ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.
மிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும்;. அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.
இதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின், அதுவும் முடியாது. ஓபாமா ஆட்சியிலும் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பவன் அதைக் குவித்துக் கொண்டே இருப்பான், இழப்பன் இழந்து கொண்டு இருப்பான்;. இது இந்த சமூக அமைப்பின் சொந்தவிதி. அதாவது ஜனநாயகமும், சுதந்திரமும் என்று இந்த சமூக அமைப்பில் கூறப்படுவது, இழப்பையும் குவிப்பையும் அடிப்படையாக கொண்ட ஒரு சுரண்டல் சமூக விதியாகும். இதை அவர் மாற்றமுடியாது. இதை மாற்றுதற்காக அவர் தேர்வு செய்யப்படவில்லை.
அவர் தேர்வு செய்யப்பட்டது எதற்காக!? இதை மக்கள் மாற்றிவிடாத வண்ணம், அதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான். மாறாக பலர் இதை அவர் மாற்றிவிடுவர் என்று கனவு காண்கின்றனர் என்றால், பலரை கனவு காணவைக்கின்றனர்.
உலகில் உள்ள அனைத்து மக்களினதும் அடிப்படையான சமூகத் தேவையை ஓபாமா பூர்த்தி செய்துவிடுவார் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? இதற்காக பணக்கார வர்க்கம் குவித்து வைத்துள்ள செல்வத்தை, உலகெங்கும் உள்ள மக்களுக்கு பகிர்ந்துவிடுவரா எனின், இல்லை. சரி மாற்றம், மாற்றம் என்று எதைத்தான் உளறுகின்றீர்கள்!?
சிலர் ஈராக் சண்டையை நிறுத்துவது, அமெரிக்காவின் கெடுபிடி யுத்தத்தை தணிப்பதையே மாற்றம் என்கின்றனர். இவை அமெரிக்கா வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. உலகில் உள்ள செல்வத்தை அபாகரிக்க நடத்தும் கெடுபிடி யுத்தமும், பின்னைய தணிவும் மூலதனத்துக்கு அவசியமானது. இது மாற்றமல்ல, மாறாக மூலதனம் தான், அதை தெரிவு செய்கின்றது. யுத்தமும் தணிவும் அமெரிக்காவின் எகாதிபத்திய தன்மைக்கு அவசியமானது. அமெரிக்கா வரலாறு முழுக்க இதை நாம் காணமுடியும். அதை ஒபாமா செயதற்காகவே, ஆளும் வர்க்கம் தெரிவு செய்துள்ளது. வியட்நாம் யுத்தத்தையும் சரி, 1990 இல் ஈராக் யுத்ததையும் சரி, இப்படிதான் தம் புதிய முகங்கள் மூலம் யுத்தத்தை தணித்தனர். இன்று அமெரிக்கா எகாதிபத்தியம் இதற்காக, ஒபாமா என்ற கறுப்பு கோமாளியை நிறுத்துகின்றது. மாற்றம் பற்றியும், 'நம்பிக்கை மற்றும் நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்"குவது பற்றியும் உலகெங்கும் பிரமையை விதைக்கின்றனர்.
அவர் வைத்துள்ள பொருளாதார தீர்வை எடுங்கள். தேசிய உற்பத்திகளுக்கு அதிக வரிச்சலுகை என்கின்றார். இது எதைக்காட்டுகின்றது. இதுவா மாற்றம்!? இது சாரம்சத்தில் செல்வத்தை குவிக்க சலுகையும், மறுபக்கத்தில் உள்நாட்டில் வேலையைக் கொடுப்பதன் மூலம் வறுமையை மறைக்கமுடியும் என்று நம்புகின்றார். அதாவது வரிச்சலுகை மூலம் பணக்காரனை மேலும் பணக்காரனாக்குவதும், இதன் மூலம் எழையின் கோமணத்தை மூடிமறைக்க முடியும் என்று நம்புகின்றார். இப்படிதான் அவர் ''மற்றத்துக்கான" தீர்வுகளையும், ''நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை" உருவாக்குவது பற்றிய கனவை விதைக்;கின்றார்.
தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேலும் அதிக சலுகை கொடுத்து, உள்ளநாட்டில் அதிகம் சுரண்டக் கோருவதே அவரின் பொருளாதாரக் கொள்கை. அதாவது செல்வத்தை மீளப் பெறுவதல்ல, செல்வத்தை மேலும் கொடுத்து அதில் நிரம்பி வழிவதைக் கொண்டு வறுமையை ஒழிப்பது பற்றி கனவை விதைக்கின்றார். இதன் மூலமே 'நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை" உருவாக்க முடியும் என்கின்றார்.
இப்படி சுரண்டம் மூலதனத்தின் அகோரப்பசி தீர்ப்பதன் மூலம், ஓபாமா தீர்வைத் தேட முனைகின்றார். சுரண்டிக் கொழுக்கும் எகாதிபத்தியமயமாக்கலை பாதுகாத்துக்கொண்டு, உலகை எமாற்ற முனைகின்றார். அவர் தோந்தெடுத்த பாதையோ, உலகத்தை தொடாந்தும் கொள்ளையடிக்கும் உலகமயமாதல்தான். அது அதில் ஒரு கரைகண்டுதான் அழியும். அது சலுகைகள் எல்லாவற்றை விழுங்கி எப்பமிட்டபடிதான், அழியும்.
இந்த அழிவை உழைக்கும் மக்கள் தம் செயலில் காட்டுவார்கள். உண்மையான மாற்றம், மக்களின் அதிகாரத்தில் தான் நிகழும்.
இதற்கு மாறாக ஓபாமாவால் மற்றத்தைக் கொண்டு வரமுடியாது. நீதியுடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க முடியாது. மக்களைச் சுரண்டிக் கொண்டு, இதை எற்படுத்தப் போவதாக கூறுவது நகைப்புக்குரியது.
மனித இனத்தைச் சுரண்டியே சுபிட்சத்தையும், நீதியையும், அமைதியையும் சிதைக்கின்ற, ஒரு வீங்கிய வெம்பிய வடிவம்தான் அமெரிக்கா. அமெரிக்கா என்பது சுரண்டம் வர்க்கத்தின் எடுப்பான சார்வாதிகாரம். அது பிரதிநித்துவம் செய்யும் சுதந்திரம், ஜனநாயகம் என்பது மூலதனத்தின் ஆன்மாவாகும். இதன் மோசடி நிறைந்த கடைக்கோடி பிரதிநிதிதான் ஓபாமா.
No comments:
Post a Comment