ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடக்கிறது. நேற்று விசாரணை துவங்கியதும், சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.சிங், இந்த வழக்கு தொடர்பான மேலும் சில முக்கிய ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வது தொடர்பாக மனு அளித்தார். இதற்கு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன்,"இது சாதாரண வழக்கு அல்ல. நாடு முழுவதும் பேசப்படும் வழக்கு. சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணையை கண்காணித்து வருகிறது.விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இடையிடையே ஆவணங்களை தாக்கல் செய்வது சரியல்ல. இதை ஏற்கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் விசாரணைக்கு, சி.பி.ஐ., பாதிப்பை ஏற்படுத்துகிறது' என்றார்.
ஆனாலும், எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் எதிர்ப்பை நிராகரித்த நீதிபதி சைனி, "சி.பி.ஐ., தாக்கல் செய்யும் ஆவணங்கள் பதிவு செய்யப்படும்' என, உத்தரவிட்டார். இதையடுத்து, முக்கிய ஆவணங்கள், சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment