உஸாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிபர் ஒபாமா அறிவித்த பின்னர் அது பற்றிய சர்ச்சைகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பாகிஸ்தான் மக்களிடம் ஏற்பட்டுள்ள கோபத்தை குறைக்கும் விதமாக அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர் பதவி விலகுவார் எனத் தெரிகிறது.
ஒன்றிணைந்திருந்த ரஷ்யாவிற்கு எதிராக போராட அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட உஸாமா பின்லேடன் பின்னர் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பவே அதுவே அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியானது. அவரை பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்று அவரது சடலத்தை கடலில் வீசிவிட்டதாக அமெரிக்க அறிவித்தது. இது செய்திக்கு பாகிஸ்தான் எவ்வித மறுப்பும் கொடுக்காததால், உலக நாடுகளிடையே இது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. காரணம் உஸாமா பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் மறுத்து வந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளதால், பாகிஸ்தான் தொடர்ந்து பொய் தகவலையே உலகுக்கு கூறி வந்திருக்கிறது என்று தெரிகிறது.
இதற்கிடையில் உஸமா பின்லேடன் தங்கியிருந்ததாக அமெரிக்காவால் கூறப்படும் இடம் அபோட்டாபாத் நகரில் ராணுவ அலுவலகம் இருக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால் உஸாமா பின்லேடன் இங்கு இருந்தது தங்களுக்கு தெரியாது என்று உளவுத்துறை தலைவர் ஷீஜா பாஷா கூறியது எவ்விதத்திலும் நம்பும் படியாக இல்லை. இதனால் பாகிஸ்தான் நாட்டு மக்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ராணுவம் மற்றும் உளதுத்துறையின் மீது கடும் கோபத்தில் இருக்குகிறார்கள்.
எனவே, சர்வதேச நாடுகளை சமாதானப்படுத்தவும் பாகிஸ்தான் மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்கவும் உளவுத்துறையின் மீது பாகிஸ்தான் அரசாங்கம் பழி சுமத்த ஆரம்பித்துள்ளது. எனவே விரைவில் உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து ஷீஜா பாஷா விலகுவார் எனத் தெரிகிறது. ஆனால் எப்போது விலகுவார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

No comments:
Post a Comment