுச்சி உண்மையில் அரசுகளின் அராஜகங்களையும் அடக்குமுறைகளையும் தட்டிகேற்பதற்கும் மக்கள் உரிமைகளை வெல்வதற்கும் தான் என்றால் இந்த எழுச்சியும் ஆர்பாட்டமும் இன்னும் பல நாடுகளில்
தொடரலாம். அது அமெரிக்காவையும் விட்டு வைக்காது.

அமெரிக்க பிரஜைகளே அந்த நாட்டின் சர்வதேச கொள்கைகளுக்கும் இராஜதந்திர நடத்தைகளுக்கும் தீர்மானங்களுக்கும் எதிராக போராட நீதி தேடி பாதைக்கு வருவார்கள், இது வெகு தூரத்தில் இல்லை.
இந்த அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியை மூன்று வேற கோணத்தில்
நோக்கலாம்.

ஒன்று:

இது அந்த நாட்டு மக்களே அவர்களின் அரசுகள் மீது கொண்டிருக்கும் அதிர்ப்தி.

உதாரணமாக தூனுசியா தொடர்பாக அண்மையில் வெளியான செய்திகளின் படி அரச குடும்பங்களைச் சேர்ந்த 10 சதவீதமானவர்கள் பணக்காரர்களாகவும் ஆடம்பர வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கும் அதே வேலை 80 சதவீதமானவர்கள் சாதாரண நிலையில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்த நிலை உண்மையில் மிக மோசமானதாகும்.

உலகம் பலவிதமான, பல துறைகளிலும் பாரிய வளர்ச்சியை கண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு ஆட்சியின் கீழ் மக்கள் அமைதியாக, மெளனமாக இருப்பது என்பது சகிக்க முடியாதது தான்.

ஆனால் உரிமைகளை மீட்டியெடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் போது மக்கள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளின் பொதுமக்கள் பாதைக்கு வந்து போராட்டங்களை சந்தித்து பல உயிர் சேதங்களை அரங்கேற்றி உரிமையை வெல்ல வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாட்டுக்கு மாற்றமானதாகும்.

சாத்தியமான, சாத்வீகமான முறையில், உரியவர்களை அனுகி சாதிக்கலாம்.

இந்த நடைமுறையை அன்று தூனிசியா செய்திருந்தால் இன்று எகிப்தும் மற்றைய நாடுகளும் அதையே செய்திருக்கும்.

ஆனால் மக்கள் எழுச்சி என்ற போராட்டமானது அது எல்லா நாடுகளையும் கடுமையாக பீடித்து வருகின்றது.

இதனை எல்லா நாடுகளும் எல்லா குடிமக்களும் கவனத்தில் கொண்டு, இதனை படிப்பினையாக எடுத்து சாத்வீக பாணியில் நடைபோட முன்வர வேண்டும்.

இரண்டு:

தூரத்திலிருந்து கொண்டு தூண்டி விடும் சில தீய சக்திகளின் கைகளில் சிக்குண்டு சில அரபு இளைஞர்கள் பாதைக்கு வந்திருக்கலாம்.

சமூக தளங்கள் என்று பேசப்படும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இந்த இலவச ஊடகங்களை பயன்படுத்தி முஸ்லிம்களை தீயிலிட துடிக்கும் சில தீய சக்திகள் குறித்த நாடுகளில் சில இளைஞர்களை தூண்டிவிடுவதன் மூலம் அரபு தேசங்கள் மக்கள் எழுச்சி என்ற பெயரில் ஆபத்தில் மிதப்பதாகக் கூட நினைக்கலாம்.

உண்மையில் இந்த நிலை ஒரு நாட்டுக்கு வருமாக இருந்தால் அந்த நாட்டை முழுமையாக நக்ஷ்டத்தில் வீழ்த்தி, நாட்டின் மொத்த வளர்ச்சியையும் தடுக்கும் மிகப் பெரிய சக்தியாக அது செயற்படும்.

இதனை குறித்த நாட்டின் அரசுகள் மிக கவனமாக கையாண்டு இதன் ஆணிவேரை துண்டித்து விட முன்வர வேண்டும்.

மூன்று:

அரபு தேசங்கள் தொட்டவுடன் தொட்டால் சினிங்கிகள் போல், மரணித்தது போல் போராட்டங்கள் தொடர்வதற்கும் அதனை ஆரம்பத்திலேயே அடக்கிவிட முடியமைக்கும் என்ன காரணம் என்று சிந்திப்பதில் மூன்றாவது ஒரு காரணமும் இருக்கலாம்.
அது தான்,

அரச, பணக்கார வர்க்கங்களின் ஆனாதிக்கத்திற்கு அல்லாஹ் வழங்கும் தண்டனை.

சில நாடுகள் சர்வதேசமட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து, உள்ளாச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்

சர்வதேச மட்டத்தில் தனது நாட்டின் சந்தையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கிலும் எல்லா வகையான அசிகங்களுக்கும் அனுமதி வழங்கி உயிர் ஊட்டக்கூடைய அரசாங்களாக இருந்தால் அந்த அரசாங்கத்தை அல்லது குறித்த குழுவை அல்லது தனிமனிதனை அல்லாஹ் ஏதோ ஒரு வகையில் தண்டிப்பான் என்பதை கடந்த கால வரலாறுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பல படிப்பினைகளை அல்லாஹ் தனது கடைசி வேத நூலில் படம்பிடித்துக்காட்டி அதனைக்கொண்டு படிப்பினை பெறும்படி வேண்டி இருக்கின்றான்.

சர்வதேச அல்லது மேற்கத்தைய விருந்தினர்களை கவனத்தில் கொள்ளும் நோக்கில் சிவப்பு வீடுகள், குடிபான பந்தல்கள், பிறந்த உடல் திறந்த நீச்சல் குளங்கள் என்று அசிங்களையும் தடுக்கப்பட்டவைகளையும் அனுமதித்திருக்கும் அரசுகள் அவைகளை முடக்குவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நோக்கங்களை கொண்டு அரசியல் நடாத்தும் அரசுகள் தங்களை மீள்பரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.

அந்த மீள்பரிசீலனைகளும் அதனால் ஏற்படும் மாற்றங்களும் தனிமனித, சமூக மாற்றங்களுக்கு துணைபுரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எந்த நாடும் எந்த மக்களும் அநியாயம் செய்யப்படாமல் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க வேண்டும்.

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்!!!

TMH-Indian-history-Custom-2.jpg
வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல.

எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது.

சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலமாகச் சித்தரித்தனர்.

முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர்.

திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது.

இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன் விபரீத விளைவுகள்தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர்.

மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளை விடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.

ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.

புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா.

தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார்.

டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம்.

ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன.

ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம்.

இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.

அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.

கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.

இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

- முனைவர் வசந்தி தேவி, சக்தி

நேரமில்லை! நேரமிருக்கிறது!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும்,சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


தொழ நேரமில்லை!

ஓத நேரமில்லை!

பசியாற நேரமில்லை!

படிக்க நேரமில்லை!

தூங்க நேரமில்லை!

பர பரவென்ற வேலையால்

பறந்து கொண்டு இருக்கிறேன்!

பணம் உண்டு பையில்

மதிய உணவு இல்லை கடையில்

நேரத்தில் சாப்பிட நேரமில்லை!

படைத்தவனை நினைக்க நேரமில்லை!

பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!

பழகியவனை பார்க்க நேரமில்லை!

மனைவியிடம் பேச நேரமில்லை!

மக்களிடம் பேச நேரமில்லை!

பள்ளி விட்டு வரும் பிள்ளையை

பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!

தாயை கவனிக்க நேரமில்லை!

தந்தையை கவனிக்க நேரமில்லை!

உற்றாரை கவனிக்க நேரமில்லை!

ஏழை வரி கொடுத்து

ஈட்டிய செல்வத்தை

தூய்மையாக்க நேரமில்லை!

நேரமிருக்கிறது!

மனிதா நேரமிருக்கிறது!

உயிர் பிரிய நேரமிருக்கிறது!

மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!

மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!

நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!

தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!

மண்ணறை அழைக்கிறது

நான் தனி வீடாவேன்

புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்

நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்

தீயவர்களுக்கு நோவினை தருவேன்!

நன்மை தீமை பிரித்தறிந்து

மண்ணறையில் கேள்விக்கும்

மண்ணறையின் வேதனைக்கும்

நேரமிருக்கிறது!

மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!

மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!

மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்

மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!

மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!

தந்தையை கண்டு மகன் ஓடுவான்!

மகனை கண்டு தந்தை ஓடுவான்!

மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!

கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!

நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!

எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!

மறுமையில் ஓட நேரமிருக்கிறது!

மறுமையில் விவாதம்

மனைவியிடம் கணவன்

உனக்கு வாரி வழங்கினேன்

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

மனைவி ஒத்துக்கொள்வாள்

நீங்கள் சிறந்த கணவர்தான்

எனக்கும் நன்மைதான் வேண்டும்

பாசமிகு கணவனை பிரிந்து

வெருண்டு ஓடுவாள்

ஓடுவதை காண நேரமிருக்கிறது!

பெற்ற மக்களிடம் ஓடுவான்

பெற்றெடுத்த மக்களே!

நான் சிறந்த தந்தையல்லவா!

துன்பம் தொடாமல் அனைத்து

வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!

நீங்கள் சிறந்த தந்தைதான்

எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!

தந்தையிடம் இருந்து

வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!

காட்சிகளை காண நேரமிருக்கிறது!

உலகைப் படைத்தவனின் கோபம்

உலகம் முழுவதிலும்

அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக

அழிவுக்கும் நேரமிருக்கிறது!

மனிதனுக்கோ

மறுமை பயம்

மனதில் இல்லை!

சகோதரச் சண்டை,

உடன்பிறந்தார் சண்டை

குலச்சண்டை,

தெருச்சண்டை,

சம்பந்தி சண்டை,

குழந்தைகள் சண்டை,

அடுத்தவன் வீட்டின்

இடத்தை அபகரித்த சண்டை

படிப்பில், அறிவில், ஆற்றலில்,

பணத்தில், அழகில், குலத்தில்

பெருமை, ஆணவம் மேலோங்க

பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு

நேரமிருக்கிறது!

மனிதர்களே பாசமும்

கேள்விக்குறியாகும் நாள்!

உங்கள் செல்வமும்

பலன் தர முடியாத நாள்!

எந்த பரிந்துரையும்

ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!

இம்மை, மறுமையின் அதிபதி

வல்ல அல்லாஹ்!

நீதி வழங்கும் நாள் -அந்த

மறுமைக்கு நேரமிருக்கிறது!

மண்ணறைகளைச்

சந்திக்கும் வரை

அதிகமாகத்(செல்வத்தை)

தேடுவது உங்கள்

கவனத்தைத்

திருப்பி விட்டது.

பின்னர் அந்நாளில்

அருட்கொடை பற்றி

விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:102:1,2, 8)

அலாவுதீன்.S