காபூல்:ஆப்கானில் அமெரிக்கா போராளிகளை உருவாக்கிவிட்டு அவர்களுக்கெதிராக போரையும் நடத்துகிறது இதன் மூலம் இரட்டை அஜெண்டாக்களை அவர்கள் செயல்படுத்துகிறார்கள் என்றும் அதில் அவர்களுக்கு தெளிவான லட்சியமும் இருக்கிறது என்று ஆப்கானிஸ்தானிற்கு அதிபரான பிறகு முதல் முறையாக வருகைப்புரிந்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.
ஆப்கானில் அந்நிய ஆக்கிரமிப்புப்படையின் பங்களிப்பை அஹ்மத் நிஜாத் கடுமையாக எதிர்த்தார். அவர்களால் ஒருபோதும் சமாதானத்தை கொண்டுவர முடியாது, மாறாக ஸ்திரமற்றத் தன்மையைத்தான் அவர்களால் உருவாக்க முடியும் என்று ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயிடனான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
ஆப்கானின் புனர் நிர்மாணத்திற்காக அரசுக்கும், மக்களுக்கும் உதவுவதே எங்களது நோக்கம். அவ்விஷயத்தில் எங்களது சகோதர அணுகுமுறை தொடரும். தாலிபான்களுக்கு ஈரான் பணமும், உதவியும் அளித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸின் குற்றச்சாட்டை மறுத்த அஹ்மத் நிஜாத் பாதுகாப்பின் பெயரால் ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்குபவர்களுக்கு அவ்வாறு கூற இயலும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment