அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

கல்வித் துறையில் இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும்

கல்வித் துறையில் இஸ்லாமியர்கள் முன்னேற வேண்டும்


தென்காசி, ஜன. 18: கல்வித் துறையில் இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது கவலையளிக்கிறது. அவர்கள் முன்னேற முயல வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.

தென்காசியில் மதுரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அல்ஹிதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.செய்யது சுலைமான் தலைமை வகித்தார். இமாம் கே.கே. காதர் ஒலி முஸ்தபா இறைவணக்கம் பாடினார்.

புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து மத்திய இணை அமைச்சர் இ.அகமது பேசியதாவது:

கல்வி கற்க வேண்டியது முக்கிய கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால், இஸ்லாமிய சமுதாயம் கல்வித் துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது கவலையளிக்கிறது.

தென் மாநிலங்களைக் காட்டிலும், வடமாநிலங்களில் கல்லூரி மற்றும் பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மதரஸôக்களில் பொதுக் கல்வியை கொண்டுவந்து பயன்பெற வேண்டும் என்றதால், தற்போது மதரஸôக்களில், குறிப்பாக மகளிர் உயர்கல்வி பெறும் வாய்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் உயர்கல்வி பெறவேண்டும் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, சச்சார் கமிட்டி பரிந்துரையின்படி, இஸ்லாமியர்கள் உயர்கல்வி பெற உதவித் தொகை வழங்குகிறது. இதனால் 30 ஆயிரம் பேர் நேரடியாகப் பயனடைகின்றனர். சிறுபான்மை இன மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு சாலை, சுகாதாரம், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளம். அரசின் திட்டங்கள் மூலமாக மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது. நாமே நமக்கு உதவும் திட்டங்களைத் தீட்டி முன்னேற முயற்சி மேற்கொள்ள வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் காலத்திற்கு ஏற்றவகையில் நாமும் பின்பற்றிச் செல்ல வேண்டும்'' என்றார் அவர்.

விழாவில் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலர் காதர்முகைதீன் எம்.பி., அப்பாத்துரை எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், கலீலூர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாளர் செய்யது அஹமது, தொழிலதிபர்கள் பி.இராமலிங்கம், அழகராஜா, ஜின்னா, நகர்மன்றத் தலைவர் ரஹீம், தென்காசி நகர்மன்ற துணைத் தலைவர் இப்ராகீம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

பயிற்சி நிறுவன தாளாளர் எம். எஸ்.துராப்ஷா வரவேற்றார். மசூது அஹமது நன்றி கூறினார்.

No comments: