ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடக்கிறது. நேற்று விசாரணை துவங்கியதும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.சிங், இந்த வழக்கு தொடர்பான மேலும் சில முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வது தொடர்பாக மனு அளித்தார். இதற்கு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Wednesday, March 7, 2012
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மேலும் பல முக்கிய ஆவணங்களை, சிறப்பு கோர்ட்டில் நேற்று, சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடக்கிறது. நேற்று விசாரணை துவங்கியதும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.சிங், இந்த வழக்கு தொடர்பான மேலும் சில முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வது தொடர்பாக மனு அளித்தார். இதற்கு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Thursday, November 10, 2011
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் தொடர்பாக, டிசம்பர் 1-ம் தேதி பதிலளிக்குமாறு சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Monday, October 3, 2011
கனிமொழி ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
Saturday, July 9, 2011
அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!
அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?
"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான்.
எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார். பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை குற்றவாளி, பெண் பித்தர் சங்கராசாரியார் ரொம்ப காலங்களுக்கு பிறகு இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல் தங்கள் பார்பன உயர்ஜாதியை சேர்ந்த திருவாங்கூர் மன்னரின் குடும்ப சொத்தாக இந்த புதையலை மாற்ற திட்டம் வகுத்து செயல்படுகிறார் சங்கராசாரி.
சங்கர மடத்தை தன் கைகளில் வைத்து கொண்டு பிராமணர்கள் மட்டும் அதன் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்களோ அது மாதிரி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலையும் பறிக்க நினைக்கின்றனர். அதானால்தான் இந்த சங்கராச்சாரி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார்.
"கண்டெடுக்கப்படும் புதையல்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம்" என்ற சட்டம் இதற்கும் பொருந்தும். ஆகவே இது அரசுக்கு சொந்தமானது தான் இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமுக்க பார்க்கும் பார்ப்பன கழுகுகளிடம் இருந்து அரசு தன்வசப்படுத்தி மக்கள் பணிகளுக்கு செலவிட வேண்டும்.
Sunday, July 3, 2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை தொடக்கம்!!
டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. கோடை விடுமுறையையொட்டி கோர்ட் செயல்படவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் நாளை முதல் மீண்டும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நாளை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது முனனாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன பிரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 14 பேர் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு ஆஜர்படுத்தப்படுவர்.
உச்சநீதி்மன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிறப்பு சிபிஐ கோர்ட் விசாரித்து வருவது நினைவிருக்கலாம்.
நாளை முதல் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் தொடங்கவுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில் 14 தனி நபர்கள் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 2வது வாரத்தில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
முதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பஹுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, யூனிடெக் நிறுவன எம்.டி. சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, கெளதம் தோஷி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.
2வது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன என்பது நினைவிருக்கலாம்.
Friday, June 24, 2011
கனிமொழி சிறையில் கொப்புளங்களுடன் கஷ்டப் படுகிறார் - கருணாநிதி!
Tuesday, June 14, 2011
கனிமொழி ஜாமீன்: உச்சநீதிமன்றம் கேள்வி
கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறையிடம் மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் இருக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியில் ஜாமீன் மனுவை இந்திய உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரித்தது. அப்போது, இந்த முறைகேட்டில் கனிமொழிக்கும், ஷரத்குமாருக்கும் தொடர்பு இல்லை என்றும், கடனாகப் பெற்ற 200 கோடி ரூபாய் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும் மூத்த வழக்கறிஞர் அல்டாஃப் அகமது வாதிட்டார். ஆனால், அந்தத் தொகை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்காக லஞ்சமாகப் பெறப்பட்டது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சிபிஐக்கு நீதிபதிகள் மூன்று கேள்விகளை எழுப்பினார்கள்.
ஆகிய கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமைக்குள் அதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். சிபிஐ பதிலளித்த பிறகு, வழக்கு விசாரணை அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது | |||||
Monday, May 9, 2011
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்த ராஜாத்தி அம்மாளின் காலில் விழுந்தார் ஆ.ராசா!
அச்சமயம் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வந்து ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கினார். ராஜாத்தி அம்மாள் இருக்கைக்கு அருகே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ராமலிங்கம், ஏ.கே.எஸ். விஜயன், ஹெலன் டேவிட்சன், தாமரைச் செல்வன், வசந்தி ஸ்டான்லி, செல்வகணபதி மற்றும் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்
நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மதிய உணவுக்காக ராஜாத்தி அம்மாள் தமிழ்நாடு இல்லம் திரும்பினார். தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதால் கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோர் மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மதியம் நீதிமன்றத்தில் வந்து இருந்தார்கள். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை 14 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி. சைனி கூறினார்..
Thursday, May 5, 2011
கனிமொழி நாளை கைது?
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி நாளை (வெள்ளி) கைது செய்யப்படலாம் என்று மத்தியப் புலனாய்வுத்துறைவட்டாரங்களிலிருந்து செய்தியலைக்கற்றைகள் பரவி உள்ளன.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி ஆகியோர் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2 ஜி அலைகற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, வெள்ளிக்கிழமை (மே 6) கைது செய்யப்படலாம்.
ம.பு .து சிறப்பு நீதிமன்றத்தில் மே 6 ஆம் தேதி முன்னிலையாவதற்காக கனிமொழி, சென்னையிலிருந்து புதன்கிழமை காலையில் தலைநகர் டெல்லி வந்தார். தி.மு.க. நா.ம. உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும்அவருடன்டெல்லி வந்துள்ளனர்
சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடனும், தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார்.பிரபல சட்ட நிபுணர்களான ராம் ஜேட்மலானி, முகுல் ரோத்தகி ஆகியோருடனும் தொலைபேசி மூலம் கனிமொழி ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின் சார்பாக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் பிரபல சட்ட நிபுணர் பராசரனின் ஆலோசனையையும் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
அலைக்கற்றை விவகாரத்தில் சிறையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கக் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களது மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது. இந்த மனுமீது கடந்த இரு தினங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் நடைபெற்றது. மேலும் இரண்டு நாள்களுக்கு மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மே 6 ஆம் தேதிக்குள் 5 பேரின் மனுக்கள் மீது விசாரணை முடிந்து, டெல்லி உயர் நீதிமன்றம் பிணையில் விடுவிப்பு வழங்கும் பட்சத்தில் கனிமொழியும் அதே நடவடிக்கையைப் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது இப்போது மாறிவிட்டது. இந்த நிலை கனிமொழி தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிகிறது.
இந்த முறைகேடு விவகாரத்தில், குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட வருமான வரி, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வருமான வரி தொடர்பான விவரங்களை ம. பு.து உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்ய இருக்கிறது. இதன் அடிப்படையில் 5-ஆம் தேதிக்குப் பதில் மே 12 ஆம் தேதி கனிமொழி உள்ளிட்ட நான்கு பேரும் அமலாக்கப் பிரிவு முன் நின்றே ஆகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படலாம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் செம்மொழிக்கான விருது வழங்கும் விழாவுக்கு மே 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டை மிக சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் கலந்து கொள்வார் என தமிழ் ஆர்வலர்கள் மிக ஆவலுடன் உள்ளனர்.ஆனால் அதே நாளில் முதல்வரின் மகள் கனிமொழி ம.பு.து சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனால் முதல்வரின் கவனம் முழுவதும் அரசியல் ரீதியாக கனிமொழிக்கு ஆதரவாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தே இருக்கும் என்று கருதப்படுகிறது
Tuesday, April 26, 2011
போலி சாமியார்களின் முன்மாதிரி - சத்திய சாய் பாபா !

தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயலில்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான். ஆன்மிக அதிசயம் என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்ந்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்டு படத்தில் போடப்பட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இரசாயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடன் செக்ஸ் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது, இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர்கள் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள். நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள். ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை. தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாலு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாமும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன். பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.
Thursday, April 21, 2011
2ஜி வழக்கு -அமலாக்கப் பிரிவு அறிக்கை
| | |
| இந்திய உச்சநீதிமன்றம் |
அந்த முறைகேடுகள் தொடர்பாக, 31 நிறுவனங்களை கண்காணித்து வருவதாகவும், அவற்றில் 26 நிறுவனங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கப் பிரிவு அறிக்கையில், அந்த முறைகேடுகளில் தொடர்புடைய பணம் 6 நாடுகளில் இருந்து பரிமாறிக் கொள்ளப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், சைப்ரஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு இது தொடர்பாக கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அமலாக்கப் பிரிவின் சார்பில் ஆஜராகி, அந்த அறிக்கையை வாசித்தார்.
பணப்பரிவர்த்தனை
| | |
| சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ ராசா |
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கிடையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, அந்தத் தொகை கடனாகப் பெறப்பட்டதாகவும், அது வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும் ஒரு நிறுவனம் கூறியது. ஆனால், அதைத் தொடர்ந்து அந்தத் தொகை அந்த நிறுவனத்தின் மொரீஷஸ் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது என்று வேணுகோபால் தெரிவித்தார். ஆனால் அந்த நிறுவனங்களின் பெயர்களை வேணுகோபால் வெளியிடவில்லை.
டி.பி. ரியால்டீஸின் துணை நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் அளித்ததாகவும், அது பங்குகள் வாங்குவதற்காக தரப்பட்ட முன்பணத் தொகை என்றும், ஆனால் பங்கு விலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் தொலைக்காட்சி சார்பி்ல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களான திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் மத்திய புலனாய்வுத்துறை சென்னையில் விசாரணை நடத்தியது. நேற்று, அந்தத் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத் குமாரிடம் டெல்லியில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அலைக்கற்றை உரிமம் பெற்ற பிறகு, ஒரு நபர் தனது பங்குகளை விற்றதன் மூலம் பெரும் லாபம் பெற்றிருப்பதாகவும், அது மொரிஷஸ் வங்கிக் கணக்கில் போடப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அமலாக்கப்பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பூர்வாங்க அடிப்படையில் பார்க்கும்போது சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள்.
அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய புலனாய்வுத்துறையும் விசாரணை நிலவர அறிக்கையை இன்று தாக்கல் செய்திருக்கிறது. அது நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலனாய்வுத்துறை கடந்த மார்ச் 1-ம் தேதி விசாரணையின் போது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, 10 நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட 63 பேர் தங்கள் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அந்த அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, March 2, 2011
2ஜி ஊழல்: 63 பேரை சிபிஐ கண்காணிக்கிறது!!!
இந்த வழக்கின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஆதரவு தெரிவித்த மத்திய அரசு, இதற்காக நீதிமன்றத்தையும், நீதிபதியையும் நியமிக்குமாறு கேட்டு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சட்ட அமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தது.
இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்சிடம் தெரிவித்தார்.
சிபிஐ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த வழக்கு குறித்த சிபிஐயின் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐயின் கண்காணிப்பின்கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் புரமோட்டார்கள் உள்ளிட்ட 63 பேர் உள்ளதாக வேணுகோபால் தெரிவித்தார்.
சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணை அறிக்கையை மார்ச் 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
டாடா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விசாரணையை மூடப்பட்ட அறைக்குள் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ சுதந்திரமாக நடத்தலாம் என அனுமதி வழங்கி இருந்த நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அரசு அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிலையன்ஸ் அனில் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் டெக்னாலஜி நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் விசாரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கு உச்சநீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர்மட்டத்தினர் விசாரிக்கப்படவில்லை. நிர்வாக இயக்குநர்களுக்கு சம்மன் அனுப்பப்படாதது வியப்பளிக்கிறது எனத் தெரிவித்திருந்தது
Thursday, March 11, 2010
போலிச்சாமியார் நித்யானந்தாவின் மலேசிய ஆசிரமம் மூடப்பட்டது
நடிகையுடன் தகாத உறவு கொண்ட போலிச்சாமியார் நித்தியானந்தாவின் சொற்பொழிவு மற்றும் தியான முறைகளை விளக்க மலேசியாவில் அமைக்கப்பட்ட கிளை ஆசிரம மையம் அதன் செயல்பாடுகளை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.
தமன் தேச கொம்பாக் என்ற மையம் நித்யானந்தாவின் போதனைகள் மற்றும் தியான முறைகளை மலேசியாவில் பரப்பி வந்தது. அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து மலேசியாவில் உள்ள இந்து சங்கம் இந்த மையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கோரியது. இது தொடர்பாக இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பேசும் போது, "இந்த ஆசிரமம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து பக்தர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து தாற்காலிகமாக இந்த ஆசிரமத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக ஆசிரமத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி!
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிலும், வார இதழ் ஒன்றிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சி குறித்து கருத்து தெரிவித்த நித்யானந்தா, தான் சட்டப்படி தவறு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
அதுவரை இந்த வீடியோ காட்சிகள் மோர்ஃபிங் செய்யப்பட்டவை என்று கருதி வந்த நித்யானந்தாவின் சீடர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது அடங்குவதற்குள் நித்யானந்தா ரஞ்சிதா சம்பந்தப்பட்ட மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளது.
படுக்கை அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரம் கழித்து நடிகை ரஞ்சிதா அந்த அறைக்கு வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு, அவருடைய சட்டையையும் கழற்றிவிடுகிறார். வேட்டி உடுத்திய நிலையில் நித்யானந்தா அமர்ந்திருக்க, அவரது உடலுக்கு ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மாசஜ் செய்கிறார்.
இந்த காட்சிகள் டிசம்பர் 25ஆம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நித்யானந்தாவின் சீடர் லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையரைச் சந்தித்து சில சிடிகளை அளித்தது நினைவிருக்கலாம். அவற்றில் ஒன்றே இந்த மசாஜ் சிடியும் என்று கூறப்படுகிறது.
Monday, June 22, 2009
ஈரான் பேரணி புகைப்படத்தில் மோசடி:சர்ச்சையில் பி.பி.சி

மோசடிச்செய்த படம், இதில் நஜாதின் உருவம் மாற்றப்பட்டு குளோசப்பில்

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் செல்வாக்கிக்கிற்கு இழுக்கை ஏற்படுத்த பி.பி.சி செய்த புகைப்பட மோசடியை "வாட் ரியலி ஹேப்பன்ட்" என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.
ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜாத் தனது ஆதரவாளர்களின் வெற்றிக்கொண்டாடத்தை பார்த்து கையசைக்கும் புகைப்படத்தை ஹுசைன் மூசாவியின் ஆதரவாளர்களின் போராட்டமாக மாற்றி மோசடிச்செய்துள்ளது.
இருபடத்தில் உள்ள மரமும் கட்டிடமும் ஒன்று போலவே உள்ளது.விசாரணையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பிரசுரித்த புகைப்படத்தில் நஜாதை மாற்றிவிட்டு ஈரான்செய்திகளுடன் வெளியிட்டது.அந்த படத்தின் கீழ் "தடைகளை தாண்டி மூசாவியின் ஆதரவாளர்கள் போராட்டக்களத்தில்" என்ற அடிக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
குட்டு வெளிப்பட்டவுடன் அந்த அடிக்குறிப்பை மாற்றியுள்ளது பி.பி.சி.இதே போல் ஒருமோசடியை 2003-இல் ஈராக்கில் சதாம்ஹுசைனின் உருவச்சிலையை அமெரிக்க ராணுவமும் சில ஈராக் நாட்டவரும் சேர்ந்து உடைத்ததை ஒரு பெருங்கூட்ட ஈராக் மக்கள் உடைத்ததாக வீடியோ காட்சியில் மோசடியைச்செய்தது.
இநிகழ்விற்குப்பின் தற்ப்போது புகைப்படம் சம்பந்தமாக தவறு நிகழ்ந்துவிட்டதாக கூறி மன்னிப்புக்கேட்டுள்ளது.
http://www.bbc.co.uk/blogs/theeditors/2009/06/what_really_happened.html
செய்தி ஆதாரம்: தேஜஸ் மலையாள நாளிதழ்.,
Wednesday, January 21, 2009
ராஜு மோசடி : புதிய தகவல்கள்
| ராஜு மோசடி : புதிய தகவல்கள் |
| சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு செய்த மோசடி குறித்த புதிய தகவல்களை நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. ராமலிங்க ராஜு கூறியது போல் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் லாபம் செயற்கையாக உயர்த்தப்பட வில்லை என்றும், லாபமாக கிடைத்த தொகை அனைத்தையும் ராஜு சுருட்டிவிட்டார் என்றும் அது கூறியுள்ளது. இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக திகழ்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு கடந்த 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். நிறுவனத்தின் லாபத்தை கடந்த சில ஆண்டுகளாகவே தாம் செயற்கையாக உயர்த்தி வந்ததாகவும், இதனால் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரொக்க கையிருப்பு இல்லை என்றும் அவர் கூறினார். தனது மோசடியை ஒப்புக் கொண்டு பதவி விலகிய ராஜு தற்போது கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜு கூறியது போல் லாபம் செயற்கையாக உயர்த்தப்படவில்லை என்றும், லாபமாக கிடைத்த ரொக்கம் அனைத்தையும் ராஜு சுருட்டிக் கொண்டு வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டதாகவும், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சத்யம் இயக்குனர் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் ராஜு கூறியிருந்ததற்கும் தற்போது விசாரணையில் தெரியவரும் தகவல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. சத்யம் நிறுவனத்திலிருந்து தாமோ தனது சகோதரர் ராம ராஜுவோ ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று ராமலிங்க ராஜு கூறியிருப்பதும் உண்மைக்கு மாறானது என்று விசாரணை அதிகாரிகள் கூறியிருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க சத்யம் கம்ப்யூட்டர்ஸ் செய்திதொடர்பாளர் மறுத்துள்ளார். மேலும் ராஜுவின் வழக்கறிஞரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
சத்யம் வாடிக்கையாளர்கள் தொடர்பு - டிசிஎஸ் தகவல்
| சத்யம் வாடிக்கையாளர்கள் தொடர்பு - டிசிஎஸ் தகவல் | | | |
| Monday, 19 January 2009 21:15 |
| புதுடெல்லி - சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருப்பதாக டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம் கூறியுள்ளது. சிக்கலில் உள்ள சத்யம் வாடிக்கையாளர்களை தாங்கள் தேடிச் செல்லவில்லை என்றும் ஆனால் அவர்களாகவே தங்களை தொடர்பு கொண்டிருப்பதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாதேவன் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சத்யம் முறைகேடு அம்பலமானதைத் தொடர்ந்து அதனுடனான உடன்பாட்டை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வாடிக்கையாளர்கள் சிலர் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவற்றுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதில் டிசிஎஸ் அதிக பலனடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யம் நிறுவனத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மகாலிங்கம் கூறினார். |
Monday, January 19, 2009
சத்யம் கம்ப்யூட்டர் மோசடி
![]()
15.01.09 ஹாட் டாபிக் வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக.
`ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் கணக்குக் காட்டினேன். உண்மை அதுவல்ல. எங்களிடம் இருப்பது வெறும் முந்நூற்று இருபது கோடி மட்டுமே' என்று அப்ரூவர் அவதாரம் எடுத்திருக்கிறார் ராமலிங்க ராஜு.
பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடைய வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த மோசடி. கண்கட்டு வித்தை போல நடந்துள்ள இந்த மோசடிக் கதை சிக்கல்கள் நிறைந்தது. துணிச்சல் இருந்தால் கொஞ்சம் உள்ளே வாருங்கள். மனித மூளையின் விஷமத்தனத்தை தரிசிக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் என்று பட்டியல் போட்டால் முதல் ஐந்து இடங்களைப் பிடிப்பவை டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ மற்றும் சத்யம். 1987-ல் ராமலிங்க ராஜு என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனம் சத்யம்.
தேர்ந்த நிர்வாகம். திறமையான பணியாளர்கள். பிரமாதமான சேவை. எல்லாம் இருந்ததால் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர். மெல்ல மெல்ல வளர்ந்த சத்யம், அறுபத்தாறு நாடுகளில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியது. இன்றைய தேதியில் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களைத் தன்னிடம் கொண்டுள்ளது சத்யம் நிறுவனம்.
ஏப்ரல் 2007 முதல், மார்ச் 2008 வரையிலான நிதியாண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,473 கோடி ரூபாய். அதில், லாபம் என்று பார்த்தால் வரி கட்டியது போக 1687 கோடி ரூபாய். இப்படி கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் மட்டும் சத்யத்துக்குக் கிடைத்த லாபத்தின் மொத்த மதிப்பு 5,360 கோடி. இதுதான் கடந்த நிதியாண்டு முடிவில் சத்யம் நிறுவனம் சமர்ப்பித்த கணக்கு.
ஆனால், திடீரென இப்போது எங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை. முக்கியமாக, நாங்கள் காண்பித்த எண்ணிக்கையில் ஐயாயிரம் கோடி ரூபாய் குறைகிறது, கைவசம் இருப்பது வெறும் 320 கோடி மட்டுதான் என்று அதிர்ச்சி குண்டுகளை வீசியிருக்கிறார் ராமலிங்க ராஜு. அதிர்ச்சி. குழப்பம். எங்கோ தவறு நடந்துள்ளது. தோண்டிப் பார்த்தால் பல சங்கதிகள் புதைந்து கிடப்பது தெரிகிறது.
உண்மையில் மற்ற நான்கு மென்பொருள் நிறுவனங்களைப் போல சத்யம் நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. குறைவான லாபத்தையே ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்துள்ளது. ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அதிக வருமானம் ஈட்டும் நிறுவனம்தான் பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்துக்குத்தான் அதிகப் பங்கு மதிப்பு கிடைக்கும்.
கொஞ்சம் புரியும்படி பார்க்கலாமா? ராமசாமி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இருபது கோடி என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய லாபம் இரண்டு கோடி. ஆனால் மாடசாமி நிறுவனத்தின் வருமானம் ஐந்து கோடி. லாபம் இரண்டு கோடி. இரண்டுமே ஒரே அளவு லாபம் சம்பாதித்தாலும், உண்மையில் எது சிறப்பான நிறுவனம்? குறைவான வருமானத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்தானே? ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ராமசாமி நிறுவனத்துக்குதான் அதிக மதிப்பு. அதன் பங்கு மதிப்புதான் அதிகம். காரணம், அவர்களுடைய வருமானம்தான் அதிகம். ஏன் இப்படி என்றால், கொஞ்சம் நிர்வாகம் கவனமாக நடந்துகொண்டால், செலவை சற்றே கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரித்துவிடலாம் என்பது நம்பிக்கை.
மேலும் பங்குச்சந்தையில், ஒரே தொழிலில் இருக்கும் நான்கைந்து நிறுவனங்களை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.`டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் எல்லாம் இத்தனை சதவிகிதம் லாபம் என்கிறதே, நீங்கள் மட்டும் ஏன் வருமானமும் இல்லை, லாபமும் இல்லை என்கிறீர்கள்' என்று சத்யத்தைக் கேள்விகள் கேட்பார்கள்.. பதில் சொல்ல முடியவில்லை என்றால், சத்யத்தின் பங்கு விலைகள் அதலபாதாளத்தில் படுத்துவிடும்.
இதுதான் சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜுவை யோசிக்க வைத்தது. என்ன மாய மந்திர வித்தைகள் செய்தால் சத்யத்தின் பங்கு மதிப்பை உயர்த்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழில்நுட்ப மூளை அல்லவா, நுட்பமாகவே சிந்திக்கத் தொடங்கியது. ஒத்தாசைக்கு நிதித்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில முக்கியஸ்தர்கள் வந்தனர்.
உட்கார்ந்து பேசியதில் அழகான திட்டம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. சத்யம் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வரவேண்டிய தொகையை உயர்த்திக் கணக்குக் காட்ட வேண்டும். இது முதல்படி. அடுத்தது, சத்யம் நிறுவனத்தில் இருந்து வெளிநபருக்குச் செல்லவேண்டிய தொகையைக் குறைத்து கணக்குக் காட்ட வேண்டும். இது இரண்டாவது படி. இறுதியாக, நிறுவனத்தின் கையில் இருக்கும் ரொக்கம் அல்லது உண்மையான சொத்து மதிப்பைவிட அதிகம் என்பதுபோல கணக்குகளைத் தயார் செய்வது.
வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக சத்யம் தேர்வு செய்த உத்தி, போலி இன்வாய்ஸ்களைத் தயாரிப்பது. ஊர், பேர் தெரியாத நபர்களுடைய பெயரில் இன்வாய்ஸ்களைத் தயாரித்து கணக்கில் காட்டினார்கள் துணிச்சலாக. இதனால் வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது, போலியாக. ஆனால், இது சத்யம் நிர்வாகிகளுக்கும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கும் மட்டும்தானே தெரியும்!
சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் பெயர் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ். அவர்களுடைய வாயை எப்படி அடைத்தார்கள் அல்லது அவர்களுடைய கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்பது இன்னும் வெளியே வராத சங்கதி. அல்லது அவர்களும் இதற்கு உடந்தையா என்பது மற்றொரு திகில் விஷயம்.
பெயரளவில் வருமானம் உச்சத்துக்குச் சென்று கொண்டிருந்ததால், சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத்திலேயே இருந்தது. ராமலிங்க ராஜு எதிர்பார்த்ததும் அதுவே. மெல்ல மெல்ல சத்யம் நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார். நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக நிதிநிலை அறிக்கைகள் சொன்னதால் ஏராளமான முதலீட்டாளர்கள் சத்யம் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இறுதியில் ராஜு மற்றும் குடும்பத்தினர் கையில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே இருந்தது. அதையும்கூட வங்கியில் அடமானம் வைத்து கூடுதலாகக் கடன் வாங்கினார் ராஜு.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மேல் தாங்காது அல்லவா? சத்யம் நிறுவன கணக்கு ஏடுகளில் லாபத்தொகை ஏறிக்கொண்டே வந்தது. 5360 கோடி என்ற அளவை எட்டிய பிறகுதான் நிலைமை எல்லை கடந்துகொண்டிருக்கிறது என்பது ராமலிங்க ராஜுவுக்குப் புரிந்தது. ஐயாயிரம் கோடி உதைக்கிறதே என்று உதறல் எடுக்கத் தொடங்கியதும் அதன்பிறகுதான். மிகப்பெரிய குளறுபடியைச் செய்திருக்கிறோம். சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவோம் என்ற நிலை. தண்டனை இல்லாமல் தப்பிக்க இன்னொரு குறுக்குவழியைக் கண்டுபிடித்தார் ராஜு.
இதற்கிடையில், அவருடைய இரண்டு மகன்களும் சேர்ந்து மேதாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Maytas Infrastructure) மற்றும் மேதாஸ் ப்ராபர்டீஸ் (Maytas Properties) என்ற இரண்டுநிறுவனங்களை உருவாக்கியிருந்தனர். நிறுவனத்தின் பெயரான Maytasஐ திருப்பிப் போட்டால் Satyamஎன்று வருகிறது. சத்யம் நிறுவனத்தை அப்படியே புரட்டிப் போடும் முயற்சி என்பதற்கு இது ஒரு சமிக்ஞை. யாருக்கும் அது அப்போது புரியவில்லை.
திட்டம் இதுதான். சத்யம் நிறுவனக் கணக்கு ஏடுகளில் இடித்துக் கொண்டிருக்கும் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த மேதாஸ் நிறுவனங்களை வாங்கியதுபோல கணக்குக் காட்டிவிட்டால் தீர்ந்தது பிரச்னை. அந்த நிறுவனங்களின் அதிபர்கள் தன்னுடைய மகன்களாக இருப்பதால் டீல் முடிவதில் பிரச்னை இல்லை. பேப்பர் அளவில் நிறுவனத்தைக் கையகப்படுத்திவிடலாம், பைசா செலவில்லாமல். அதே நேரம், இல்லாத காசை இருப்பதுபோலக் காட்டி, கொடுப்பதுபோலக் கொடுத்து, தன் பேரில் உள்ள ஏமாற்றல் குற்றச்சாட்டு வெளியாகாமல் பார்த்துக் கொள்ளலாம். இங்குதான் விவகாரம் வேறு திசையில் திரும்பியது.
