சத்யம் வாடிக்கையாளர்கள் தொடர்பு - டிசிஎஸ் தகவல் | | | |
Monday, 19 January 2009 21:15 |
புதுடெல்லி - சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருப்பதாக டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம் கூறியுள்ளது. சிக்கலில் உள்ள சத்யம் வாடிக்கையாளர்களை தாங்கள் தேடிச் செல்லவில்லை என்றும் ஆனால் அவர்களாகவே தங்களை தொடர்பு கொண்டிருப்பதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாதேவன் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சத்யம் முறைகேடு அம்பலமானதைத் தொடர்ந்து அதனுடனான உடன்பாட்டை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வாடிக்கையாளர்கள் சிலர் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவற்றுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதில் டிசிஎஸ் அதிக பலனடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யம் நிறுவனத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மகாலிங்கம் கூறினார். |
No comments:
Post a Comment