புதுடெல்லி,பிப்.5:கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.
இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான்
ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்துவந்தார்.
27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர்
பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.
தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.
இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment