அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, March 25, 2012

ஆபாச பட சர்ச்சை - காங்கிரஸ் வெளியிட்டது புதிய வீடியோ !!

குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்து சிக்கிய விவகாரத்தில் தடய அறிவியல் துறை சம்பந்தப்பட்டவர்களின் கைக்கணினியில் ஆபாசபடம் ஏதுமில்லை என்று கூறியதன் எதிர்வினையாக ஆபாச படம் பார்த்ததற்கான புதிய ஒளிப்பட ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவை தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திலும் ஆளும் பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை வெடித்தது. சட்டசபை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, 2 பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தங்களது கைக்கணினி - ஐபேடில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்னையை எழுப்பி சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் குறித்து உரிமைக் குழு விசாரணைக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார்.


 மேலும் சட்ட மன்ற உறுப்பினர்களின் கைகணினி (ஐ பேட்) கைப்பற்றி தடய அறிவியல் சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

தடய அறிவியல் துறையினரின் அறிக்கை, சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்களின் ஐபேடில் ஆபாச படங்கள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கை உண்மையில்லை என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சர்ச்சைக்கு ஆளான பாஜ எம்எல்ஏ ஜெதா பர்வாத், சட்டசபையில் வைத்து அவரது ஐபேடில் அழகிகளின் படத்தை பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை காட்டி, தடய அறிவியல் சோதனையின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரசார் கேள்வி எழுப்பினர். மேலும் சோதனைக்கு அனுப்பப்பட்ட கைகணினிகள் (ஐபேடுகள்) குறித்தும் சந்தேகம் எழுப்பிய அவர்கள், முதல்வர் நரேந்திர மோடி அரசின் பொய்முகம் அம்பலப்பட்டதாகக் கூறினர்.


No comments: