புதுடில்லி: இந்தியாவின் மினி பொதுத்தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதில் உ.பி., யில் முலாயம்சிங் கட்சி ஆட்சி அமைக்கு கிறது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.இதில் பஞ்சாப், கோவா மாநிலங்களில் முழுமையாக வெளிவந்துள்ளது. மணிப்பூர், உத்தர்கண்ட், உ.பி., மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் வெளி வர வேண்டியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் உ .பி.,மாநிலத்தில் ஆளும் கட்சியான பகுஜன்கட்சி ( மாயாவதி ) அதிக இடங்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 220 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. ஆளும் மாயாவதி கட்சி ( 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுது , பா.ஜ., 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநில நிலவரம்: பஞ்சாபில் ஆளும் சிரோன்மணி அகாலிதளமும் பா.ஜ., கூட்டணியுமான கட்சிகள் 68 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டது. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறை மீண்டும் ஆட்சி அமைக்கிறது. உத்தரகண்டில் காங்கிரசும் 32 தொகுதிகளிலும், பா.ஜ., 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் அங்கு இழுப்பறி நிலை ஏற்பட்டுள்ளது. கோவாவில் பா.ஜ., 26 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
ராஜினாமா செய்கிறார் மாயாவதி : லக்னோ: உ .பி., மாநிலத்தில் தோல்வியை சந்தித்துள்ள முதல்வர் மாயாவதி ( பகுஜன்சமாஜ் கட்சி) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். மாலை 3 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்.
மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அகிலேஷ் : தேர்தல் முடிவு குறித்து முலாயம்சிங் மகனும் கட்சி தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் நிருபருக்கு அளித்த பேட்டியில்; ஓட்டு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி சமாஜ்வாடி கட்சி ஆட்சியை அமைக்கும், முலாயம் தான் முதல்வராக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் . இவ்வாறு கூறினார் அகிலேஷ் .
மொத்தம் 402 தொகுதிகள் : ஐந்து மாநில தேர்தல்களில் உ.பி., சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தல் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மத்தியிலும் எதிரொலிக்கலாம் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடந்தது. பிப்ரவரி 8,11,15,19,23,28 மற்றும் மார்ச் 3ம் தேதியில் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் முதல்வராக இருக்கும் மாயாவதிக்கும், எதிர்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியின் முலாயம் சிங்க்கும் இடையே பெரும் போட்டி இருந்தது. முலாயமுடன் அவரது மகன் அகிலேஷ் யாதவும் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
No comments:
Post a Comment