Wednesday, August 15, 2012
46 மாடிகள் கொண்ட தென் இந்தியாவின் மிக உயர அபார்ட்மெண்ட்
பெங்களூரு: 46 மாடிகள் கொண்ட, தென் இந்தியாவிலேயே மிக உயரமான அபார்ட்மெண்ட் பெங்களூரில் கட்டப்பட்டு வருகிறது. பண்ணரகட்டா சாலையில் மீனாட்சி மால் கட்டடத்துக்கு அருகே கட்டப்படும் இந்தக் கட்டடம் தான் தென் இந்தியாவிலேயே மிக உயரமான வசிப்பிடமாகும். மந்த்ரி பினாக்கிள் என்ற இந்த கட்டடத்தில் ஒவ்வொரு அபார்ட்மெண்டும் 3 மாடிகளைக் கொண்டதாக இருக்குமாம்.
யாருக்கு சுதந்திரம்?
66-வது சுதந்திர தினத்தை நமது தேசம் கொண்டாடி முடித்து இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை விட்டொழித்துவிட்டு சென்ற பிறகு நாம் ஏராளமானவற்றில் முன்னேறியிருக்கிறோம். சாதனைகள் நமது சுதந்திரத்திற்கு புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. சுதந்திரத்தை விட மதிப்பான வேறெதுவும் இவ்வுலகில் மனிதனுக்கு இல்லை எனலாம்.
“சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புலேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா…”
ஹம் புல்புலேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா…”
“பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு…..”
இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சு…..”
ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது – குடியரசு தலைவர் உரை!
புதுடெல்லி:ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாராளுமன்றம்தான் தேச மக்களின் ஆன்மா என்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் 66-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம் நடத்துவதும் நியாயமானதுதான்.
ஆனால், இந்தப் போராட்டங்களின் போது சில சமயங்களில் மக்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுகின்றனர். ஆனால், அதற்காக ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
Subscribe to:
Posts (Atom)