அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 1, 2012

பிரம்மபுத்ரா நதி, திடீரென்று வறண்ட சம்பவம்!

இடாநகர் : ஆசியாவின் முக்கிய ஜீவநதியான பிரம்மபுத்ரா நதி, திடீரென்று வறண்ட சம்பவம் அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை, அருணாச்சல் பிரதேச மாநில முதல்வரின் அரசியல் ஆலோசகரும், மாநில அரசின் செய்தித் தொடர்பாளருமான டாக்கோ தாபி உறுதி செய்துள்ளார். இது, சீனாவின் சதி வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக குர்ஆன் எரிப்பு எதிரொலி - ஆப்கான் விமானநிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தக் கலவரங்களில் நான்கு அமெரிக்க படை வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இன்று ஜலாலாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

சீனாவில் கலவரம் : முஸ்லிம்களை வெட்டி படுகொலை செய்த கொடூர கும்பல் !


சீனாவின் வடமேற்கே உள்ள சின்ஜியாங் உய்குர் பகுதியில் துர்க் மொழி பேசும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஹன் பிரிவு சீன மக்களும் அதிகம் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இப்பகுதியில் இன மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.

அல்-குர்ஆன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!!! மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா? குர்ஆனின் நற்போதனைகள் மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா? நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடு!


பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்...........

தேனிலவுக்கு அழைத்துவந்து மனைவியைக் கொன்ற கணவன் தப்பியோட்டம்

Honeymoon trip ended as a tragedyதேனிலவைக் கழிப்பதற்காகத் தன் மனைவியை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அழைத்துவந்த கணவன், அவரது கழுத்தைவெட்டிக் கொடூரமாகக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இப்படுகொலை இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் (28.02.2012) மாலையில் மணப்பெண்ணின் சடலம் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தியின் மூலம் ஒளிரப்போகிறது தமிழ்நாடு : 3 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!

 மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரியசக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உருவாக்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், முதற்கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு 1கிலோவாட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதன்மூலம் 2 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம்...


மரணம்... அந்த சொல்லின் அர்த்தம் கூட எனக்கு இன்னும் புரியவில்லை.. 
அதற்குள் நான் மரணித்து விட்டேன் எதற்காக இந்த மரணம் என்பதும் இன்னும் விளங்கிடவில்லை..

Sunday, February 26, 2012

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்!



குறைந்த இடவசதியே போதும். 
ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ. 
மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம். 

''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி. 

யார் தீவிரவாதி !!!

Inline image 1


சின்னச் சிரிப்போடு;
மெல்லிய அச்சத்தோடு;
உதடுகள் உதித்தது;
யூத குழந்தைக்கு;
அணுதினமும் உரைப்பார்
என் அப்பா;
பாலஸ்தீனியர்கள்
பயங்கரவாதிகள் என!

குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை!

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நடத்திய "ஆரோக்கியமான மக்கள் ஆரோக்கியமான தேசம்" தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்.

..தமிழ்நாடு அணைத்து மாவட்டகளில் நடந்த நிகழ்ச்சி ஒரு தொகுப்பு .... Inline image 1Inline image 2 Inline image 3Inline image 4

காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு எப்படி?

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறிக்கொண்டிருக்கிறது. 

இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு,

நன்னாரி ( மூலிகை ) வேர் !!!



நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.


இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.