ஈரானில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனியின் ஆதரவாளர்கள் தான்75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் ஜனாதிபதி அஹமத் நஜாத். ஆனால், தனது உத்தரவே நாட்டின் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளார் மதத் தலைவர் கொமைனி.
ஈரானில் ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் உள்நாட்டு பொருளாதார விவகாரங்களை மட்டுமே கண்காணிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர். வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய விவகாரங்கள் கொமைனியின் கட்டுப்பாட்டில் ஆன்மீக குழுவிடமே உள்ளன.
இதன் படி இத்தேர்தலில் அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் 25 சதவீதத்தினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அஹமத் நஜாதின் சகோதரி பர்வீன் கூட தோற்கடிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றம் கொமைனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கொமைனியை மீறி முக்கிய கொள்கைகள் முடிவுகள், திருத்தங்கள் எதையும் அஹமத் நஜாதால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அஹமத் நஜாத் வெல்வது கஷ்டம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2008 ஆம் ஆண்டு தேர்தலில் கொமைனி மற்றும் அஹமத் நஜாதின் ஆதரவாளர்கள் கூட்டாகவே தேர்தலில் போட்டியிட்டதால் பெரும் வெற்றியை பெற்றனர்.
ஆனால், தற்போது கொமைனியின் ஆன்மீக கருத்துக்களை எதிர்த்து அகமத் நிஜாத் செயல்படுகின்றார் என்றும், நாட்டில் சில முக்கிய அரசியல் திருத்தங்களைக் கொண்டு வரவும்,அரசியலையும் மதத்தையும் பிரித்து வைக்க விரும்புகிறார்.

அஹமத் நிஜாத்தின் இச்செயற்பாடு தங்களது ஆன்மீக செயற்பாட்டுக்கு விடுக்கப்படுகின்ற சவாலாக கொமைனி மற்றும் ஈரானிய ஆன்மீகத் தலைவர்கள் கருதுகின்றனர். ஆகையினால்,இம்முறை நடைபெற்ற தேர்தலில் அஹமத் நஜாத் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களைக் கோரினர். அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.
அணு ஆயுதம் தொடர்பாக
அணு ஆயுதம் தொடர்பாக
அமெரிக்கா, இஸ்ரேல் அணு ஆயுத விவகாரங்களில் கொமைனிக்கும் அஹமத் நஜாதுக்கும் இடையே ஒரே நிலைப்பாடு தான் உள்ளது. இதனால், இத்தேர்தல் முடிவுகளால் அணு ஆயுத விவகாரத்தில் ஈரானின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் பாராளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், அடுத்த ஓராண்டுக்கு அஹமத் நஜாத் அதிகாரம் குறைக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியாகவே பதவியில் நீடிப்பார்.
இத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்களான மிர்ஹோசைன் மெளசாவி, மெஹ்தி கரெளவ்பி ஆகியோரின் கட்சிகள் போட்டியிடவில்லை. இவர்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அஹமத் நிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்டமையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்
ஈரானில் நடைபெற்ற பாராளுமன்றத் (மஜ்லிஸ்) தேர்தல், எவ்வித பிரச்சினைகளும் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 290 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ஈரானின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4.8கோடியாகும்
No comments:
Post a Comment