Counterfeit Card உஷாரய்யா உஷாரு!
இப்போ எல்லாம் Credit Card இல்லாதவங்க ரொம்ப கம்மி தான். அது இல்லாத சிலர் கூட தேவை இல்லாத பயத்தால தான் வாங்காம இருக்காங்க. ஆனா உண்மையில் அது ரொம்பவும் உபயோகமானது தான். அதுல முக்கியமான மேட்டர் இன்னான்னா.. நம்ம மனசும் கட்டுப்பாடா இருக்கோனும். சரி மேட்டர்க்கு வரேன். இந்த கடன் அட்டைகளை பல வகையிலும் மக்கள் தவறா பயன்படுத்திட்டு இருந்தாங்க. இப்போ புது மாதிரி பயன்படுத்தறாங்க.
அதாவது... ஒரு வகை நவீன கருவி பயன்படுத்தி நமது Debit Card அல்லது Credit Cardஐ Scan செய்து அதன் காந்த காகிதத்தில் உள்ள ரகசிய குறியீடுகளை கண்டுபிடித்து அதே போல் வேறு அட்டை தயாரித்து பயன் படுத்துகிறார்கள். இந்த முறைகேடான அட்டைக்கு Counterfeit Payment Card என் பெயர். இதை வணிக மையங்களில் பயன்படுத்தி பொருட்களை வாங்கி விட்டு நம் தலையில் கை வைக்க வைத்துவிடுகிறார்கள். கடன் அட்டை எண்ணை திருடி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கினால் கண்டுபிடிப்பது சுலபம். அதில் பொருளை ஒப்படைக்க அவர்கள் விலாசம் கொடுத்தே ஆகவேண்டும். ஆகவே அதை வைத்து சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அதே போல் கடன் அட்டையை திருடி பயன்படுத்த முயன்றால், திருட்டு கொடுத்தவர் சம்பத்தபட்ட நிறுவனத்தில் புகார் அளித்து அட்டையை செயல் இழக்கச் செய்ய முடியும். ஆனால் இந்த மாதிரி போலி அட்டைகளை வைத்து நேரடியாக பொருட்களை வாங்கும் போது சரியான முகவரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே கண்டுபிடிப்பது கடினம். கிட்டத்தட்ட கண்டுபிடிக்கவே முடியாது என்றே சொல்லலாம். ஆகவே இப்போது இந்த மாதிரி போலியாக தயாரித்த அட்டைகளின் மூலம் நடக்கும் முறைகேடுகள் மிக வேகமாக பரவி வருகிறது.
சரி... Credit Card or Debit Card தான் நம்ம கிட்ட தானே இருக்கும். அத எப்படி யாரோ ஒருத்தர் ஸ்கேன் பண்ண முடியும்னு உங்களுக்கு தோனும்.... அதான் இருக்கவே இருக்கோமே சோம்பேரிகளும் வெத்து பந்தா வீராசாமிகளும். ஹோட்டல் போய் பெயர் தெரியாத கண்டதையும் சாப்ட வேண்டியது. அது சில நூறுகள் அல்லது சில ஆயிரங்களில் வந்து நிற்கும்... சாப்டு முடிஞ்சதும் சேவையாளர் பில் குடுத்ததும் அவரிடமே க்ரெடிட் கார்ட் குடுத்து விடுவோம். பெட்ரோல் போட்டாலும் இதே நிலை. பெட்ரோல் போட்டவர்டமே கார்டை குடுத்து விடுவோம். கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை(CVC-Card Verification code) குறித்து வைத்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் குடுப்போம். நம் அட்டையை ஸ்கேன் எடுக்க இந்த சந்தர்ப்பம் போதுமே..இப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் போலி அட்டைகளை தயாரிக்கிறார்கள்.
ஆகவே மக்களே.... உங்கள் கடன் அட்டையை எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் குடுக்காதிங்க. பணம் செலுத்தும் இடத்திற்கு நீங்களே சென்று கடன் அட்டையை குடுத்து உங்கள் முன்னிலையில் பயன்படுத்தும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அது கடையோ ,ஹோட்டலோ, பெட்ரோல் பங்கோ.. எதுவாக இருப்பினும்...
சில டிப்ஸ்....
1. Credit Card Billing தேதியை உங்கள் வசதிக்கு ஏற்ப முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த தேதியில் பணம் வருமோ அந்த தேதியில் பில் வரும் படி மாற்றிகொள்ளுங்கள்.
