கொடூரமான வெள்ளை அமெரிக்கா எகாதிபத்தியத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் உள்ளது என்பதை, ஓபாமா வெற்றி பற்றிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதல் ஏகாதிபத்திய நாட்டு மக்களும் கூட நம்பிகையுடன் ஓபாமாவை பார்க்கின்றனர்!
சிலர் உலகையே ஆளும் கறுப்பு இனத்தவரின் ஆட்சி என்கின்றனர். வேறு சிலர் சிறுபான்மையினத்தவரின் ஆட்சி என்கின்றனர். மற்றும் பலர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்கின்றனர்.
உலகில் ஒரு மாற்றம் வரும் என்று, குடுகுடுப்புக்காரன் மாதிரி பலரும் கருத்துரைக்கின்றனர். ஆளும் வர்க்கம் முதல் ஆளப்படும் வர்க்கம் வரை இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏகாதிபத்திம் முதல் மூன்;றாம் உலக நாடுகள் வரை இந்த எதிர்பார்ப்பில் மயங்கி நிற்கின்றனர். அனைத்து வர்க்கங்களும் இலகற்ற எதிர்ப்பார்ப்பில், எதோ மாற்றம் வரும் என்று நம்புகின்றனர். உலக ஊடாகவியல் இதற்கு எண்ணை வார்த்து ஊற்றுகின்றது. ஆம் உலகம் மாறப்போகிறது. எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்கின்றனர்.
ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் ஓரு சர்வாதிகார ஆட்சி என்பதை திரித்து விடுகின்றனர். புதிய தத்துவங்கள் கூடிய ஒரு திரிபை உருவாக்கும் வகையில், மனித விரோதிகள் தத்துவம் தயாரிக்க களத்தில் இறங்கிவிட்டனர்.
சரி உலகத்தில் அப்படி என்னதான் பிரச்சனை. ஜனநாயகமும், சுதந்திரமும் கொடிகட்டி பறப்பதாக பீற்றிக்கொள்ளும் உங்கள் இந்த சமூக அமைப்பில், என்னதான் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த சமூக அமைப்பை மெச்சியவர்கள் எல்லாம், மாற்றம் பற்றி ஆரூடம் கூறுகின்றனரே ஏன்?
ஓபாமாவே கூறுகின்றார் ''அமெரிக்க மக்களின் கவலைகளை தாம் கவனத்தில் எடுப்பதாகவும்" சரி அப்படி என்னதான் அமெரிக்கா மக்களின் கவலைகள்? சொத்தைக் குவித்தவனினதும், சொத்தை இழந்தவனிதும்; கவலைகள் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்!? ஓபாமா எந்தக் கவலையை, அதுவும் கவணத்தில் எடுப்பதாக கூறுகின்றார்!?
ஓபாமா கூறுகின்றார் ''கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க மக்கள் தற்போது சவால்களை எதிர்நோக்குகிறார்கள்" சரி என்னதான் சவால்கள் அமெரிக்கா எகாதிபத்தியத்துக்கு உண்டு? இவ்வளவு காலமும் இல்லாத, அமெரிக்க மக்கள் தற்போது சந்திக்கும் சவால்கள் தான் என்ன? இது ஏகாதிபத்திய எதிர்கொள்ளும் சவால்கள் என்பது தானே அர்த்தம்!
''தனது வெற்றியானது நாட்டில் மாறுதல் ஏற்படுவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது" என்கின்றார். மாற்றம் தான் என்ன? அதை மட்டும் அவர், அமெரிக்கா மக்களுக்கு சொல்லவில்லையே ஏன்? மக்களை நம்பாத சதியல்லவா!
''நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க" உள்ளதாக கூறுகின்றார். அப்படி உருவாக்கும் அந்த புதிய சமுதாயம் தான் என்ன? நம்பிக்கையுடன் நீதியுடன் கூடிய எது?
இப்படி பலவற்றை கூறி உலகையே எமாற்றிய ஓபாமா, அமெரிக்காவின் எகாதிபத்தியத் தன்மையா ஒழித்துவிடப் போகின்றார். உலகமயமாதலை கைவிட்டுவிடவ போகின்றரர்? உலகெங்கும் கொள்ளையடித்து செல்வதைக் குவித்து வைத்துள்ள அமெரிக்கா பணக்காரரின் சொத்தை தேசியமயமாக்கிய விடப்போகின்றார்!? அமெரிக்கா பணக்கார வர்க்கத்தன் சொத்தை பறித்து, அமெரிக்க எழைகளுக்கும் உலக எழைகளுக்கும் மீளப் பகிரவ போகின்றார்!
அப்படி இல்லை என்றால் என்ன தான் மாற்றம் உலகத்தில் வரும்? ஆனால் எங்கும் நம்பிகைகள் பிரமைகளுக்கு மட்டும் குறைவில்லை. மறுபக்கதில் ஓபாமா ''அரசால் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியாது என்றும், அதிபர் என்கிற வகையில் தாம் எடுக்கும் முடிவுகளும் கொள்கைகளையும் பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்கின்றார். அப்படி என்னதான் பலர் எற்றுக்கொள்ளாத மாற்றத்தை அவர் உருவாக்கிவிடுவார். வெனிசுலா போல் தேசிய கொள்கையா? வர்க்கமற்ற அமைப்பையா உருவாக்கப் போகின்றார்.
இப்படி எந்த இலகற்ற மாற்றத்தை நோக்கி உலகமும், ஓபாமாவும். எனது மனைவி எனக்கு அறிவுரை கூறனார், ஊருடன் ஓத்து ஆதாரித்து நிற்கும் படி. ஏன் எதிராக பார்க்க வேண்டும் என்கின்றார்!? இப்படித்தான் பலரும் கருத்துரைக்கின்றனர்.
சரி உலகத்துக்கு என்னதான் பிரச்சனை என்று தெரிந்தால் தானே, மாற்றத்தை பற்றி சொல்ல முடியும்;. அதை தெரிந்து கொண்ட, மாற்றத்தைப் பற்றி ஆரூடம் கூறுகின்றனர்? அப்படி என்னதான் பிரச்னை? சுதந்திரமும், ஜனநாயகமும் கொண்ட சுரண்டல் அமைப்பு உன்னதமானதாக கருதும் சமூக அமைப்பில் எதை மாற்றுவது!? ஒபாமா எதைத்தான் மாற்றுவர்!?
No comments:
Post a Comment