அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, June 29, 2011

சமசீர் கல்வி குழுவில் – கல்வி கொள்ளைக்கு பெயர் பெற்ற முதலாளிகள் நியமிக்கப்பட்டனர் – பிழைக்குமா தமிழகம்?

அமைப்பிற்க்குட்பட்டு, பாட திட்டங்களை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை நியமித்து  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் கல்விக்கு, குறிப்பாக ஏழை எளியோருடன் எந்த தொடர்பும் இல்லாத, மேலும் நெருங்க விரும்பாத ஒரு சிலரை தனது குழுவில் நியமித்திருப்பது நகைப்புக்கிடமாகியுள்ளது.

சமச்சீர் கல்வி உறுப்பினர் பட்டியலில் உள்ளவர்கள் கீழ்க்கண்டவர்கள் ஆவர்:
* தலைவர் – தமிழக அரசின் தலைமைச் செயலாளர்
* உறுப்பினர் -  இரு மாநில பிரதிநிதிகள்:
(1) ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் இயக்குநர் (கல்வி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(2) திருமதி. விஜயலட்சுமி சீனிவாசன், முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி, சென்னை.
* உறுப்பினர் -  இரு கல்வியாளர்கள்:
(1) சி.ஜெயதேவ்,  நிறுவனர் மற்றும் செயலாளர், டி.ஏ.வி.பள்ளிகள் குழுமம், கோபாலபுரம், சென்னை.
(2). டாக்டர் திருமதி. ஒயி.ஜி.பார்த்தசாரதி, முதல்வர் மற்றும் இயக்குநர், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை.
* உறுப்பினர் -  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இருபிரதிநிதிகள்
(1) பேராசிரியர் பி.கே. திரிபாதி, அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித்துறை, புதுதில்லி.
(2). பேராசிரியர் அனில் சேத்தி, சமூக அறிவியல் துறை,  புதுதில்லி.* உறுப்பினர் – அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை* உறுப்பினர் செயலாளர்- பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்.மேற்கண்ட குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வரும்  ஜூலை மாதம் 6ம் தேதிக்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும்.
மேற்கண்ட பட்டியலில் உள்ள  கல்வியாளர் உறுப்பினர்களான டி.ஏ.வி.பள்ளிகளின், சி.ஜெயதேவ், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகளின் திருமதி. ஒயி.ஜி.பார்த்தசாரதியும் கல்வி கொள்ளைக்கு பேர் போன இரண்டு பள்ளிகளின் ‘முதலாளிகளே’ அன்றி கல்வியாளர்கள் அல்ல என்று பா.ம.க நிறுவன தலைவர் மருத்துவர். ராமதாஸ் கூறியுள்ளார்.
இத்தகையவர்களை கொண்ட இந்த குழு ‘சமச்சீர் குலைவு கல்வியை’ வகுக்க இயலுமே அல்லாமல் உண்மையான சமசீர் கல்வியை இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க இயலும என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

1 comment:

திருச்சிராப்பள்ளி தமிழச்சி said...

ஐயா பெரியவர்களே, முதியவர்களே, அறிவாளிகளே, எல்லோருக்கும் என் முதற்கண் வணக்கம்.
சபாஷ், நான் சின்னப்பையன். உங்களுடன் போட்டி போடும் அளவிற்கு எனக்கு அறிவு இருக்கிறதா என்பது சந்தேகம்

தான்.

நீங்கள் ‘சமச்சீர் கல்வி’ வேண்டுமா, வேண்டாமா என்று நாடளாவில் நாட்கணக்கில் நீதிமன்றம் வரை சென்று

வந்ததைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ‘சமச்சீர்’ என்ற சொல்லுக்கு ஒருவனுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்று

கேவலப்படுத்தத்தான் தோன்றுகிறது. மன்னிக்கவும். போட்டி என்று ஆன பின், வயது வித்தியாசமில்லாமல் தான்

பேசவேண்டிருக்கிறது.

நான் இங்கு சொல்ல போகும் கருத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ‘அறிவாளிகள்’ வயிற்றிலும் புளியைக் கரைக்கலாம்.

‘சமசீர்கல்விக்கும்’ கருணாநிதியின் ‘சமச்சீர் கல்விக்கும்’ ஏகப்பட்ட வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தில் பல

காலங்களுக்கு முன் நான் எழுதியதை திருப்பி எழுதும் நிலைக்கு உங்களின் அறிவிலித்தனமான பேச்சுக்கள்

தள்ளிவிட்டது.
‘சமச்சீர் கல்வி’ என்பதின் உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளங்களில்

காணலாம்.
1. http://www.kelvi.tk
2. http://arivuu.files.wordpress.com/2011/08/sivavidya.pdf
மேலுள்ளவைகளைப் படித்து விட்டு வாரும். சமச்சீர் கல்வி பற்றி எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான்

தயார், முதலில் ‘சமச்சீர் கல்வி’ என்றால் என்ன என்பதை அறியும். கல்வித்துறையில் பணிபுரியும் முட்டாள்களே

மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். கருத்துக்களைத் திரிக்காதீர்கள். திரித்தால், என்போன்றவர்களிடம் கேவல்ப்பபட்டுப்

போவீர்கள். செய்யுமுன் சிந்தித்து செயல்படுங்கள். கால் செருப்பு தூக்கப்போனால் பிறகு செருப்படி

வாங்கவேண்டியதுதான்.
———————————————————

அறிவை வ‌ள‌ர்த்துக் கொள். இது ஒவ்வொருவ‌ரும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கூறும் அறிவுரை. உங்க‌ள் குழந்தைக‌ளை எங்க‌ள்

ப‌ள்ளிக்கு, க‌ல்லூரிக்கு அனுப்புங்க‌ள். நாங்க‌ள் அவ‌ர்க‌ளின் அறிவை வ‌ள‌ர்த்து விடுகிறோம். இது திருட்டுக் க‌ய‌வாளி

ஆசிரிய‌ கொள்ளைக்கூட்ட‌ங்க‌ளின் பொய்யுரை. அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ ஒருவ‌ன் ப‌ல‌ ஆண்டுக‌ள் ப‌ள்ளி சென்று,

புத்த‌க‌ங்க‌ள் ப‌ல ப‌டித்து, பாட‌ங்க‌ள் ப‌ல‌ ப‌யின்று, தேர்வுக‌ள் ப‌ல எழுதி, ப‌ட்ட‌ங்க‌ள் ப‌ல பெற‌வேண்டுமா? தேவையில்லை.

உன்னிட‌ம் சிந்திக்கும் திற‌னிருக்கிறதா? அது போதும். நான் காட்டும் வ‌ழியில் சிந்தித்துப் பார். வ‌ள‌ரும் உன் அறிவு.

கேள்வி: ஒன்றைப்ப‌ற்றி என் அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்வ‌து எப்ப‌டி?

ப‌தில்: ஒன்றைப்ப‌ற்றி அறிய‌ப்ப‌ட‌ வேண்டிய‌வைக‌ளை அறியும்போது அதைப்ப‌ற்றிய‌ உன் அறிவு வ‌ள‌ரும்.
ஒன்றைப்ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

.
.
.
விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள்

உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில்

என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும்.

பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து.

விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள்

உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில்

என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை.

பொருளுக்குப் பொருள் மாறுபடும் எதுவும் விதியாகாது. விதி நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிதல்ல. இடத்திற்கு இடம்

மாறுபடுவதும் விதியல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்றும் பாகுபாடில்லை. விதியில் புதுமையைப்

புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப்

பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என்

விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள்

அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.