2. க்ரெடிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்கும் போது வரும் பில்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். கார்ட் பில் வந்ததும் அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
3.மிக முக்கியம். கண்ட நாட்களிலும் கடன் அட்டையை பயன்படுத்தாதிங்க. உங்கள் பில்லிங் தேதியில் இருந்து 5 நாட்கள் வரையில் மட்டுமே பயன்படுத்டுங்க. அப்போ தான் பணம் செலுத்த அதிக நாட்கள் கிடைக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் 55 நாட்கள் வரை அவகாசம் தருகிறார்கள். உதாரணத்திற்கு .... உங்கள் பில்லிங் தேதி 1 - 30 என்று வைத்துக் கொள்வோம். 1ம் தேதியில் இருந்து பணம் செலுத்தும் நாள் கணக்கிடப் படும். 1ம் தேதியில் இருந்து 55 நாட்கள் என்றால் அடுத்த மாதம் 25ம் தேதி போல் உங்களுக்கு Due Date வரும்... அது.. நீங்கள் 1ம் தேதி வாங்கி இருந்தாலும் சரி அல்லது 30ம் தேதி வாங்கி இருந்தாலும் சரி. ஆகவே நீங்கள் 1 முதல் 5ம் தேதிக்குள் அட்டையை பயன்படுத்தினால் 50 முதல் 55 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கும். ஒரு வேளை 25 அல்லது 30ம் தேதி பயன்படுத்தினால் 30 முதல் 25 நாட்கள் வரை தான் அவகாசம் கிடைக்கும். அதுவே 40 நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கும் வகையிலான கடன் அட்டையாக இருந்தால் 10 அல்லது 15 நாட்கள் தான் அவகாசம் கிடைக்கும். ஆகவே ப்ளான் பண்ணாம எதையும் பண்ணப்படாது.
4. அதிக கடன் வசதிக்கு ஆசைப்பட்டு கோல்ட் , ப்ளாட்டினம் கார்டிகளை வாங்காமல் குறைந்த கடனே அளிக்கும் கட்டணம் வசூலிக்காத இலவச அட்டைகளையே வாங்கலாம்.
5. கடைகளில் அட்டையை பயன்படுத்துவதற்க்கு முன்னால் அதற்கு சர்வீஸ் சார்ஜ் எவ்வளவு வசூலிப்பார்கள் என்பதை கேட்டுவிடுங்கள். பெரும்பாலும் 2% இருக்கும். இது அனாவசிய செலவு. நாம் வாங்குவது பெரும் தொகையாக இருந்தால் சர்வீஸ் சார்ஜ் அதிகமாக இருக்கும் அதற்கு பணம் கொடுத்தே வாங்கிவிடலாம்.
6. சில வணிக மையங்களில் சலுகைகளும் உண்டு. 5% வரை Cash Back கிடைக்கும். சில அட்டைகளுக்கு வட்டி இல்லா தவணைகளும் உண்டு. கூச்சப் படாம இதை எல்லாம் விசாரிக்கனும். பணம் சம்பாதிப்பதை விட அதை சரியாக பயன் படுத்துவது தான் சாவாலான் விஷயம்.
7. கடைசி தேதிக்கு 4 நாட்கள் முன்பே காசோலை செலுத்த சொல்வார்கள்.சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி தேதி அன்று தான் காசோலை குடுக்க முடியும். அதற்கு கடன் அட்டை நிறுவனம் கட்டணம் வசூலிக்கும். அதை கொடுக்காதிங்க. சண்டை போடுங்க. 4 நாட்களுக்கு முன்பே கொடுக்க வேண்டும் என்றால்.. அவர்கள் அவகாசமாக தரும் நாட்களுக்கு என்ன கணக்கு இருக்கு? அது 4 நாட்கள் குறைத்தது போல் ஆகாதா? ஆகவே இதை சொல்லி வாதம் பண்ணுங்க. அந்த கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கு. நான் பல முறை இப்படி பயன் பெற்று இருக்கிறேன்:))....
கொசுறு:
.............கடன் அட்டையை வைத்து பணம் கூட சம்பாதிக்கலாம். என் பில் தேதியில் இருந்து சில நாட்கள் கழித்து என் அட்டையை பயன்படுத்தி கொஞ்சம் Pure Gold வாங்கினேன். எனக்கு பில் கட்ட வேண்டிய நாள் அடுத்த மாதம் முதல் வாரம் தான். ஆனால் நான் வாங்கிய தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இப்போது அந்த தங்கத்தை விற்றால் எனக்கு கனிசமான பணம் மிஞ்சும். எந்த முதலீடும் இல்லாமல். இது எப்படி இருக்கு? :))
........ டிஸ்க்ரிப்ஷன் : இந்த பதிவு இதை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். இந்த பதிவு தொடர்பான உருப்படியான தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. இன்னும் தெரிஞ்சிக்கலாம்னேன்... என்ன நாஞ்சொல்றது? சரிதானே.. :P
No comments:
Post a Comment