அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 2, 2011

பாபரி மஸ்ஜிதி இடிப்பிற்கு முன் கரசேவர்கர்களுடன் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம்!


உலகமே பார்த்துக்கொண்டிருக்கையில் 400 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த "பாபரி மஸ்ஜித்" பாசிஸ பயங்கரவாதிகளால் நுணுக்கமாக் திட்டமிடப்பட்டு 1992 டிசம்ப்பர் 6 அன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டு சென்ற வருடம் டிசம்பர் 2010 உடன் 18 வருடங்களாகிறது. அதன் பிறகு நடந்தவைகள் நடந்து கொண்டிருப்பவற்றை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. பாபரி மஸ்ஜித் இடிப்பு 'சதி' தொடர்பான செய்திகளை ஒவ்வொரு வருடமும் நம்மால முடிந்த அளவு பதிவு செய்து வருகிறோம். அதே போல் இவ்வருடம் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறது இக்கட்டுரை. பாபரி மஸ்ஜித் இடிப்பில் கரசேவர்களுடன் இணைந்து செயல்பட்டு மறைமுகமாக செய்திகளை சேகரித்தவரின் (சஞ்சய் காவ்) என்ற பத்திரிக்கையாளர் ஸ்டேட்ஸ் மேன் பத்திரிக்கைக்காக செய்தி சேகரிக்க சென்றவர்) வாக்குமூலம்.


ஒவ்வொரு முறையும் நான் அயோத்தியைப் பற்றி படிக்கும் போதெல்லாம் 1992 டிசம்பர் 6 அன்று எனக்கு ஏற்பட்ட நடுங்க வைக்கும் அனுபவங்களை நினைவு கூர்வது என் வழக்கம். 1992 வருடம் டெல்லி யூனிட் பா.ஜ.க உறுப்பினர் ஒருவரிடம் பெற்ற கடிதத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு நான் அயோத்தி சென்றேன்.

அயோத்தியில் நுழைந்த நான் "கரசேவகன்" என்ற நிலையை அடைவதற்காக புழுவைப் போன்று நெளிந்து மிகவும் கவனமாக சென்றேன். துவக்கத்தில் சந்தேகத்தின் பேரில் கேள்விக்கணைகளால் என்னை துளைத்தெடுத்தார்கள். அப்போதெல்லாம், "கஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தால் என்னுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்த ஒரு அப்பாவி கஷ்மீர் இந்து" என்ற போலியான பல்லவியை மீண்டும் மீண்டும் பாட வேண்டைய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு நான் உண்மையானவன் (கரசேவகன்) தான் என நம்பப்பட்டேன்.

மதவாத நாடகம் "அரசியல்" என்னும் முகத்திறையால் மூடப்பட்டிருப்பதை அப்போதுதான் நான் முதலில் பார்த்தேன். எப்படியோ ஒரு வழியாக சமாளித்து நான் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு அருகிலிருந்த கூடாரத்தில் தங்கினேன். 1992 டிசம்ப்பர் 6, பாபர் மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலையில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் அருகிலிருந்த இரண்டு கல்லறைகளின் அருகில் ஒன்று கூடினார்கள். அதன்பின் துரிதகதியில் அந்த இரண்டு கல்லறைகளையும் கடப்பாறை, மண்வெட்டி மற்றும் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி இடிக்கத் தொடங்கினார்கள். நானும் அவர்களுடன் சேர்க்கப்பட்டேன். அந்த இடிப்பை அவர்கள் "சிறிய கரசேவை" என்றழைத்தனர்.
பிறகு மற்றுமொரு கல்லறை குறிவைக்கப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பின் அந்த கல்லறைகள் இருந்த இடங்கள் சமதளமாக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு அங்கு கல்லறை இருந்த அடையாளமே தெரியாமல் ஆக்கப்பட்டது. அங்கிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டு அருகிலிருந்த குளத்தில் வீசப்பட்டது. பின்பு அந்த இடத்தில் உடனடியாக இரண்டு தற்காலிக "டீக்கடைகள்" திறக்கப்பட்டது. இவை அனைத்தும் முன்னாள் பா.ஜ.க எம்.பி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக செய்து முடிக்கப்பட்டது. பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த சிலர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்ட வேண்டும் என்றனர். இன்னும் சிலரோ அப்படி செய்ய வேண்டாம். அப்படி செய்தால் ராமர் கோவில் கட்டக்கூடிய‌ அந்தப்பணிக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும் என அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த பிராந்திய ஆயுத படையினர் கரசேவகர்களுடன் மிகவும் நட்புடன் பழகினர். அவர்களின் நட்பு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ன் நட்பு போன்று இனிமையாக இருந்தது. கல்லறை இடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட நான் மண்படிந்த என்னுடைய அழுக்கு சட்டையுடன் அயோத்தி நகருக்குள் வலம் வந்தேன். வரும் வழியில் என்னைப்பார்த்த பிராந்திய ஆயுத படையினர் அனைவரும் நான் கரசேவையில் ஈடுபட்டிருப்பதை என்னுடைய சட்டையை பார்த்து தெரிந்து கொண்டு என்னிடம் மிகவும் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். ஒரு நாள் இரவு நான் மற்றும் சில கரசேவகர்கள் "பிராந்திய ஆயுத படையினரின் ஒரு குழுவுடன் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்களில் ஒருவர் சொன்னார்; "எங்களைப்பற்றி கவலைபடாதீர்கள், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக நிற்போம்". டிசம்பர் 6 அன்று உங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டு என உத்தரவிட்டால் நாங்கள் எங்களின் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு உங்களுடன் இணைந்து கொள்வோம்" உறுதியளித்தார் மற்றொருவர். "பாரா மிலிட்டரி படையினரை சரணடையச் செய்வோம்" என்று குறுக்கிட்டு புன்முறுவல் பூத்தார் மற்றொருவர்.

