ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் சுலாவேஸி தீவில் உள்ள சோபுடன் மலையில் எரிமலை இன்று அதிகாலை 6 மணியளவில் சீற்றத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்திற்கு எரிமலை சாம்பல் பரவியது.எரிமலையை சுற்றியுள்ள எட்டுகிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கடந்த 2008-ல் இதே மலையில் வெடித்துச்சிதறிய எரிமலையால் அதிக புகை வெளியேற்றப்பட்டது. இருப்பினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தீவுகளை அதிகம் கொண்டுள்ள இந்தோனேஷியாவில் 129 க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.
No comments:
Post a Comment