அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் அடுத்த மாதம் 10 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள்

சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தில் அடுத்த மாதம் 10 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள்


புதுடெல்லி, ஜன.9-

மோசடி புகாருக்கு உள்ளான `சத்யம் கம்ப்ïட்டர்ஸ்' நிறுவனம், அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்யும் என்று `ஹெட்ஹன்டர்ஸ் இன்டியா' என்ற பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தலைவர் கிரிஸ் லட்சுமிகாந்த் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

சம்பளம் கொடுப்பதற்கே, சத்யம் நிறுவனத்திடம் பணம் இல்லை. எனவே, அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்படக்கூடும். உபரியாக சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதால், சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்படக்கூடும். இவற்றை எல்லாம் எதிர்பார்த்து, சத்யம் நிறுவன ஊழியர்கள் வேறு நிறுவனத்துக்கு முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலைவரை, சத்யம் ஊழியர்கள் 7,800 பேர் வேலைவாய்ப்பு இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். புதன்கிழமை பிற்பகலுக்குள் இந்த எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

பண நிலைமை திருப்திகரமாக இல்லை என்று சத்யம் நிறுவனத்தின் இடைக்கால தலைவர் ராம் மைனாம்பதி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையே, ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐ.டி.-பிபிஓ சங்கம் அறிவித்துள்ளது.

No comments: