அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் அரபி மொழி ஆசிரியராக வேலை பார்ப்பவர் மசூதுர் ரஹ்மான். இவரும் இவரது மற்றொரு முஸ்லிம் மதகுரு நண்பரும் கரோலினா
என்ற இடத்திற்கு செல்வதற்காக அட்லாண்டிக் சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த வெள்ளி அன்று விமானத்தில் ஏறச் செல்லும்போது அவர்கள் அதில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானத்தின் பைலட் அவர்களை ஏற்றுவதற்கு உத்தரவு அளிக்காததால் அவர்கள் அதில் பயணிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்டா ஏர்லைன்ஸில் மாற்று டிக்கெட் கொடுக்கப்பட்டு அதில் பயணம் செய்தனர்.
இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தைச் சார்ந்த ஆலன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தாடி வைத்திருந்தால் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க பைலட்கள் மறுப்பது முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment