2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரரும்திமுக மாநிலங்களைவை உறுப்பினருமான கனிமொழி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு நேற்று வந்த போது, அவருக்குத் துணையாக அவரது தாய் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தனர்.
அச்சமயம் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வந்து ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கினார். ராஜாத்தி அம்மாள் இருக்கைக்கு அருகே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா, ராமலிங்கம், ஏ.கே.எஸ். விஜயன், ஹெலன் டேவிட்சன், தாமரைச் செல்வன், வசந்தி ஸ்டான்லி, செல்வகணபதி மற்றும் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்
நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மதிய உணவுக்காக ராஜாத்தி அம்மாள் தமிழ்நாடு இல்லம் திரும்பினார். தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதால் கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோர் மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மதியம் நீதிமன்றத்தில் வந்து இருந்தார்கள். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை 14 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி ஓ.பி. சைனி கூறினார்..

No comments:
Post a Comment