அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

சட்டத்தின் மறைவான கரம்


அதிகாரப்பூர்வ ஆதரவுடன், மும்பையின் தேசப்பற்று தாதா நடத்திய சமீபத்திய கொலைகளைப் பற்றி விவரிக்கிறார் பத்திரிகையாளர் ராணா அய்யூப் அவர் தனது அறிக்கையில் கூறுவதாவது: 1993 மும்பை குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட 7 கைதிகள் ஜாமீனில் வெளியே வந்திருந்த போது, தாங்கள் தான் அவர்களை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் தந்தவன். 1998ல் இந்திய உளவுப்படையின் கோரிக்கைக்கு இணங்க நேபாளிய எம்.பி.மிர்சா தில்சாத் பெக்கை இவன் கொலை செய்தது நாடறிந்த உண்மை. அந்த நிழலுக தாதாதான் சோட்டா ராஜன்.

மிர்சா தில்சாத் பெய்க் தனது நிழலுக தொடர்பினால் உளவுப்படைக்கு பெரும் சவாலாய் இருந்து வந்தார். இவரை கொலை செய்ய உளவுப்படை சோட்டா ராஜனின் கூலிப்படையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது. பேங்காக்கில் 2000ம் ஆண்டில் சோட்டா ராஜனை தாவுத் இப்ராஹிம் கும்பல் கொலை செய்ய முயற்சித்ததின் மூலம் உளவுத்துறைக்கும் சோட்டா ராஜனுக்குமிடையே உறவு ஏற்பட வழிவகுத்தது. இதன் மூலமாக சோட்ட ராஜன் தாவுத் படையை சுலபமாக அழித்தொழிப்பது மட்டுமல்லாமல் தேசப்பற்றாள தாதாவாகவும் தனது இமேஜை மாற்றியமைத்தான்.

கடந்த பிப்ரவரி 7ம் தேதியன்று மிர்சா பெய்கின் கூட்டாளியும் மற்றும் நேபாளிய தொலைகாட்சியின் உரிமையாளருமான ஜாமின் ஷா கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதி ஷஹித் ஆஸ்மி மனித உரிமை மற்றும் கிரிமினல் வக்கீலும் கொல்லப்பட்டார். இன்னும் பிப்ரவரி 13ல் ஆசிஃப் கான் என்ற ஆசிஃப் தாதியை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டும் ஆசிஃப் உயிர் பிழைத்தார். இக்கொலைகளை சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான பாரத் நேபாளி பொறுப் பேற்றிருந்தாலும், ஆசிஃப் தாதியின் கொலை முயற்சி பின்னனியில் தாவூத் எதிராளிகளின் கை ஓங்கி இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால் கிரிமினல் கும்பல்கள் தன் தேசப்பற்றை வெளியிடும் வண்ணம் உளவுத்துறையின் எதிரிகளை கொலை செய்வதின் மூலம் அவர்கள் நல்லவர்கள் ஆகிவிடுகின்றனர் அல்லது கருதப்படுகின்றனர்.

பிற சில வழக்குகளில் சோட்டா ராஜனின் கும்பலுக்கும் உளவுத்துறைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜாமின் ஷாவின் கொலையை ராணுவ உளவுத்துறையின் தூண்டுதலின் பெயரில் தான் நடத்தப்பட்டதாகவும் சோட்டா ராஜனின் கூலிப்படையினர் தெரிவிக்கன்றனர்.

கொலை நடந்த இரவன்று பாரத் நேபாளி, ஜாமின் ஷா அலுவலகத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு "யார் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டாலும் இதே கதிதான்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளான். நான்கு நாட்களுக்கு பிறகு ஃபஹிம் அன்சாரியின் வழக்கில் போலீசின் பொய் குற்றச்சாட்டை நீதி மன்றத்தில் வெளிப்படுத்திய ஆஸ்மி கொலை செய்யப்பட்டார். இதற்கும் பாரத் நேபாளி பொறுப்பேற்றான்.

சோட்டா ராஜனின் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒருவர் கூறுகையில், கொலை நடந்த தினத்தன்று பாரத் நேபாளி மும்பையில் உள்ள திலக் நகரில் சோட்டா ராஜன் வீட்டிற்கு அருகில் தான் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து போலீஸ் கமிஷ்னர் ராகேஷ் மரியா பதில் அளிக்க மறுத்துவிட்டார். பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிக்கபட்ட 3 குற்றவாளிகள் என்று கூறப்படும் ரவி பூஜாரி, பாரத் நேபாளி மற்றும் சந்தோஷ் ஷெட்டி, இவர்கள் அனைவரும் சோட்டா ராஜனின் பழைய ஆட்களாக அல்லது சொந்த கூலிப் படையினாராகவும் இருக்கலாம் என்றார்.

ஜாமின் ஷா மற்றும் ஆஸ்மியின் கொலையில் முக்கிய பங்காற்றிய பாரத் நேபாளி, 2000ம் ஆண்டில் சோட்டா ராஜனால் மாஃபியாவில் சேர்கப்பட்டவராவார். சில காலமாக உளவுத்துறை சோட்டா ராஜனை இந்தியாவுக்கு திரும்புமாறு வலியுறுத்தி உள்ளது. ஆனால், ராஜனோ தன் மனைவி சுஜாதாவின் மேல் MCOC actடின் கீழ் வழக்கு இருப்பதால் இந்தியா வருவதை அவர் தவிர்த்து வருகிறார்.

மேலே குறிப்பிட்ட பல காரணங்கள் இருந்தாலும், சோட்டா ராஜன் தான் இரு கொலைகளுக்கும் ஏற்பாடு செய்ததாக கருதினாலும், இக்கொலைகளில் தனது பங்கினை அவன் தொடர்ந்து மருத்தவனாகவே உள்ளான் என்று ரானா அவர்கள் தன் கட்டுரையை முடித்துள்ளார்கள்.

இக்கட்டுரையை சற்று கூர்ந்து பார்த்தால் பல, கீழே குறிப்பிடப்பட்டுள்ள திடிக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன:-

ஆஸ்மியை உளவுத்துறையே முன்னின்று சோட்டா ராஜன் அல்லது பாரத் நேபாளி கூலிப்படையினரை ஏவி கொலை செய்துள்ளது என்று தெரியவருகிறது.

ஆஸ்மியின் கொலை மட்டுமல்லாமல் ஜாமின் ஷா கொலையையும் மற்றும் ஆஸிப் கானின் கொலை முயற்சியினை யார் தூன்டுதலின் பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது? என்ற கேள்வியும் எழுகிறது.

இது மட்டுமல்லாமல், சோட்டா ராஜனை உளவுத்துறை இந்தியாவுக்கு அழைகப்படுவதை கண்டால், மேலும் யாரையும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற அதிர்ச்சிகரமான கேள்வியும் எழுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நீதியை நிலைநாட்டி, சட்டத்தின் முன்னால் உண்மையான குற்றவாளிகளை நிறுத்த முயன்ற கர்கரே, ஆஸ்மி போன்ற நீதியாளர்களை மக்களை காப்பாற்ற வேண்டிய உளவுத்துறையே கூலிப்படையினரை ஏவி முன்னின்று கொலையை கச்சிதமாக முடித்ததோடு மட்டுமல்லாமல், கொலையாலிகளை பிற குற்றங்களிலிருந்து தப்பிக்க வழிவகை செய்கின்றது என்றால் நீதியின் தராசு அநீதியின் பக்கம் சாயவில்லை மாறாக கவிழ்ந்தேவிட்டது என்றே கூறலாம்.

No comments: