அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 2, 2011

Raja's Letter to Karunanidhi..


அன்புள்ள தலைவரே…..

நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…

நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ?

சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… ? நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…

முதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெரும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… ? அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள்.

நான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…

அதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன்.

ஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று.

அந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… ? நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…

இதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே… ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..

இந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து வளர்த்தார்கள். இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…

பெரம்பலூரில், அந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை. போற்றவும் இல்லை.

ஆனால் இன்று …. …. ….. ….

ஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை. எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… ?

நான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. ? அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன். என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே ?.

என்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… ?

ஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….

நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…

பதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் என்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.

அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….

நான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே….

இந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..

உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.

“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”

சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..

ஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு

ஆண்டிமுத்து ராசா.

IAS, IPS படிக்க Civil Services தேர்வு கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை

மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருதாக்கத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும்,
தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

இந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது?

இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும். அந்த அளவிற்க்கு இந்த தேர்வுகள் பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேர அறகட்டளை நடத்து பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.

முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ.M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது. கள்ளகுறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக கள்ள குறிச்சி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எப்போது நாம் இதில் தேர்சி பெறுவது?
பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை ( இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை, பொருமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு, படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் மிக குறைவும். ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொருமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற வாழ்கையே அதுவல்ல, முஸ்லீம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.

தேர்வை பற்றிய முழு விபரங்களும் ஆங்கிலத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறியவும் தேர்விற்க்கு தயாரவாதற்க்கான வழிமுறைகள் பற்றி அறியவும் Sithiqu.mtech@gmail.com என்ற E - மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

S.சித்தீக்.M.Tech

Civil Services Examination - 2011 தேர்வை பற்றிய விபரம்.

இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதக் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 21/03/11 இன்ஷா அல்லாஹ்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் அழுவலகங்கள்
கட்டணம் : விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :Secretary,
Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New
Delhi - 110069
தேர்வு நடைபெறும் தேதி : 12/06/11 இன்ஷா அல்லாஹ்
வயது வரம்பு : 33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட
வகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது
தேர்வு எழுத தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


கூலிப்படையை அழைத்து வந்து சொந்த மக்களை தாக்கிய கடாபி : அமெரிக்க பத்திரிகை அதிர்ச்சி தகவல்

அல்பைடா : லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க, அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்க, கடாபி வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டார்.
அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களை வரவழைத்து, அவர்களின் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து, தன்னை எதிர்க்கும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும்படி கூறினார். இதற்கு லிபியா ராணுவமும் உதவியது. இந்த கூலிப்படையினரில் சிலர், அல்பைடா நகரில் மக்களுடன் மோதலில் ஈடுபட்ட போது, அவர்களில் 200 பேரை மக்கள் சிறைபிடித்தனர்.சிறை பிடிக்கப்பட்ட அவர்கள், அல்பைடாவின் ஷெகட் பகுதியில் பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து விடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "டைம்' நாளிதழ், இவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:மொத்தம் 325 பேர், அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து திரட்டப்பட்டு, லிபியாவின் தென் மேற்கில் உள்ள சபாநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு, கடாபி கட்சியின் இளைஞர் அணி பிரிவு தலைவர் அலி உஸ்மான் என்பவர், டிரிபோலியில் நடக்க உள்ள கடாபி ஆதரவு பேரணிக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் கூறியுள்ளார்.பின் அவர்கள் அனைவரும் ஒரு விமானம் மூலம் டிரிபோலிக்கு புறப்பட்டனர். விமானம் சென்ற இடமோ, லபார்க் என்ற நகரம். இது அல்பைடாவுக்கும், டெர்ணாவுக்கும் இடையில் உள்ளது. கடந்த 16ம் தேதி, அல்பைடாவில் நடந்த கடாபி ஆதரவு போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.அப்போது ராணுவம், ஆப்ரிக்கர்களின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து, "நீங்கள் அனைவரும் கூலிப்படையினர் என்று எதிர்ப்பாளர்கள் நினைத்து உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கி பிழைத்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டது.இந்தச் சண்டை நடந்து இரு நாட்கள் கழித்து 18ம் தேதி ராணுவப் பிரிவு, பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டது. அப்போது, கூலிப்படையினரிடம் லிபியா ராணுவத்தினர், "உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கொல்லப்படுவீர்கள்' என்று பீதியூட்டியது.ராணுவம் சொன்னபடி சிலர் தப்பித்தனர். 200 பேர் மாட்டிக் கொண்டனர். முதலில் பிடிப்பட்டவர்களில் 15 பேர் அல்பைடாவில், கோர்ட் வாசலில் பொதுமக்களால் தூக்கில் இடப்பட்டதாக, கடாபி அமைச்சரவையில் இருந்து வெளியேறிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமது அப்த் அல் ஜலீல் தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம், சாட் மற்றும் நைஜர் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் லிபியாவில் பிறந்து, சாட் மற்றும் நைஜரில் குடியேறியுள்ளனர். பலர் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள். சிலர் கடாபி மகன் கமீசின் ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள்.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

127 இந்திய மீனவர்கள் மீதான வழக்கை கைவிட்டது பாகிஸ்தான்!!!

127 இந்திய மீனவர்கள் மீதான வழக்கை கைவிட்டது பாகிஸ்தான் அரசு. இதை இந்திய மீனவர்கள் கைது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றக் குழு, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து கைதாகி பாகிஸ்தான் சிறைகளில் அவதியுற்றுவந்த இந்திய மீனவர்கள் 127 பேரும் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு மீனவர்கள் அமைப்பு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க தனிக் கமிட்டியை அமைக்குமாறு சிந்து உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதை ஏற்று உயர் நீதிமன்றம் தனிக் கமிட்டி அமைத்தது. அந்தக் கமிட்டி இந்திய மீனவர்கள் 127 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளை கைவிடுவதற்கான முடிவை எடுத்தது.

அக்கமிட்டி தனது முடிவை உச்ச நீதிமன்றத்தில் இப்போது தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டது இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தன்னார்வ நிறுவனங்கள் வழக்குத் தொடுத்ததை அடுத்து 442 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்தது

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!!!

ரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு,மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg)நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case)சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும்,அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.
6 எழுத்துக்கள்:சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10நிமிடங்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+
எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+
பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்.

'நீரா ராடியா மூலம் நரேந்திர மோடி அரசில் ரூ.29 ஆயிரம் கோடி ஆதாயம் பெற்ற டாடா!'

அகமதாபாத்,மார்ச்.1:அரசியல் தரகர் நீரா ராடியாவால் டாடா நிறுவனம் ரூ.29,000 ஆதாயத்தை நரேந்திர மோடி அரசில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானோ கார் தயாரிப்பை குஜராத்துக்கு கொண்டு வந்ததற்காக டாடாவுக்கு இந்த ஆதாயத்தை மோடி அரசு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குஜராத் சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவிருந்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலை, மம்தா பானர்ஜியின் தூண்டுதலால் எழுந்த போராட்டம் காரணமாக வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்கள் டாடாவுக்கு அழைப்பு விடுத்தும், குஜராத்தின் சனந்த் என்ற இடத்தில் இந்த தொழிற்சாலையை அமைத்தது டாடா.

இதற்காக டாடாவுக்கு ரூ.29,000 கோடி அளவுக்கு நரேந்திர மோடி அரசு சலுகைகளைக் காட்டியுள்ளாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தநிலையில், இன்று குஜராத் சட்டமன்றத்தில் நானோ தொழிற்சாலைக்கு இவ்வளவு சலுகைகளைக் கொடுத்தும், அவர்கள் வெளி மாநிலத்தவர்களைத்தான் வேலைக்கு எடுப்பதாகவும் ஊள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ மோத்வாடியா கேள்வி எழுப்பினார்.

உடனே இதனை மறுத்தார் அம்மாநில வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் வாஜுபாய் வாலா. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சொன்னது தவறு என்றும், இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் டாடாவுக்கு ரூ.29,000 கோடி ஆதாயத்தை மோடி அரசு அளித்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அரசியல் தரகர் நீரா ராடியா மூலமே இந்த ஆதாயத்தை டாடா அடைந்தார் என்றும் கூறினார்.

இதனால் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் மோதலும் எழுந்தன.
thatstamil

நீதிமன்றமா? காவிமன்றமா?

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
கிரஹாம் தனது குடும்பத்தினருடன்/ பஜ்ரங்தள் தீவிரவாதி தாராசிங்
இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.
இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர். தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.
ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை. இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.
ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது. எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!
இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது. இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.
‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.
இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.
இதை நீக்கியவுடன், ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.
தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.
“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது என்பது இதுதானோ

லிபியா வீழ்கிறது: இறுதி கட்ட மோதல்!!!

லிபியாவை ஆக்கிரமிக்க ஆர்பாட்டக்காரர்கள் தீவிரம்டிரிபோலி : லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக்கைப்பற்றிவிட்டன. தொடர்ந்து தலைநகர்டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளை கடாபி எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில், முன்னாள் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள, முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் மோதல் நடந்தது. இறுதியில் ஜாவியா நகரம் எதிர்ப்பாளர்கள் கைகளில் வீழ்ந்தது. ஜாவியா நகரைச் சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன்,ஜென்டன் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2,000 ராணுவ வீரர்கள், எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ., தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர். அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.
டிரிபோலியில் அச்சம்: பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கர்னல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் மூளலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில், கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில், பொதுமக்கள், தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி, ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

கடாபியை நீக்க ஆலோசனை: இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் லிபியா மீது, ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 மாநிலங்களில் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும்...

ரியாத்,மார்ச்.2:அஸ்ஸாம் மாநிலம் தவிர தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு வருகைப்புரிந்துள்ள இ.அபூபக்கர் கல்ஃப் தேஜஸுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: "வாய்ப்புள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி எஸ்.டி.பி.ஐயின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவை தேடுவதே லட்சியமாகும். கட்சி முன்வைக்கும் அரசியல் சித்தாந்தத்தை அங்கீகரிக்கும் விதத்தில் தேர்தலை பயன்படுத்துவோம்.

இந்தியாவில் ஜனநாயகம் விற்பனை சரக்காக மாறிவிட்டது. கார்ப்பரேட்டுகளின் எண்ணங்களுக்கு களமாக மாறியுள்ளது இந்திய அரசியல். தேர்தலில் வேட்பாளர்களை நிர்ணயிப்பதிலும், சட்டமியற்றும் சபைகளில் கேள்வி கேட்பதற்கும் அடிப்படை காரணியாக பணம் மாறிவிட்டது. இச்சூழல் மாறவேண்டும்.

ஜனநாயகம் மற்றும் மதசார்ப்பற்ற கொள்கையின் உண்மையான தன்மை மக்களிடம் சென்றடைய வேண்டும். சிலரை சுரண்டவும், பலருக்கு துரோகம் செய்வதற்கும் உதவுவது அல்ல ஜனநாயகம். மக்கள் நலத்திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் அனைத்து பிரிவு மக்களுக்கும் நல்லவிதமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் எஸ்.டி.பி.ஐ லட்சியமாக கொண்டுள்ளது." இவ்வாறு இ.அபூபக்கர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லிபியாவிலிருந்து 98 மலேசியர்கள் தாய்மண் வந்தடைந்தனர் -உற்சாக வரவேற்பு

லிபியாவிலிருந்து 98 மலேசியர்கள் தாய்மண் வந்தடைந்தனர் -உற்சாக வரவேற்புலிபியாவிலிருந்து வெளியேறிய 98 மலேசியர்கள் திங்கட்கிழமை காலை 6.50 க்கு தாய் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்.
இத்தாலியிலிருந்து எம்.ஏ.எஸ் வாடகை விமானத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை வெளியுறவு துணையமைச்சர்,டத்தோ ரிச்சர்ட் ராயட் வரவேற்றார்.

விமான நிலையத்தில் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்த உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
லிபிய அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் லிபியாவில் கலவரம் உச்ச கட்டத்தில் உள்ளது.இதன் காரண்மாக அங்கு வசிக்கும் 130 மலேசியர்களை நாட்டுக்குத் திரும்ப கொண்டு வருவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.எஞ்சியுள்ள 32 பேரும் புதன்கிழமை மலேசியா வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே லிபியாவிலுள்ள மூன்று மலேசியர்கள் தங்கி இருக்கும் இடத்தை அடையாளம் காண முடியவில்லை என்று வெளியுறவு துணையமைச்சர் டத்தோ ரிச்சட் ராயட் கூறுகிறார்.காரணம் அவர்கள் அந்நாட்டுக்கு சென்றதற்கான பதிவுகளை வெளியுறவு அமைச்சு கொண்டிருக்கவில்லை

அஜ்மீர் குண்டுவெடிப்பு இந்துக்களின் தர்கா விஜயத்தை தடுக்கவே - ஆசிமானந்த் !

அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிகளவில் விஜயம் செய்வதால் அதனைத் தடுக்கும் முகமாகவும், இந்துக்களை பயமுறுத்தும் முகமாகவுமே அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று கைதாகியுள்ள இந்து தீவிரவாத சாமியார் ஆசீமானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்து தீவிரவாதிகளே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாமியார் ஆசீமானந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் ஆசீமானந்த் மக்கா மசூதி குண்டுவெடிப்பு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ள ஆசீமானந்த், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இரு தினங்களுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான, பின்னர் கொலை செய்யப்பட்டு விட்ட சுனில் ஜோஷி தன்னை வந்து சந்தித்ததாகவும், அவருடன் ராஜ் மற்றும் மெஹல் என்ற இருவரும் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜோஷி தன்னிடம், அவரது ஆட்கள்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், சம்பவம் நடந்தபோது அவர் தர்காவில் தான் இருந்ததாகவும் தெரிவித்ததாக கூறினார். மேலும், இந்த குண்டுவெடிப்பை நடத்துவதற்காக இரண்டு முஸ்லீம் சிறுவர்களை மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவரான இந்திரேஷ் தன்னிடம் அனுப்பி வைத்ததாகவும், அந்த சிறுவர்கள் தான் வெடிகுண்டை தர்காவுக்குள் சென்று வைத்ததாகவும் ஜோஷி தன்னிடம் தெரிவித்ததாக ஆசிமானந்த் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணம் அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் பெருமளவில் விஜயம் செய்து வருவதால் அதனைத் தடுக்கும் வண்ணமும், இந்துக்களை பயமுறுத்தவுமே என்று ஆசிமானந்த் கூறியுள்ளார். மக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தவறாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஒருவர் சுவாமி ஆசிமானந்துடன் நன்முறையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன் சாமியார் ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது

பாபரி மஸ்ஜிதி இடிப்பிற்கு முன் கரசேவர்கர்களுடன் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம்!


உலகமே பார்த்துக்கொண்டிருக்கையில் 400 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த "பாபரி மஸ்ஜித்" பாசிஸ பயங்கரவாதிகளால் நுணுக்கமாக் திட்டமிடப்பட்டு 1992 டிசம்ப்பர் 6 அன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டு சென்ற வருடம் டிசம்பர் 2010 உடன் 18 வருடங்களாகிறது. அதன் பிறகு நடந்தவைகள் நடந்து கொண்டிருப்பவற்றை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. பாபரி மஸ்ஜித் இடிப்பு 'சதி' தொடர்பான செய்திகளை ஒவ்வொரு வருடமும் நம்மால முடிந்த அளவு பதிவு செய்து வருகிறோம். அதே போல் இவ்வருடம் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறது இக்கட்டுரை. பாபரி மஸ்ஜித் இடிப்பில் கரசேவர்களுடன் இணைந்து செயல்பட்டு மறைமுகமாக செய்திகளை சேகரித்தவரின் (சஞ்சய் காவ்) என்ற பத்திரிக்கையாளர் ஸ்டேட்ஸ் மேன் பத்திரிக்கைக்காக செய்தி சேகரிக்க சென்றவர்) வாக்குமூலம்.


ஒவ்வொரு முறையும் நான் அயோத்தியைப் பற்றி படிக்கும் போதெல்லாம் 1992 டிசம்பர் 6 அன்று எனக்கு ஏற்பட்ட நடுங்க வைக்கும் அனுபவங்களை நினைவு கூர்வது என் வழக்கம். 1992 வருடம் டெல்லி யூனிட் பா.ஜ.க உறுப்பினர் ஒருவரிடம் பெற்ற கடிதத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு நான் அயோத்தி சென்றேன்.

அயோத்தியில் நுழைந்த நான் "கரசேவகன்" என்ற நிலையை அடைவதற்காக புழுவைப் போன்று நெளிந்து மிகவும் கவனமாக சென்றேன். துவக்கத்தில் சந்தேகத்தின் பேரில் கேள்விக்கணைகளால் என்னை துளைத்தெடுத்தார்கள். அப்போதெல்லாம், "கஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தால் என்னுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்த ஒரு அப்பாவி கஷ்மீர் இந்து" என்ற போலியான பல்லவியை மீண்டும் மீண்டும் பாட வேண்டைய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு நான் உண்மையானவன் (கரசேவகன்) தான் என நம்பப்பட்டேன்.

மதவாத நாடகம் "அரசியல்" என்னும் முகத்திறையால் மூடப்பட்டிருப்பதை அப்போதுதான் நான் முதலில் பார்த்தேன். எப்படியோ ஒரு வழியாக சமாளித்து நான் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு அருகிலிருந்த கூடாரத்தில் தங்கினேன். 1992 டிசம்ப்பர் 6, பாபர் மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலையில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் அருகிலிருந்த இரண்டு கல்லறைகளின் அருகில் ஒன்று கூடினார்கள். அதன்பின் துரிதகதியில் அந்த இரண்டு கல்லறைகளையும் கடப்பாறை, மண்வெட்டி மற்றும் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இடிக்கத் தொடங்கினார்கள். நானும் அவர்களுடன் சேர்க்கப்பட்டேன். அந்த இடிப்பை அவர்கள் "சிறிய கரசேவை" என்றழைத்தனர்.
பிறகு மற்றுமொரு கல்லறை குறிவைக்கப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின் அந்த கல்லறைகள் இருந்த இடங்கள் சமதளமாக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு அங்கு கல்லறை இருந்த அடையாளமே தெரியாமல் ஆக்கப்பட்டது. அங்கிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டு அருகிலிருந்த குளத்தில் வீசப்பட்டது. பின்பு அந்த இடத்தில் உடனடியாக இரண்டு தற்காலிக "டீக்கடைகள்" திறக்கப்பட்டது. இவை அனைத்தும் முன்னாள் பா.ஜ.க எம்.பி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக செய்து முடிக்கப்பட்டது. பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த சிலர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்ட வேண்டும் என்றனர். இன்னும் சிலரோ அப்படி செய்ய வேண்டாம். அப்படி செய்தால் ராமர் கோவில் கட்டக்கூடிய‌ அந்தப்பணிக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும் என அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த பிராந்திய ஆயுத படையினர் கரசேவகர்களுடன் மிகவும் நட்புடன் பழகினர். அவர்களின் நட்பு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ன் நட்பு போன்று இனிமையாக இருந்தது. கல்லறை இடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட நான் மண்படிந்த என்னுடைய அழுக்கு சட்டையுடன் அயோத்தி நகருக்குள் வலம் வந்தேன். வரும் வழியில் என்னைப்பார்த்த பிராந்திய ஆயுத படையினர் அனைவரும் நான் கரசேவையில் ஈடுபட்டிருப்பதை என்னுடைய சட்டையை பார்த்து தெரிந்து கொண்டு என்னிடம் மிகவும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். ஒரு நாள் இரவு நான் மற்றும் சில கரசேவகர்கள் "பிராந்திய ஆயுத படையினரின் ஒரு குழுவுடன் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்களில் ஒருவர் சொன்னார்; "எங்களைப்பற்றி கவலைபடாதீர்கள், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக நிற்போம்". டிசம்பர் 6 அன்று உங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டு என உத்தரவிட்டால் நாங்கள் எங்களின் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு உங்களுடன் இணைந்து கொள்வோம்" உறுதியளித்தார் மற்றொருவர். "பாரா மிலிட்டரி படையினரை சரணடையச் செய்வோம்" என்று குறுக்கிட்டு புன்முறுவல் பூத்தார் மற்றொருவர்.

மேலும் அவர்களிடம் பேசியபோது பிராந்திய ஆயுத படையை சேர்ந்த ஒருவர் பாபரி மஸ்ஜிதின் செங்கல்களை பெயர்த்து எடுத்துக்கொண்டிருக்கும் போது பிடிப்பட்டார் என்ற செய்தியையும் அறிய முடிந்தது. அவர்பிடிபடும் போது கிட்டத்தட்ட 10லிருந்து 12 செங்கல்களை பெயர்த்து எடுத்திருப்பார் என்றார் ஒரு சக படை வீரர். இன்னொருவரோ "மத்திய பாதுகாப்பு படையினரின்" நடவடிக்கைகள் குறித்து மிகுந்த‌ வருத்தங்களுடன் சில சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். சில தினங்களுக்கு முன் உத்தர பிரதேச கான்ஸ்டபிள் ஒருவர் பிரச்சனைக்குரிய பகுதியில் நிற்பதற்கு மத்திய பாதுகாப்பு படையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த சம்பவத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர் என்ற சம்பவத்தை வருத்தத்துடன் தெரிவித்தார் வந்த படைவீரர். கரசேவர்களுக்கும் உத்தர பிரதேச காவல் துறைக்குமிடையேயான பிணைப்பு பலமாக இருந்தது. காவல் துறையினர் எங்களுக்கு டீ மற்றும் உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர். வேறொருவரோ கரசேவர்களை உணவு உண்பதற்காக அவர்களின் முகாமுக்கே அழைத்தார்! கரசேவர்களில் பெரும்பாலானொர் கைகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் என்னிடம் ஒரு கூர்மையான தானியங்கி கத்தியை காண்பித்து அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தான்.

இன்னும் சில சாதுக்களோ அவர்களின் கைகளில் வயர்லஸ் வாக்கி டாக்கிகள் இருந்தது. ஒரு சாது என்னிடம் இப்படி கூறினார் " நாங்கள் இவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக்கொண்டிருப்பவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் ஷான் இ ஆவாத் என்ற ஹோட்டலில் தங்கியிருக்கும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஒரு கண் வைத்துள்ளோம் என்றார். மேலும் அவர் என்னை மிகப் பிரம்மாண்டமான "உணவருந்தும் அறைக்கு" அழைத்துச்சென்றார். எங்களுக்கு உணவு பரிமாறியவரோ ஏற்கனவே ஒரு இலட்சம் கரசேவகர்கள் வந்து சேர்ந்துவிட்டனர் என்றார்.

மேலும் அவர் பேசும் போது எவ்வித சூழ்நிலையயும் சமாளிப்பதற்காக இன்னும் அதிகமான் சமயலறைகளும், உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் தயராக இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று திருப்திபட்டுக்கொண்டார். என்னை உணவறைக்கு அழைத்துச் சென்ற நபர் கூறினார்; " நாங்கள் போர்த் தந்திரங்களை கூட திட்டமிட்டு வைத்துள்ளோம். உத்தர பிரதேச காவல் துறையும் எங்களுக்கு துணையாக நிற்கின்றது, வெற்றி நமதே என்றார்."

இவற்றையெல்லாம் விட... பல்லாயிரக்கணக்கான் கரசேவகர்கள் நிர்வகிக்கக்கூடிஅய் பிரமிக்கத்தக்க திட்டங்கள் திட்டமிடுதல்கள், நிர்வாக முறைகள் என்னை மிகுந்த பிரமிப்பில் ஆழ்த்தின. வந்திருந்த அனைவருக்கும் அடையாள அட்டைகள். உணவிற்கான கூப்பன்கள், கூடாரங்கள், விளக்குகள் என சொல்லிக்கொண்டே போகலாம். நிர்வாகத்தினர் உணவு மற்றும் இருப்பிட வசதிகளை மட்டும் செய்யவில்லை. மாறாக பாபரி மஸ்ஜித் இடிப்பிற்க்கு தேவையான அனைத்து விதமான ஆய்தங்கள் மற்றும் பொருட்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து கொண்டிருந்தனர்.

D-DAY என்ற அழைக்கப்பட்ட "இடிக்கும் நாள்" நெருங்கிக் கொண்டிருப்பதை மனதில் கொண்டு அனைவரும் துரிதமாக செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

நன்றி : அவுட்லுக், அக்டோபர் 2010

2ஜி ஊழல்: 63 பேரை சிபிஐ கண்காணிக்கிறது!!!

புதுதில்லி, மார்ச்.1: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 10 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 63 பேர் தங்களது கண்காணிப்பின்கீழ் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.


இந்த வழக்கின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஆதரவு தெரிவித்த மத்திய அரசு, இதற்காக நீதிமன்றத்தையும், நீதிபதியையும் நியமிக்குமாறு கேட்டு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சட்ட அமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிவித்தது.

இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்சிடம் தெரிவித்தார்.


சிபிஐ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த வழக்கு குறித்த சிபிஐயின் விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் சிபிஐயின் கண்காணிப்பின்கீழ் 10 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் புரமோட்டார்கள் உள்ளிட்ட 63 பேர் உள்ளதாக வேணுகோபால் தெரிவித்தார்.

சிபிஐயும், அமலாக்கத் துறையும் தங்களது விசாரணை அறிக்கையை மார்ச் 10-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


டாடா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விசாரணையை மூடப்பட்ட அறைக்குள் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.


இந்த வழக்கு விசாரணையை சிபிஐ சுதந்திரமாக நடத்தலாம் என அனுமதி வழங்கி இருந்த நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அரசு அமைக்க வேண்டும் எனக் கேட்டிருந்தது.


இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரிலையன்ஸ் அனில் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் டெக்னாலஜி நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் விசாரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.


அதற்கு உச்சநீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர்மட்டத்தினர் விசாரிக்கப்படவில்லை. நிர்வாக இயக்குநர்களுக்கு சம்மன் அனுப்பப்படாதது வியப்பளிக்கிறது எனத் தெரிவித்திருந்தது

நிறம் மாறும் "தீவிரவாதம்"!

டெல்லி நீதிமன்றத்தில் சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் ஒட்டு மொத்த இந்திய தேசத்து மக்களிடம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைப்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் சம்ஜோத்தா குண்டு வெடிப்பு உட்டபட அனைத்திலும் காவி தீவிரவாதத்தின் செயல்கள் அனைத்தும் பட்டவர்த்தனமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
சிவப்பு நிறம் கொண்டுள்ள இந்தியாவின் பல பத்திரிக்கைகளும், மீடியாக்களும் ஒட்டு மொத்தமாக இவ்வாறான செய்திகளை பூசு மொழுகி காவிகளை பாதுகாக்கும் செயல்களில்தான் ஈடுபடுகின்றன. இந்துத்துவாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பத்திரிக்கையாளரான ஜுக் சுரையா தன்னுடைய பத்திரிக்கையான "சுரையா"வில் தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளார். தீவிரவாதத்திற்கு மதமோ, சாதியோ, நிறமோ கிடையாதாம். தீவிரவாத்திற்கு காவி நிறமோ அல்லது பச்சை நிறமோ அல்ல மாறாக அது எந்த மதத்தையும் சாராது என்று கூறியுள்ளார்.
தங்களுடைய எல்ல வண்டவாலங்களும் வெளிவந்துகொண்டிருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத இவர்கள் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் தற்போது ஓலமிடத் தொடங்கியுள்ளார்கள். பா.ஜ.க வின் செய்தி தொடர்பாளர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் நிர்மலா சீதாராமண் ஆகியோர் மராத்திய தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கும் போது தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேலும் தீவிரவாதத்தை மதத்தோடு தொடர்புபடுத்துவது மிகவும் தவறான செயலாகும் என்று கூறியுள்ளனர்.
கடந்த 2008 ஆண்டு வரை இவர்களது கூற்றை எடுத்துப்பார்த்தால், இவர்கள் கூறும் தீவிரவாதத்திற்கு நிறம், சாதி, மதம் எல்லாமே இருந்தது. தீவிரவாதி என்றாலே அது குறிப்பிட்ட இந்த மதத்தைச்சார்ந்தவர்கள் தான் என்று பிரச்சாரம் செய்த இவர்கள் தற்போது அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கிறார்கள். "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல! ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற இவர்களது முந்தைய வாதம் மழுங்கிப்போன கத்தியாக மாறிவிட்டதை நம்மால காணமுடிகிறது.இதற்கு முன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாக பரப்பிய பல அறிவுஜீவிகளை தற்போது காணமுடியவில்லை. அந்நேரத்தில் வாய்கிழிய தீவிரவாதத்தை பற்றி வாந்தி எடுத்த இவர்கள், தற்போது அதே வாந்தியை வெளியில் கொட்டாமல் முழுங்கி வருவதை பார்க்கமுடிகிறது.வி.ஹெச்.பி யின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா மேடை பேச்சுகளில் தன்னுடைய விஷமத்தனமான கருத்துக்களை பரப்பும் போது எங்கையும் "முஸ்லிம் தீவிரவாதம்" என்ற சொல்லை உபயோகப்படுத்தாமல் இருந்ததில்லை. அப்போது எந்த மீடியாவோ அல்லது ஆர்.எஸ்.எஸ்ன் மூத்த தலைவர்களில் ஒருவரோ அல்லது தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று பிதற்றிக்கொள்ளும் ஒருவர் கூட பிரவின் தொகாடியாவின் இந்த விஷக்கருத்துக்களை எதிர்த்து அறிக்கை விட்டதில்லை.
எப்போது ஹேமந்த கர்கரே என்ற தீவிரவாத எதிர்பு படையைச்சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி காவித்தீவிரவாதிகளான, சாமியார்களின் தீவிரவாதத்தையும் அதற்கு உடந்தையாக இருந்த இராணுவ அதிகாரிகளின் தீவிரவாத செயல்களையும் வெளிக்கொண்டுவந்தாரோ அன்றிலிருந்து தான் மீடியாக்களும், ஆர்.எஸ்.எஸ்ம் தீவிரவாத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கொக்கறித்து வருகிறது.

இந்துத்துவாவின் கொள்கை இந்திய நாட்டின் இறையான்மைக்கு எதிரானது, நாட்டின் ஒட்டு மொத்த குடிமக்களுக்கு எதிரானது, இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. இவர்களது அனைத்து தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருவது ஆர்.எஸ்.எஸ் என்கிற தீவிரவாத அமைப்புதான் என்று சுவாமி அசிமானந்தாவைன் வாக்குமூலத்தின் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த நாட்டில் நடைப்பெற்ற பெரும்பாலான குண்டுவெடிப்பு சம்மவத்திற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை தடை செய்யாமல் இந்திய அரசாங்கம் ஏன் மெளனம் சாதித்து வருகிறது? காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்வதால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை, அப்படி தடை செய்யப்பட்டால் அவர்களது கொள்கைகளை முடக்க முடியுமே ஒளிய அவர்களது இயக்க செயல்பாட்டை தடுத்து நிறுத்த முடியாது ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் தனக்கென்று பல துணை அமைப்புகளை ஏற்படுத்தி செயல் பட்டு வருகிறது. அப்படியென்றால் திக் விஜய் சிங்கிடம் ஒரு கேளிவியை கேட்க விரும்புகின்றோம், சில வருடங்களுக்கு முன்னால் சிமி என்ற இஸ்லாமிய இயக்கம் கொள்கைக்காகவே பல முறை தடைசெய்யப்பட்டது. அவர்கள் தீவிரவத செயல்களின் ஈடுபட்டார்கள் என்று இது வரை எந்த ஒரு ஆதாரத்தையும் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை, அப்படி என்றால் சிமி இயக்கத்தை மட்டும் தடைசெய்தது ஏன்?

"ஹிந்து ராஷ்டிரா" என்ற ஆர்.எஸ்.எஸ்ன் கிரிமினல் அஜன்டா சிமியின் கொள்கைகளை விட இந்திய நாட்டிற்க்கு குறைந்த பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என்று கூற வருகிறீர்களா? அப்படியென்றால் வெளிப்படையாக நாம் ஒரு விவாதத்திற்கு ஏற்படுத்தவேண்டும் எப்படி ஒரு மதச்சார்பற்ற இந்திய நாட்டை உருவாக்கவேண்டும் என்ற தலைப்பில்!

இதனால் வரை வெளிவந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாம் ஒன்றை தெளிவாக கூறலாம். அது,


"எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல! ஆனால் எல்லா இந்துத்துவவாதிகளும் தீவிரவாதிகளே!"

ஏனென்றால் இந்துக்கள் ஒருபோதும் இந்துத்துவனகா ஆக மாட்டார்கள்! இந்துத்துவர்கள் ஒருபோதும் இந்தியனாகவே மாட்டார்கள்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.38 குறைப்பு!

சென்னை, மார்ச்.1: மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் குறைத்து 27 சதவீதம்மட்டும் வசூலிக்க முடிவுசெய்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப பெட்ரோலின் விலையினை உயர்த்தி அறிவிக்கின்றன. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை மனதிலே கொண்டு தமிழக அரசு தன்னால் இயன்ற அளவிற்கு அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியினை குறைத்து அறிவிக்கிறது.


2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியபோது - தமிழகத்தில் டீசலின் மீதான விற்பனை வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 23.43 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தோம். அதுபோலவே, 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது தமிழக அரசு 23.43 சதவிகிதத்திலிருந்து 21.43 சதவிகிதமாக தனது விற்பனை வரியைக் குறைத்துக் கொண்டது.


மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்குக் கிடைக்கக் கூடிய விற்பனை வரியை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதை மனதிலே கொண்டு - தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள விற்பனை வரி 30 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதம் குறைத்து 27 சதவிகிதம் மட்டுமே வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ. 210 கோடி வரி இழப்பு ஏற்படும். பெட்ரோலைப் பயன்படுத்துவோருக்கு லிட்டர் ஒன்றுக்கு இவ்வாறு விற்பனை வரியைக் குறைப்பதின் காரணமாக ரூ. 1.38 காசு குறையும். இந்த விலைக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு விற்பனை வரி குறைக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் உள்ள 27 சதவிகிதம் பெட்ரோல் மீதான விற்பனை வரி என்பது தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் ; இன்று முதல் தேர்தல் நடைமுறை அமல்

புதுடில்லி: வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும். புதுச்சேரியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெறும்.

கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதியும் அசாமில் 2கட்டமாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளிலும் மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்18,ஏப்ரல் 23, ஏப்ரல் 27 மற்றும் மே 3 , மே 7 மே 10 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26ம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரீசிலனை மார்ச் 28ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதியுடன் முடிகிறது.

தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

இத்தேர்தலுக்கான தேதி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான சட்டசபை காலம் மே 16 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்னனு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து முன்ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் பல முறை ஆய்வு கூட்டங்களை நடத்தி ஏற்பாடுகள் முடிந்து ஓட்டுப்பதிவுக்கு தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்நிலையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் குரேஷி தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் நாள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் கமிஷனர் குரேஷி தேர்தல் நடக்கும் நாள் விவரத்தை அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடக்கிறது

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?

முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்