அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
Showing posts with label Islamic news. Show all posts
Showing posts with label Islamic news. Show all posts

Friday, February 10, 2012

உலகில் செல்வாக்குள்ள 50முஸ்லிம்கள் - 2011!





உலக சனத்தொகையில் 1.6 பில்லயின் பேர் முஸ்லிம்களாவர். உலக சனத்தொகையில் 5 பேரில் ஒருவர் முஸ்லிமாவார். சர்வதேச மட்டத்தில் மிக வேகமாக வளரும் மார்க்கம் இஸலாம் என்று கடைசியாக மேற்கொள்ளப்ட்ட சுயாதீன ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை எவராலும் மறைக்க முடியாது. சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற துறைசார் இஸ்லாமிய பிரபலங்கள் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

Tuesday, August 23, 2011

Qur"an Verses

உண்மை பேசுக!
அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மைபலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டுஅவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.5:119
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும்உறவினர்களுக்கும்அநாதைகளுக்கும்மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.2:83
கனிவாகப் பேசுக!
உறவினர்களோஅநாதைகளோஏழைகளோ வந்து விடுவார்களானால்அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவானவார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம்தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும்,வழிப்போக்கர்களுக்கும்உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம்செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராகவீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால்அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல்இது ஹலாலானதுஇது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யைஇட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாகஎவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமுமின்றிஅல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வதுஅல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும்வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்!
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ளபேதை பெண்கள் மீது அவதூறுசெய்கிறார்களோஅவர்கள் நிச்சயமாக இம்மையிலும்மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி...

Woman disables anti-Islam websitesஅமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.
இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்!

sleeping positions2 Adorable sleeping positions
 முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!.......

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல்உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றிசோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போதுஇந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்)இன்னும்மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன்4:142)
எனவேசோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.
சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -
ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டுஅன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமாஅதற்குநபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.
உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால்நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறதுஉறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராகசோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)ஆதாரம் : புகாரி}
பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்
தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கிபஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்
எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!
இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து,ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள்அரை வயிறு சாப்பிட்டுகால் வயிறு தண்ணீர் குடித்துகால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!
நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கிதஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கிஅதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.
4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில்சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.
யா அல்லாஹ்! கவலைதுயரம்இயலாமைசோம்பல்கஞ்சத்தனம்கோழைத்தனம்,மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)
ஆகையால்ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும்.நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.
சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும்தீர்வு’.
சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.
Thanks
TMB

Monday, August 8, 2011

தக்வா தரும் பாடம்...

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 7
தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் - பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய "அல்லாஹ்" நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.

நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது தக்வாவின் விரிந்த பொருளாகும்.
"அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றை செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் "தக்வா"வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவனாக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.
ஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், "நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்" என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை தமது தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கிறார்.
ஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனதில் இறையச்சம் மிகுந்து என்றும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு,  தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.
இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது.
- தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்: இப்னு ஹனீஃப்