ஆறுவயதேயான சிறுமியை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக பிரஷாந்த் கதே என்னும் 25 வயது நபருக்கு மும்பை-ஒஸ்மானாபாத் கீழ்நிலை நீதிமன்றம் மரணதண்டனை, ஆயுள்தண்டனை, மற்றும் 25,000 ரூபாய் அபராதம் ஆகியவற்றை ஒருசேர விதித்திருந்தது.இதை எதிர்த்து அந்நபர் செய்த மேல்முறையீட்டில், அந்தத் தண்டனைகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
Sunday, March 25, 2012
வன்புணர்வு வழக்கில் 'விந்து' தடயம் அவசியமில்லை : உயர்நீதிமன்றம்
ஆறுவயதேயான சிறுமியை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக பிரஷாந்த் கதே என்னும் 25 வயது நபருக்கு மும்பை-ஒஸ்மானாபாத் கீழ்நிலை நீதிமன்றம் மரணதண்டனை, ஆயுள்தண்டனை, மற்றும் 25,000 ரூபாய் அபராதம் ஆகியவற்றை ஒருசேர விதித்திருந்தது.இதை எதிர்த்து அந்நபர் செய்த மேல்முறையீட்டில், அந்தத் தண்டனைகளையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
பிரிட்டன்: முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சி தொடக்கம்
3 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்தள மக்களின் இயக்கம் என்ற தோற்றத்தில் இந்த விடுதலைக் கட்சி இயக்கம் தொடங்கிக் கட்டமைக்கப்பட்டது. இலண்டனுக்கு வடக்கேயுள்ள லூட்டோன் நகரத்தில் விடுதலைக் கட்சி (Freedom Party) என்ற பெயரில் இது உதயமானது. இப்போது, இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு எதிரான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆபாச பட சர்ச்சை - காங்கிரஸ் வெளியிட்டது புதிய வீடியோ !!
குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்து சிக்கிய விவகாரத்தில் தடய அறிவியல் துறை சம்பந்தப்பட்டவர்களின் கைக்கணினியில் ஆபாசபடம் ஏதுமில்லை என்று கூறியதன் எதிர்வினையாக ஆபாச படம் பார்த்ததற்கான புதிய ஒளிப்பட ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திலும் ஆளும் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை வெடித்தது. சட்டசபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, 2 பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தங்களது கைக்கணினி - ஐபேடில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னையை எழுப்பி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் குறித்து உரிமைக் குழு விசாரணைக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார்.
தேச விரோத அமைப்புகளான சிவசேனா ,R S S ஆதரவாளர்களின் கள்ள நாணய அச்சடிப்பு !
மும்பையில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி சிலர் கள்ளமார்க்கெட்டில் நாணயங்களை விற்கிறார்கள். இவர்களிடம் நூறு ரூபாய்க்கு (சில்லரைக்கு) ரூ.120 வரை கொடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் ரூ.125 வரை கொடுக்க வேண்டுமாம். தெற்கு மும்பை வி.எச்.பி, சிவசேனா வியாபாரிகள் நாணயங்களை அச்சிட்டு சந்தையில் வெளியிட்டுள்ளார்கள் எம்.கே.வி. என்ற வியாபாரிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். வி.எச்.பி., சிவசேனா வியாபாரிகள்தான் இந்த நாணய அச்சடிப்பு வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மதிப்புள்ள சுமார் 50 ஆயிரம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
நாணயத்தின் ஒரு பக்கத்தில் சங்கத்தின் பெயரான எம்.கே.வி.யின் சின்னமும் உள்ளது. அடுத்த பக்கத்தில் நாணயத்தின் மதிப்பு இடம்பெற்றுள்ளது.
Subscribe to:
Posts (Atom)