தீர்மானங்கள்:
1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாட்டங்களையும்,
சுதந்திர தின அணிவகுப்பையும்(ஊணூஞுஞுஞீணிட் கச்ணூச்ஞீஞு) நடத்தி வருகின்றது. இந்த வருடம் ஆகஸ்ட்15, 2011 அன்று சுதந்திர அணிவகுப்பை
நெல்லையில் நடத்துவது எனவும், சுதந்திரதின கொண்டாட்டங்களை நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2. முஸ்லிம்களின் உரிமையான இடஒதுக்கீடு முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் பல கருத்தரங்குகள் மற்றும்
போராட்டங்களை நடத்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும்
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் தமிழக முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும்,
முதலமைச்சர் அவர்களை நேரில்சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3. கல்வி இன்று வியாபாரமயமாகிவிட்டது. அனைவரும் அறிந்த உண்மை இது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதும்,
எல்.கே.ஜி. யில்குழந்தைகளை சேர்ப்பதும் ஒன்றாகி விட்டது. பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு
பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்தியது. அதில் குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்ததின் அடிப்படைடியில் மீண்டும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அமைக்கப்பட்டு
கட்டணங்கள் மறு நிர்ணயம்செய்யப்பட்டது.
ஆனால், மறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரம் தொடர்பாக அரசும், தனியார் பள்ளிகளும் எந்த விபரத்தையும் வெளியிடாமல் மௌனம்காத்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை துன்புறுத்துவதும் தினசரி செய்தியாகி விட்டது. இதுவிஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு
பள்ளிக்கட்டணத்தை சீர்செய்து அதனை பின்பற்றாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து
மாணவர் நலன்காக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
No comments:
Post a Comment