மெக்ஸிகோ சிட்டி: உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெறுகிறார் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம்.
ஒரு சாதாரண பெட்டிக் கடைக்காரராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் படிப்படியாக மெக்ஸிகோவின் தொலைபேசி ராஜாவாக முன்னேறினார். இன்று 53.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஸ்லிம்.
கடந்த 15 ஆண்டுகளாக வெளியாகி வரும் ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரர் பட்டியலில் வளரும் நாடுகளிலிருந்து முதலிடம் பெற்ற முதல் கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம்தான்.
பெரும் பணக்காரர் என்றாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்பவர் ஸ்லிம். கோட் சூட் போடுவதே அரிதாகத்தானாம். தன் நிறுவனத்தின் கம்ப்யூட்டரைக் கூட அவர் பயன்படுத்துவதில்லையாம். பழைய ஸ்டைலில் இன்னமும் காகிதக் குறிப்பேடும் போனாவும்தான் அவரது விருப்பமான எழுதுபொருள்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பெரும்பான்மைப் பங்குகளையும் இவர்தான் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் ஸ்லிம்முக்கு போனதன் மூலம் அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ், வாரன் பஃப்பே ஆகியோர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அவர்கள் சமீப காலமாக வாரி வழங்கி வரும் நன்கொடைகள் கூட காரணமாக இருக்கலாம் என்கிறது ஃபோர்ப்ஸ். 2010-ல் பில்கேட்ஸ் 2வது இடத்தையும், பஃப்பே மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment