அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 29, 2011

ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி வழக்கு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதில் தர உத்தரவு

மதுரை, ஜூன் 28: ஒட்டன்சத்திரத்தில் ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த விஜயசங்கரன் தாக்கல் செய்த மனு:
 ஒட்டன்சத்திரத்தில் கிழக்கில் இருந்து மேற்காக ரயில் பாதை அமைந்துள்ளது. இப்பாதை மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தது. இதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றி வருகின்றனர். நகரில் பஸ் நிலையம், மருத்துவமனை, மெயின் ரோடு ஆகியவை ரயில் பாதைக்கு வடக்குப்புறம் அமைந்துள்ளது.
 தெற்குப் பகுதியில் சாஸ்தா நகர், விஸ்வநாதா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. நகரப்பகுதி மேலும் விரிவடைந்து வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 15,000 பேர் வசித்து வருகின்றனர்.
 இதனால், ஏராளமானோர் ரயில் பாதையைக் கடந்து வடபகுதிக்கு தினசரி வரவேண்டி உள்ளது. எனவே, ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்குமாறு தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அளித்தோம்.
 அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் முடிவடையும் முன்பு, சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 இதை விசாரித்த நீதிபதிகள் கே.சுகுணா, ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சமசீர் கல்வி குழுவில் – கல்வி கொள்ளைக்கு பெயர் பெற்ற முதலாளிகள் நியமிக்கப்பட்டனர் – பிழைக்குமா தமிழகம்?

அமைப்பிற்க்குட்பட்டு, பாட திட்டங்களை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை நியமித்து  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் கல்விக்கு, குறிப்பாக ஏழை எளியோருடன் எந்த தொடர்பும் இல்லாத, மேலும் நெருங்க விரும்பாத ஒரு சிலரை தனது குழுவில் நியமித்திருப்பது நகைப்புக்கிடமாகியுள்ளது.

கட்டாயக் கல்விச் சட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

"கட்டாய இலவச கல்வித் திட்ட விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கையாக வெளியிட வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சத்திய சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் , "6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வியை அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 1.4.2010 அன்று அமலுக்கு வந்தது. இந்ச்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை ஒவ்வொரு மாநில அரசும் உருவாக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தின் 38-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கான விதிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர முடியவில்லை. எனவே அதற்கான விதிகளை உறுதிப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், "இந்த விதிகளை முடிவு செய்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

நான் திறமையற்றவன் அல்ல : மன்மோகன்சிங்


புதுடில்லி : எதிர்கட்சிகள் தன்னை திறமையற்றவன் என்று கூறிவந்ததற்கு இன்று நடைபெற்ற பத்திரிக்கை ஆசிரியர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் பிரதமர் மன்மோகன்சிங். நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார். இந்த சந்திப்பில் 5 பத்திரிக்கையாசிரியர்கள் மட்டும் பங்கேற்றனர். 
சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, நான் திறமையற்றவன் என்று எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனால் நான் திறமையற்றவன் அல்ல.