அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 7, 2012

என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்ஸ்......

நாம் என்கௌன்டரை ஆதரிக்க ஆதரிக்க அவர்கள் ஹீரோயிஸ மனநிலைக்கு ஆட்படுகிறார்கள் அது அவர்களை தாங்கள் செய்வதெல்லாம் சரி என்ற மனநிலைக்கு மாற்றிவிடுகிறது இறுதியில் அவர்கள் அவர்கள் அறியாமலேயே மூர்க்கத்தனமான மனநிலைக்கு மாற்றப்படுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்



என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்ஸ்......

1.தயாநாயக் (வயது 45)
என்கௌன்டர் எண்னிக்கை - 83
குற்றச்சாட்டு - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார்
தற்போது
2006லிருந்து பணிநீக்கம் வழக்கு முடிவடைந்த நிலையில் மீண்டும் பணிக்காக காத்திருக்கிறார்

2.பிரதீப் ஷர்மா (வயது 51)
என்கௌன்டர் எண்னிக்கை - 112
குற்றச்சாட்டு - நிழல் உலகுடன் தொடர்புடையவர்
தற்போது
2006ல் கைது செய்யப்பட்டு தானே சிறையில் அடைக்கப்பட்டார்
2008லிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்

3.அஸ்லாம் மோமின் (வயது 30)
என்கௌன்டர் எண்னிக்கை - 30
குற்றச்சாட்டு - நிழல் உலகுடன் தொடர்புடையவர்
தாவுத் சகோதரருடன் இவரது பேச்சு பதிவு செய்யப்பட்டுள்ளது
தற்போது
2005ல் பதவிநீக்கம் செய்யப்பட்டார்

4.ரவீந்தரநாத் ஆங்ரே (வயது 55)
என்கௌன்டர் எண்னிக்கை - 52
குற்றச்சாட்டு - மகேஷ் வாங்கே என்ற பில்டரை சுட்டது இந்த பில்டரிடம் ஆங்ரே பணம் பறித்த்தாக குற்றச்சாட்டு
தற்போது
2008ல் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்துள்ளார் பணியில் சேர காத்திருக்கிறார்
(இந்தியாடுடேயிலிருந்து )

No comments: