நடிகையுடன் தகாத உறவு கொண்ட போலிச்சாமியார் நித்தியானந்தாவின் சொற்பொழிவு மற்றும் தியான முறைகளை விளக்க மலேசியாவில் அமைக்கப்பட்ட கிளை ஆசிரம மையம் அதன் செயல்பாடுகளை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.
தமன் தேச கொம்பாக் என்ற மையம் நித்யானந்தாவின் போதனைகள் மற்றும் தியான முறைகளை மலேசியாவில் பரப்பி வந்தது. அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து மலேசியாவில் உள்ள இந்து சங்கம் இந்த மையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கோரியது. இது தொடர்பாக இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பேசும் போது, "இந்த ஆசிரமம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து பக்தர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து தாற்காலிகமாக இந்த ஆசிரமத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக ஆசிரமத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
No comments:
Post a Comment