மேலும் அவர்களிடம் பேசியபோது பிராந்திய ஆயுத படையை சேர்ந்த ஒருவர் பாபரி மஸ்ஜிதின் செங்கல்களை பெயர்த்து எடுத்துக்கொண்டிருக்கும் போது பிடிப்பட்டார் என்ற செய்தியையும் அறிய முடிந்தது. அவர்பிடிபடும் போது கிட்டத்தட்ட 10லிருந்து 12 செங்கல்களை பெயர்த்து எடுத்திருப்பார் என்றார் ஒரு சக படை வீரர். இன்னொருவரோ "மத்திய பாதுகாப்பு படையினரின்" நடவடிக்கைகள் குறித்து மிகுந்த‌ வருத்தங்களுடன் சில சம்பவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். சில தினங்களுக்கு முன் உத்தர பிரதேச கான்ஸ்டபிள் ஒருவர் பிரச்சனைக்குரிய பகுதியில் நிற்பதற்கு மத்திய பாதுகாப்பு படையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த சம்பவத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர் என்ற சம்பவத்தை வருத்தத்துடன் தெரிவித்தார் வந்த படைவீரர். கரசேவர்களுக்கும் உத்தர பிரதேச காவல் துறைக்குமிடையேயான பிணைப்பு பலமாக இருந்தது. காவல் துறையினர் எங்களுக்கு டீ மற்றும் உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர். வேறொருவரோ கரசேவர்களை உணவு உண்பதற்காக அவர்களின் முகாமுக்கே அழைத்தார்! கரசேவர்களில் பெரும்பாலானொர் கைகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் என்னிடம் ஒரு கூர்மையான தானியங்கி கத்தியை காண்பித்து அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தான்.

இன்னும் சில சாதுக்களோ அவர்களின் கைகளில் வயர்லஸ் வாக்கி டாக்கிகள் இருந்தது. ஒரு சாது என்னிடம் இப்படி கூறினார் " நாங்கள் இவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக்கொண்டிருப்பவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் ஷான் இ ஆவாத் என்ற ஹோட்டலில் தங்கியிருக்கும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஒரு கண் வைத்துள்ளோம் என்றார். மேலும் அவர் என்னை மிகப் பிரம்மாண்டமான "உணவருந்தும் அறைக்கு" அழைத்துச்சென்றார். எங்களுக்கு உணவு பரிமாறியவரோ ஏற்கனவே ஒரு இலட்சம் கரசேவகர்கள் வந்து சேர்ந்துவிட்டனர் என்றார்.

மேலும் அவர் பேசும் போது எவ்வித சூழ்நிலையயும் சமாளிப்பதற்காக இன்னும் அதிகமான் சமயலறைகளும், உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் தயராக இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று திருப்திபட்டுக்கொண்டார். என்னை உணவறைக்கு அழைத்துச் சென்ற நபர் கூறினார்; " நாங்கள் போர்த் தந்திரங்களை கூட திட்டமிட்டு வைத்துள்ளோம். உத்தர பிரதேச காவல் துறையும் எங்களுக்கு துணையாக நிற்கின்றது, வெற்றி நமதே என்றார்."

இவற்றையெல்லாம் விட... பல்லாயிரக்கணக்கான் கரசேவகர்கள் நிர்வகிக்கக்கூடிஅய் பிரமிக்கத்தக்க திட்டங்கள் திட்டமிடுதல்கள், நிர்வாக முறைகள் என்னை மிகுந்த பிரமிப்பில் ஆழ்த்தின. வந்திருந்த அனைவருக்கும் அடையாள அட்டைகள். உணவிற்கான கூப்பன்கள், கூடாரங்கள், விளக்குகள் என சொல்லிக்கொண்டே போகலாம். நிர்வாகத்தினர் உணவு மற்றும் இருப்பிட வசதிகளை மட்டும் செய்யவில்லை. மாறாக பாபரி மஸ்ஜித் இடிப்பிற்க்கு தேவையான அனைத்து விதமான ஆய்தங்கள் மற்றும் பொருட்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து கொண்டிருந்தனர்.

D-DAY என்ற அழைக்கப்பட்ட "இடிக்கும் நாள்" நெருங்கிக் கொண்டிருப்பதை மனதில் கொண்டு அனைவரும் துரிதமாக செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

நன்றி : அவுட்லுக், அக்டோபர் 2010

No comments: