அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

பன்னாட்டுபடை ஆப்கானை விட்டு வெளியேர வேண்டும் ஈரான் அறிவிப்பு



ரஸ்யா ஆப்கானை ஆக்கிறமித்திருந்த சமயத்தில் அமெரிக்காவினால் புனிதப் போராளிகள் என்று வர்ணிக்கப்பட்ட தாலிபான்கள் இப்பொழுது அமெரிக்காவுக்கு திவிரவாதிகளா? என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்: அமெரிக்காவின் முன்னால் ஆதரவாளர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் திவிரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது என்று அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆப்கன் அதிபர் கர்சாயுடன் கூட்டாக அமர்ந்து செய்தி மாநாடொன்றில் மஹ்மூத் அஹமதி நிஜாத் இதை கூறியுள்ளார், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி் திரும்ப வேண்டுமானால், அமெரிக்க தலைமயிலான பன்னாட்டு கூட்டு ராணுவம்(nato) ஆப்கானை விட்டு வெளியேற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தாலிபன்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது வெளிநாட்டு வற்புறுத்தல்கள் எழுந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: