இடாநகர் : ஆசியாவின் முக்கிய ஜீவநதியான பிரம்மபுத்ரா நதி, திடீரென்று வறண்ட சம்பவம் அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை, அருணாச்சல் பிரதேச மாநில முதல்வரின் அரசியல் ஆலோசகரும், மாநில அரசின் செய்தித் தொடர்பாளருமான டாக்கோ தாபி உறுதி செய்துள்ளார். இது, சீனாவின் சதி வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரம்மபுத்ரா “வரலாறு” : திபெத்தின் தென்மேற்கு பகுதியில் யார்லங் ஷாங்போ என்ற பெயரில் உருவாகி, ஹிமாலய மலைத்தொடர் வழியாக உட்புகுந்து, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உட்புகுகையில், திஹாங் என்று பெயர் மாற்றம் பெற்று, தென்மேற்கு பகுதியாக பாய்ந்து அசாமில் புகுந்த புகுந்தவுடன் பிரம்மபுத்ரா என்று பெயர் பெற்று வங்கதேசத்தில் நுழைந்தவுடன் ஜமுனா என்று பெயர் பெறுகிறது (இந்தியாவின் யமுனை நதி அல்ல). கங்கை நதியின் டெல்டா பகுதிகளில் பாய்ந்து, அங்கு பத்மா நதியுடன் இணைகிறது. பின் மேக்னா என்று பெயர் பெற்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சீனா தான் காரணம் : பிரம்மபுத்ரா நதி வரும்பாதைகளில், சீனாஏற்படுத்தியுள்ள செயற்கை தடுப்புகளினாலேயே, நதி வறண்ட சம்பவம் நடைபெற்றுள்ளதாக டாக்கோ தாபி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி, பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம் திடீரென்று 30 அடி அளவிற்கு அதிகரித்தது. இதன்காரணமாக, அருணாச்சலபிரதேச மாநிலத்தின் பெரும்பகுதி தண்ணீரில் சிக்கி தத்தளித்தது. திபெத்தில் இயங்கி வரும் நீர்மின் நிலையம் பலத்த சேதத்தை சந்தித்தது. இதில் சிக்கி பல பேர் பலியானதாக அவர் கூறினார். பிரம்மபுத்ரா நதி வறண்ட சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சிலநாட்களுக்கு முன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ கே அந்தோணி, அருணாச்சலபிரதேச மாநிலம் விஜயம் செய்வதாக இருந்தார். ஆனால், அதற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அருணாச்சல பிரதேச மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்திய அமைச்சர் ஒருவர் , நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்ல மற்ற நாடுகளிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும், சீனாவின் இந்த கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment