அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 9, 2011

கொடு...!

மூச்சுக் காற்றையே
முழம்போட்டு விற்றுவிடும் - வெறும்
பேச்சுப் பேசியே
பிறரை ஏமாற்றும்

அன்பை அடகு வைத்து
 
பாசத்தைப் பங்கு பிரிக்கும்!
ஈவு இரக்கம் வகுத்து...
மீதியும் பார்த்துவிடும்!
இருப்புக் கணக்கைப்
 
பெருக்க...
இருக்கும் கருப்பை
வெள்ளையாக்கும்!

சொந்த பந்தம்
 
கூட்டி...
சுயமாய்க் கொழிக்கும்!

எளிய உறவைக்
 
கழித்துப் போட்டு...
எஞ்சுவதும் புசிக்கும்!

உணர்வுகளை
ப் பின்னங்களாக்கி 
உறவுகளைப் பிரித்துப் போட்டு
கூட்டிக் கழித்தே-
குடும்பம் நடத்தும் மனிதா,

உறவுகளின்
 
பாசமும் பற்றும்-
வரவு செலவுக் கணக்கில்
சமன் ஆகிவிடாது!

சுமந்த கூலியையும்
 
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்...
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா?

தளர்ந்த தோளுக்கும்
 
உலர்ந்த தோலுக்கும்
தந்தை கணக்கிட்டால்...
தாங்கத்தான் முடியுமா?

முத்தக் கணக்கென்றும்
 
மெத்தைக் கணக்கென்றும்
பாராத மனைவிக்கு...
மாசப் பணமென்று
மழுங்கிப் போவதா?

கூடப் பிறந்தவர்க்கும்
 
கூட மணந்தவளுக்கும்
கூடக் குறையக் கொடுப்பதில்...
கூடாமல் குறையாது செல்வம்!

கொடு...
 
அது
படைத்தவன் 
உன்னில் விதைத்த 
பண்பென உணர்!

இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.


நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 
என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர். அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு: 

"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்தணும்'’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம். 

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே... 

""இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..''’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. 

"சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ என்றோம்.

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது. 

"அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். கூடவே "நக்கீரன்ட்ட உதவி கேள்'னும் சொன்னார். அதான் வந்தேன்''’என்று நம்மை அதிரவைத்த வர்... அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார். 

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம். 

கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. 

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்... 

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம். 

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... ""இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. 

முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. 

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு. 

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்''’என்றார் விரிவாக. 

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ""பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப்... படத்தைப் பார்த்தே... கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே "என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள்.... தன் உடல் பாகங்களை வர்ணித்து... அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி... பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங்களோ''’ என்றார் எரிச்சலாக. 

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ""சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார் கவலையாக. 

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது..."மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்''’ என்றார் உறுதியான குரலில். 

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம். 

இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ... ""வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா... டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல். 

ஆக, 

ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும். 
நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ, 
நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். 

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து "லாக்' பண்ணிவிட வேண்டும்.'' என்று உஷார்படுத்துகிறார் அவர். 

நன்றி : நக்கீரன்


சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள். தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ / காதலியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான புதிதில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தான், ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய அந்தரங்கமும் இணையதளத்தில் வெளிவந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.

அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!

கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் எண்ணெய் கிணறு
கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் எண்ணெய் கிணறு
த்திய கணக்குத் தணிக்கை அதிகாரி மீண்டும் ஒரு ஊழல் பூதத்தை அடையாளம் காட்டியுள்ளார். சென்ற வருடம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக வெளியான CAGன் அறிக்கையிலிருந்து எழுந்து வந்த பூதத்தையே எப்படி அடக்குவது என்று தெரியாமல் மத்தியில் ஆளும் காங்கிரசு பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய CAG அறிக்கையிலிருந்து கிளம்பியுள்ள கே.ஜி பூதத்தை சர்வகட்சிகளும் மௌனமாய் இருப்பதன் மூலம் மக்களின் கவனத்திலிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசுக்கும் மக்களுக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பதாகவும் இப்போது வெளியாகியிருக்கும் CAG அறிக்கையின் முன்வரைவு கூறுகிறது.
குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும் போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஒரு அம்சம்.
இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered)  பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீத பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால் தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது.  இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.
தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், செனற் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
கணக்குத் தணிக்கை அதிகாரியின் வரைவு அறிக்கை வெளியாகி மத்தியில் ஆளும் காங்கிரசு கும்பல் படுகேவலமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையை பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா தனது சொந்த அரசியல் நலனுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை. காங்கிரசோடு சேர்ந்து கிழிந்திருப்பது அம்பானியின் கோவணமும் தான் என்பதால் பெயரளவுக்கு முனகிவிட்டு அடங்கிவிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான போது சம்பிரதாயமாகவாவது சாமியாடிய போலி கம்யூனிஸ்டுகள் இப்போது ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு’ என்கிற ரீதியில் இந்த ஊழலைப் பற்றி கருத்துத் தெரிவித்து முடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வர்த்தகத்தில் அம்பானி சகோதர்களுக்குள் குத்துவெட்டு நடந்த போது அதில் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசி தீர்த்து வைத்ததே சுப்ரீம் கோர்ட்டு தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் கம்பெனி  எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக அனில் அம்பானி ஆந்திர அரசு மற்றும் உர அமைச்சகங்கள் குற்றம் சாட்டிய போது தலையிட்ட காபினெட் குழுவும் உச்ச நீதிமன்றமும் முகேஷுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தன.
ஆக, ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.
இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.
தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.
ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது.  அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?
ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.
ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.
ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது.
Thanks.Vinavu

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?


 திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார். 

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான். 

எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார். பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 கொலை குற்றவாளி, பெண் பித்தர் சங்கராசாரியார் ரொம்ப காலங்களுக்கு பிறகு இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல் தங்கள் பார்பன உயர்ஜாதியை சேர்ந்த திருவாங்கூர் மன்னரின் குடும்ப சொத்தாக இந்த புதையலை மாற்ற திட்டம் வகுத்து செயல்படுகிறார் சங்கராசாரி.

சங்கர மடத்தை தன் கைகளில் வைத்து கொண்டு பிராமணர்கள் மட்டும் அதன் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்களோ அது மாதிரி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலையும் பறிக்க நினைக்கின்றனர். அதானால்தான் இந்த சங்கராச்சாரி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். 

"கண்டெடுக்கப்படும் புதையல்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம்" என்ற சட்டம் இதற்கும் பொருந்தும். ஆகவே இது அரசுக்கு சொந்தமானது தான் இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமுக்க பார்க்கும் பார்ப்பன கழுகுகளிடம் இருந்து அரசு தன்வசப்படுத்தி மக்கள் பணிகளுக்கு செலவிட வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்!

JULY 08, இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்து, வரும் 27ம் தேதி, டில்லியில், பேச்சுவார்த்தை நடைபெ றும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு உறவுகள் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில், இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்தில், இஸ்லாமாபாத்தில் நடந்தது. 

இதன் தொடர்ச்சியாக, இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை, வரும் 27ம் தேதி, டில்லியில் நடைபெறும். இருநாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு விரிவாக்கம், வர்த்தகம் மற்றும் அணு ஆயுதங்கள் பற்றி பேசப்படும் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

 ஒவ்வொரு முறை இந்தியா, பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் போதும் அதை குலைக்கும் அடிப்படையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் ஏதாவது குண்டு வெடிப்பு நடத்தப்படும். இந்த முறை அரசு ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நட்புறவோடு செயல்பட்டால் இரண்டு நாடுகளும் முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய நாடாக இன்று உதயமாகிறது தெற்கு சூடான்!!!

ஜூலை 9 ,ஜூபா : ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது. "சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' என்று கோரி, கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது. 

வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கடந்த 2005ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில், சூடானை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டது.

கடந்த ஜனவரியில் இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. சூடானை இரண்டாக பிரிக்க பெருவாரியான மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து, வடக்கு சூடான், சூடான் என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.  புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். தெற்கு சூடான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி அந்நாட்டிற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.

சூடானிய அரசுக்கும், சூடானிய மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கடந்த 2005 ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோரின் முன்னிலையில், அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. 

அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. வடக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.  உலகில், 193வது சுதந்திர நாடான தெற்கு சூடானின், முதல் சுதந்திர தின கொண்டாட்டம், தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி நேற்று அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்

பெண்கள் 7 மணி நேரம் தூங்கவேண்டும்! ஆய்வில் புதிய தகவல்!

JULY 09, லண்டன் : "பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வாளர்கள், தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர். 

பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், அவர்களின் கண்கள் சோர்ந்து, உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இது ஆண்களுக்கு பொருந்தாது. குறைந்த நேர தூக்கம், குறைந்த வயதிலேயே இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆண், பெண் இருபாலருக்கும் தூக்கத்தில் வேறுபாடு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்கும் பெண்களை விட,  ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. போதிய தூக்கம் இல்லாத பெண்கள், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 

பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், போதிய தூக்கமின்மைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், இது போன்ற நெருங்கிய தொடர்பு ஆண்களிடம் காணப்படவில்லை.  ஆழ்ந்த தூக்கத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதில் இரைச்சல் முதலிடமும், குழந்தையின் அழுகை இரண்டாமிடமும் பெறுகின்றன.

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!

இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.

இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!

*  காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை. சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக நேபாள பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது. 

அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் அவர் டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது. சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது. 

*  பிரேமானந்தா: திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன. 

புகழ்: போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது.  இதனால் அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

*  நித்யானந்தா: 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர்,பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, 

புகழ்:  நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும் கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி அவர்களோடு நடனம் ஆடியது பின்னர் விடுதி அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.

சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது, மதத்தின் பெயரால் அவரை மது அருந்த சொல்லி பலவந்தபடுத்தி அவர் மயக்கநிலையில் இருக்கும் போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது.

வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பதும், உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும். 

என்று கூறி தனது தியான பீடத்துக்கு வரும் பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது,  இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி செக்ஸ் உறவு கொண்டது.அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி ஷியாமளாவை அவரிடம் இருந்து அபகரித்தது.

சிவ் முரத்திவேதி: இவர் சத்ய சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.

புகழ்: கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடத்தியது.

டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைக்கப்பட்டது. டெல்லி தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி விபச்சாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.

* கல்கி பகவான்: விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர். தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.

புகழ்:  அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் அடித்தது. இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது.

* பாபா ராம்தேவ்: வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. பாபா ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு 1100 கோடிக்கு மேல். 

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம். மற்றொரு நாட்டில் சொந்தமாக தீவு. வெளிநாட்டு விலை உயர்ந்த கார்கள், தனிவிமானத்தில் பவனி. ஓட்ட சைக்களில் வலம் வந்தவர் இப்போது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்கு வதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.

* ஸ்ரீ ஸ்வாமிஜி: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி சாமியாரின் இருப்பிடம். அவருக்கு அங்கே 200 ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள் உண்டு.

புகழ்:  இவர் தனது ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்த சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

சத்திய சாய்பாபா: ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளில் சொத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள்சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும் வருமானம்.

புகழ்:  ஆசிரமத்தில் நடந்த படுகொலைகள். அவர் இறப்புக்கு பின்னே அவரது அறையை திறந்து பார்த்தால் கோடி கோடியாய் பணம் மற்றும் நகைகள், வைரங்கள் இப்படி புதையலாக கிடைத்தன. இணையதளங்களில் சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.

*  ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்: பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. 

*  ஆஸ்ரம் பாபு: டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஓராண்டு வரவு செலவு வர்த்தகம் 350 கோடி. 

*  சுதன்ஷன் மகராஜூ:  நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு ஓராண்டு வரவு செலவு 300 கோடி.

*  அமிர்தானந்த மாயி:  பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி.அமிர்தானந்த மாயியின் மொத்த சொத்து மதிப்பு 1200 கோடிக்கு மேல்.

*  முராரி பாபு:  பணக்காரர்களுக்காக மட்டும் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. 

இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். 

*  பங்காரு சாமியார்:  கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். 

*  தீபக் தாக்கூர்: அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத் தருகிறேன் என்று உலக ஆளவில் பல மோசடிகளை செய்து மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுபவர்.

தீவிரவாத சாமியார்கள்:

*  சுவாமி ஆசிமானந்தா:  குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம். பலகோடி ரூபாய் சொத்துக்கள்.

புகழ்:  மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளி. இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

* பெண் சாமியார் சாத்வி பிரக்யா: இவர் ஹிந்துத்துவா சாமியார். இவருக்கும் வழக்கமான சாமியார்கள் போல ஆசிரமங்கள் உள்ளது.

புகழ்: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆலோசனை மற்றும் பொருளாதார உதவி செய்தவர்.

இதுவல்லாமல் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே  “குணமாக்கி’  நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்