வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும்காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒருவசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம்உண்டா... ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும்,ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்துஎதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்தவசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோநமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்தவசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்தமலர்களுக்குப் பெயர் நோன்பு.
தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும்ஆழமாக இறைவனிடமும், உலகப் பார்வையாளர்கள் முன்பும்பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக் கூடஒதுக்கி வைத்து விட்டு பட்டினிக் கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும்அற்புதம் நிகழும் மாதம்.
இன்று நேற்றல்ல..
வருடந்தோரும் வரும் இந்த வசந்தம் துவங்கி சில நூறுஆண்டுகளோ, அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோ ஆகவில்லை.இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன்நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியஅடியார்கள் என்றைக்கு இந்த பூமியில் வாழத் துவங்கினார்களோஅவர்கள் காலத்திலிருந்து துவங்கியது இந்த வசந்தம்.
நோன்பு என்றால் என்ன?
மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்குஎவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறுமுயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில்இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமேஉணரும் காரியமாகும் இது.
பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.
வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.
தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகிஓடுகின்றன.
பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும்மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால்மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.
பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம்வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின்பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.
நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்புவைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றுஇறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரிமுஸ்லிம் திர்மிதி)
நோன்பு எதற்கு?
பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தைபலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவேபடைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காகஇறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்கஇறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால்மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோஅர்த்தமோ தவறானதாகும்.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்புவிதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்புகடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆகவேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)
மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன்தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழுபயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் - ஓரிறைநம்பிக்கையாளர்கள் - பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள்அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றியநம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்றபயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றியநம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போதுஅவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை.அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.
இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த - அனுமதிக்கப்பட்ட -உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர்தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள்என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால்அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில்வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்துஅவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம்அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன்வழியாக பிறரும் நிம்மதியும் - உதவியும் பெறுகிறார்கள்.
வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும்இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள்பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்
வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சிலமருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்துஅவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும்வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும்கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்தசந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோஅதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்துஅதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.
தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும்என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்றஉலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்கதுவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கிவிட வேண்டும்.
ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்புஉண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன்கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விடவேண்டும்.
தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும்குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ -ஆடம்பரத்திலோ - சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்துவைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றைகட்டுப்படுத்த வேண்டும்.
இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும்,குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக்குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்லஉதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வரதுவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம்அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன்பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கைஇயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல்பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்தபயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்னவசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள்தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம்நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக்கொடுக்கும்.
இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும்

No comments:
Post a Comment