அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label தன்னார்வ ரத்ததான முகாம். Show all posts
Showing posts with label தன்னார்வ ரத்ததான முகாம். Show all posts

Friday, January 16, 2009

ராமநாதபுரம் - தன்னார்வ ரத்ததான முகாம்

தன்னார்வ ரத்ததான முகாம்


ராமநாதபுரம், ஜன. 12: ராமநாதபுரம் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய கடலோரக் காவல்படை ஆகியன இணைந்து, தன்னார்வ ரத்ததான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

மண்டபம் இந்தியக் கடலோர காவல் படை அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, கடலோரக் காவல் படை மண்டபம் பிரிவு கமாண்டர் கே. ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.

ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் எஸ். லோகநாதன் முன்னிலை வகித்தார்.

கடலோரக் காவல் படை பொறியியல் வல்லுநர் என்.கே. சர்மா முகாமைத் தொடக்கி வைத்தார்.

முகாமில் கடலோரக் காவல் படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் உள்பட 35 பேர் ரத்த தானம் செய்தனர்.

மாவட்ட ரத்த வங்கி அலுவலர் சகாய ஸ்டீபன்ராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் பொருளாளர் கோதண்டராமன், பாஸ்கரன், பாரதி, முகாம் ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் ஆகியோரும் முகாமில் கலந்துகொண்டனர்.