யார் அந்த மேதாஸ் நிறுவனம்? அவர்கள் இருக்கும் துறை என்ன? மென்பொருள் துறையில் இருக்கும் நாம் ஏன் போய் கட்டுமான நிறுவனத்தை வாங்க வேண்டும். அப்படியே செய்வதென்றாலும், எதற்காக அந்த நிறுவனத்தை வாங்க வேண்டும்? அதுவும் ஏன் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு? அந்த அளவுக்குத் தகுதியான நிறுவனமா அது? தனது குடும்பமே பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே இப்படி கொடுக்கல் வாங்கல் செய்வதில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லையே? இது ஏன்? கேள்வி மேல் கேள்வி கேட்டனர் சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராமலிங்க ராஜு. எதிர்ப்பு வலுப்படவே, அந்தத் திட்டத்தை அடுத்த நாளே கைவிடுவதாக அறிக்கை விட்டார்.
வால் போய் கத்தி வந்த கதையாக இப்போது அடுத்த பிரச்னை எழுந்து நின்று பயமுறுத்தியது. நிறுவனத்தில் வரும் லாபத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் என்ற பெயரில் தருவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகாலக் கணக்கை எடுத்துப் பார்த்ததில் கடந்த மூன்று ஆண்டுகளில் டிவிடண்ட் என்பதையே முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை சத்யம். ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு சத்யம் வலுவாக இருக்கும்போது ஏன் டிவிடண்ட் தரக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
தலையே சுற்றுவது போல இருந்தது ராமலிங்க ராஜுவுக்கு. பணம் இருந்தால்தானே ஐயா, தருவதற்கு? போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தில் இயக்குநர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சிலர், தமது பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தனர். அந்த நேரம் பார்த்து உலக வங்கி, சத்யம் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சேவை ஒப்பந்தங்கள் சிலவற்றை விலக்கிக்கொண்டு, சத்யம் நிறுவனத்தை எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது என்ற தகவல் கசிந்தது. ராஜுவும் குடும்பத்தினரும் கையில் வைத்திருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர் என்றும், இப்போது பங்கு விலை இறங்கிக்கொண்டே வருவதால், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப் பங்குகளை பொதுச்சந்தையில் விற்று பணம் செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இனியும் உண்மையை மூடி மறைத்தால் உயிரோடு விடமாட்டார்கள் முதலீட்டாளர்கள் என்பதால், பகிரங்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராஜு.
அதிர்வுகள் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தேசியப் பங்குச்சந்தையிலும் மும்பை பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் 160 சொச்சம் ரூபாயிலிருந்து 75 சதவிகிதம் அதிரடியாகக் குறைந்து சுமார் 40 ரூபாய்க்கு வந்துள்ளது.. நியூயார்க் பங்குச்சந்தையில், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதை நேற்று தடை செய்துள்ளனர். இந்தப் பங்கின் விலை மேலும் இறங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலை அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.
தவிரவும், நிறுவனம் பலமாகச் சேதமடைந்துள்ளதால், அதில் வேலை பார்த்துவரும் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி உலகத்தைசாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மென்பொருள் துறையில் ஆள்குறைப்பு அதிகரித்து வருகிறது. இதில் எங்கே போய் வேலை தேடுவது?
இதன் இன்னொரு அபாயம் மோசமானது. சத்யம் போன்ற நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கி வந்தவர்கள், நிச்சயம் வீடு அல்லது வாகனக் கடன் வாங்கியிருப்பார்கள். இவர்கள் வேலையை இழந்தால், கடன்களை எப்படித் திரும்ப அடைப்பார்கள்? அடைக்காவிட்டால் வங்கிகளின் வருமானம் பாதிக்கப்படுமே? பக்க விளைவுகளை நினைத்துப் பதறிக்கொண்டிருக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.
பங்குச் சந்தை மதிப்பு சரிந்துகொண்டு இருப்பதால் இந்த நிறுவனத்தை துறையின் முக்கியப் புள்ளிகளான இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிறுவனம் கையகப்படுத்தி சீர் செய்ய முன்வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அநேகமாக எல்லா வாடிக்கையாளர்களும் தாங்களாகவே இந்நேரத்துக்குள் பிற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டிருப்பார்கள்.
சமஸ்கிருத வார்த்தையான சத்யத்துக்கு தமிழில் உண்மை என்று அர்த்தம். உண்மை என்றால் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்வது. தான் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராமலிங்க ராஜு. என்னத்தைச் சொல்வது?

