JULY 08, இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்து, வரும் 27ம் தேதி, டில்லியில், பேச்சுவார்த்தை நடைபெ றும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு உறவுகள் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை, கடந்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில், இரு நாட்டு வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்தில், இஸ்லாமாபாத்தில் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக, இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை, வரும் 27ம் தேதி, டில்லியில் நடைபெறும். இருநாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு விரிவாக்கம், வர்த்தகம் மற்றும் அணு ஆயுதங்கள் பற்றி பேசப்படும் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை இந்தியா, பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் போதும் அதை குலைக்கும் அடிப்படையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் ஏதாவது குண்டு வெடிப்பு நடத்தப்படும். இந்த முறை அரசு ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் இரண்டும் நட்புறவோடு செயல்பட்டால் இரண்டு நாடுகளும் முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment